தலைப்பு

செவ்வாய், 14 ஜூலை, 2020

பிறர் குற்றங்காண்பதில் மனதை தொலைக்காதீர்!


பிறர் என்பதிலிருந்து நம் என்பதை நோக்கி உள்ளே நகர்த்துவதே ஆன்மீகம். அதையே இறைவன் சத்ய சாயி கீழ்காணும் சாயி கீதையில் உரைக்கிறார்

ஒவ்வொருவரும் உட்கொள்ளும் அளவிலும் வடிவிலும் இறைவன் அவர்கள் முன் தோன்றுகிறான். கடவுளினின்றும் வேறுபட்டு உணர்வது, படைப்பும் காத்தலும் பற்றிய எண்ணங்கள் எல்லாம் மெச்சத்தகுந்தவையே.
அந்த சிந்தைகளை வளர்ப்பதன் மூலம் இதயத்தை சுத்தம் செய்யலாம். பிறரது தவறுகளைப்பற்றி எண்ண மனதிற்கு இடம் தராதீர்கள். அதனால் மனம் கறைப்படும். பிறரது மேன்மையிலும், நன்மையிலும் மனதை நிறுத்துங்கள். அது புனிதமடையும்.


உணர்ச்சிவசப்பட்ட நிலைகளில் பிறரை தூற்றுவதும், அவர்களுக்கு தீமை நினைப்பதும், அவர்களுடைய இன்னல் கண்டு மகிழ்ச்சியுறுவதும் செய்வீர்கள் என்பதை அறிவேன். அப்படிப்பட்ட இழி சிந்தைகள் உங்களுள் வளர்ந்து அடர்த்தியாகி உங்களுக்கு சொல்லவொண்ணா துயரத்தையும் துன்பத்தையும் ஈட்டித்தரும். பிறரை பற்றி ஏன் கவலை கொள்கிறீர்கள்? பிடித்திருந்தால் பேசுங்கள். இல்லையேல் அவர்களை சும்மா விட்டு விடுங்கள். அவர்கள் பிழைகளை தோண்டித் துருவி விமர்சிப்பானேன்? இவ்வாறு செய்வது ஆன்மீக வீழ்ச்சி உண்டாக்குவதாம். இப்படிப்பட்டவர்கள், தாங்கள் அதுவரை ஜபத்தாலோ பூஜையாலோ, தியானத்தாலோ, தரிசனத்தாலோ கூட சேர்த்து வைத்துள்ள அத்தனை இறையருளையும் இழந்து விடுகின்றனர். அத்தனை சாதனைகளுக்குப் பிறகும், புனித நீரில் நனைத்தாலும் கசப்பு விலகாத பாகற்காய் போல், வாழ்விலும் கசப்பானவர்களாகவே இருப்பார்கள்.

-இறைவன் ஸ்ரீ சத்ய சாயி, 29.2.84
பிரசாந்தி நிலையம். 

🌻 தீமையைத் தடுத்து நன்மையைக் கொடுத்து நானிலத்தை நன்னெறியில் நனைப்பதே கடவுள் சத்ய சாயியின் கருணை மழை.. அம்மழையிலேயே கரைந்து காணாமல் போகும் அத்தனை மனிதப் பிழையும்... 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக