தலைப்பு

ஞாயிறு, 26 ஜூலை, 2020

திருமலையில் பக்தருடன் மலையேறிய சாயி வேங்கடவன்!


பக்தரின் அழையா விருந்தாளியாக உடன் வருவது என்றும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே... அழைக்காமல் வரும் சத்ய சாயி மாதா தினம் அலுக்காமல் பாதுகாப்பை வழங்கும் அவரே திருமலையிலும்.. கயிலையிலும் வீற்றிருக்கும் பரிபூரண பரம்பொருள்.. சாயி கருணை கால் கடுக்க கல்மலையிலும் நம் கூட வரும் என்பதை விவரிக்கும் ஆச்சர்ய பதிவு இதோ...

திரு T.A. சுப்ரமண்யம் அவர்கள் அடிக்கடி மாற்றல் ஆகும் படியான ஒரு வேலையில் இருந்தார். இதற்காக குடும்பத்தை திருப்பதியில் குடித்தனம் வைத்திருந்தார். 1967 புயலின் போது அவருக்கு மெட்ராஸ் போக வேண்டும். மறு நாள் லீவு என்பதால் திருப்பதிக்குச் சென்று விட்டார். இரவு 8 மணிக்கு, மனைவி சொல்லியும் கேட்காமல் நடந்தே மழை தூறிக் கொண்டு இருந்த பொழுதே கிளம்பிவிட்டார். கோவிலுக்குச் செல்லும் வழியில் அவரது மாமனாரின் வீட்டைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது,  மழை வலுக்க ஆரம்பித்ததால் மாமனாரும் தடுத்துப் பார்த்தார்; கேட்கவில்லை! இன்னும் தீவிரமாகி விட்டார். முடிந்த வரை வெகு சீக்கிரம் தரிசனம் செய்து விட வேண்டும் என்று சுப்ரமண்யம் நினைத்தார்!  காளி கோபுரம் நெருங்கிய பொழுது இடியும் மழையும் தீவிரமடைந்து விட்டது, ஆனால் அவர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார். அவர் அடுத்த வளைவை (arch) நெருங்கும் பொழுது பயங்கரமான சத்தத்துடன் இடி விழந்தே விட்டது. முதல் முறையாக திரும்பிச் சென்று விடுவோமா, தொடர்ந்து செல்வோமா என்று குழம்பினார்.


அப்பொழுது ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார்,“ நேரம் கெட்ட நேரத்தில் கொட்டும் மழையில் ஏன் நிற்கிறீர்கள்“ என வினவினார். ஆர்ச்சுகளின் மேல் பகுதி விழுந்திருப்பதைக் பார்த்து, அவர் நாம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக முன்னேறிச் செல்வோம் என்றார். அவர் ஞானப்ரகாஸம் என்ற கிருஸ்தவர் என்றும், ஒவ்வொரு அமாவாஸை இரவிலும் நடந்து மலை ஏறும் வழக்கம் உள்ளவர் என்றும் சொன்னார். சுப்ரமண்யத்திற்கு  ஆச்சரியம்!.

அந்த மனிதன் தனக்கும் தன் மனைவிக்கும் ஏதோ கருத்து வேறுபாடு என்றும், பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சொன்னார். அவரது நண்பர் வேலு என்பவர், 12 அமாவாஸை இரவுகள் மலை ஏறினால் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழலாம் என்று சொன்னதாக் கூறினார். 11 தடவைகள் முடிந்து விட்டதாகவும், இது 12வது தடவை என்றும் சொன்னார். தனக்கு கிடைத்த இந்த புதிய நண்பரால் மகிழ்ச்சி அடைந்து, சுப்பரமண்யம் உற்சாகத்தோடு நடக்க ஆரம்பித்தார். திருமலை 3 மணிக்கு விடியற்காலம் சென்று அடைந்தனர். இருட்டாகவும், குளிராகவும் இருந்தது பஸ் ஸ்டான்டின் அருகில் கடைசி வளைவின் அருகில் சிலர் காபி விற்றுக் கொண்டிருந்தனர். சுப்ரமண்யம் அந்த மனிதரை சற்று இருங்கள் எனச் சொல்லி, சென்று 2 காபி கேட்டார். ஆனால் 1 கப் காபி தான் கிடைத்தது, சுப்பிரமண்யம் அதை வாங்கிக் கொண்டு அந்த புதிய மனிதரை நின்ற இடத்தை நோக்கி வந்தார். அவரைக் காணவில்லை காபி விற்பவரிடம்,“என்னுடன் வந்த மனிதர் இங்கு நின்று கொண்டிருந்தாரே பார்த்தீர்களா?“ என வினவ, காபி விற்பவர், திகைப்புடன் நீங்கள் ஒருவர் தானே வந்தீர்கள் என்றார்.


குழப்பத்துடனேயே தீபாவளி விடியலில் கோவில் சென்று இறைவனை நல்ல நாளில் தரிசனம் செய்து, உடனே திரும்ப கீழே இறங்க ஆரம்பித்தார். வீட்டை அடைந்ததும் மொத்த கதையையும் மனைவியிடம் விவரித்தார். திருமலை சென்று அடைந்ததும் அவர் எப்படி மறைந்தார் என்று தெரியவில்லை! அவரது மனைவி தான் முதலில் புரிந்து கொண்டார். கூடவே உங்களுக்கு துணையாக வந்தது பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி தான் என்று!! சுப்ரமண்யம் அவர்களின் நம்பிக்கைக்கும் எளிமைக்கும் பாபா அனுக்ரஹித்திருக்கிறார்.

ஆதாரம்: Sri Sathya Sai Miracles & Spirituality By – Mrs. Sarojini Palanivelu P.5
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.


🌻 நொடிப்பொழுதும் இறைவன் சத்ய சாயியே கவனிக்கிறார்.. கண்காணிக்கிறார்..  கூட வருகிறார்.. இதை பக்தர்கள் உணர்கிறார்களோ இல்லையோ.. கடவுள் சத்ய சாயியின் பெருங்கருணை கலியுகத்திலும் கலி முடிந்தும் பேரன்புடன் மிகப் பிரேமையுடன் தொடரவே செய்யும்! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக