தலைப்பு

புதன், 22 ஜூலை, 2020

அன்பின் பாதையே தர்மத்தின் பாதை!


பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் போதனைகள் வெறும் வறட்டு தத்துவங்கள் அல்ல அவை வாழ்க்கையை திறக்கும் ஞானச் சாவிகள் என்பதை உணர்த்தும் பதிவு இதோ.. 

ஒரு சாதகன், சத்துவ குணத்தின் அடிப்படைத் தேவைகளான அமைதி, அன்பு, நிதானம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். அவனுடைய பிறவி குணமும் சமூக சூழலும் இதற்கு அவனுக்கு உதவினாலும், அவன் தானாக விடாமுயற்சியுடன் தனது வார்த்தையிலும் எண்ணத்திலும் செயலிலும் தூய்மை உருவாக பாடுபட வேண்டும். ஒருவரது வாழ்வில் வரும் ஏற்ற தாழ்வுகளை இறைவன் சித்தம் எனக் கொள்ளுதல் தவறு. அது விடாமுயற்சி எனும் பழக்கத்தை கைப்பற்றாததன் விளைவே.

பரந்த அன்பு, எண்ணத்தூய்மை, தியாக குணம் ஆகிய மூன்றும் தான் சாத்வீக குணங்கள். இவைதான் கவனிக்கப்பட வேண்டிய, ஆன்மீக வடிவின் முக்கிய அம்சங்கள். மனநலமும் ஆன்மீக மேம்பாடும் இந்த அம்சங்களைப் பொறுத்தே அமையும். “நான் புத்தனில் சரண் புகுந்தேன்” (புத்தம் சரணம் கச்சாமி) என்பது ஒளிபெற்ற அறிவின் அடிப்படையே. “நான் சங்கத்தில் சரண் புகுகிறேன்” (சங்கம் சரணம் கச்சாமி) என்பது, ஏற்கனவே அந்த சீரிய ஒளிபெற்ற அறிவை சங்கத்தின் பயனுக்காக அர்பணிக்க சித்தம் ஆதலாம். “தர்மத்தில் சரண் புகுகிறேன்” (தர்மம் சரணம் கச்சாமி) எனும்போது சாதகன் தன் வசம் உள்ளதை தருமத்தையும், நல்லவற்றையும் உறுதிப்படுத்தவும், மேம்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்பதாம். அன்பின் பாதையே தருமத்தின் பாதை. அன்பினால் சேவை மனப்பான்மை வளரும். அன்பு செலுத்துவதற்கு இறைவனைக் காட்டிலும் தகுதியானவன் வேறுயாருமில்லை. ஒவ்வொரு மனிதனுள்ளும் கடவுள் இருப்பதை உணர்ந்தால், ஒவ்வொரு மனிதனையும் நேசிக்க முடியும்.

ஒவ்வொருவரும் பிறவிகள் பல கண்டாகி விட்டது. எல்லாம் சுயநலத்தில் கழிந்தவையே. எனவே ஆங்காரத்தின் உந்துதல்கள் இன்னும் அவனை ஆட்படுத்திக் கொண்டே இருக்கும். அது அன்பை மலரவும், தழைக்கவும் அனுமதிக்காது. ஆண்டவன் மனிதனில் விழைவது அன்பையும், நெறியையும்தான். அன்பு நெறிப்படுத்தப்பட வேண்டும். நெறியின்றி அன்பு பரவ இயலாது. இல்லையேல் அது குறுகி வளைந்து போய்விடும். ஒன்று நல்லது மற்றது தீயது.

ஆதாரம்: Sathya Sai Speaks Volume 17


🌻 பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் பாதை வழி நடப்பது என்பது அவரது சத்ய வார்த்தை வழி நடப்பதே.. அப்படி நடக்காதவர்கள் யாரும் சத்ய சாயி பக்தர்கள் இல்லை என்பதை உணர்ந்து அவரின் வாக்கியத்தையே நாம் நமது வாழ்க்கையாக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக