தலைப்பு

வெள்ளி, 10 ஜூலை, 2020

உலக புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் A.V ஸ்ரீனிவாசன் அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


"என்னிடம் வரும் நோயாளிகளுக்கு நான் வெறும் சிகிச்சை மட்டும் தான் பார்க்கிறேன். பாபாதான் அவர்களை கவனித்து குணப்படுத்துகிறார்."

 -Dr. A.V Srinivasan 
M.D, D.M in Neurology, PhD in Neurology, DSC, FRCP(London), F.I.A.N, F.A.A.N.

டாக்டர் A.V சீனிவாசன் அவர்கள் சுவாமியின் மேல் மிகுந்த பக்தி கொண்ட அன்பர்.  தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து வாழ்பவர்.  சுவாமியின் சேவை தத்துவத்தை கடைபிடிக்கும் விதமாக பல ஆண்டுகளாக தன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக ஒவ்வொரு வியாழனும் நாராயண சேவை மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார் இந்த தீவிர சத்ய சாயி பக்தர். நோயாளிகளுக்கான சேவைதான் நாயகன் சாயிக்கான சேவை என்பதை நன்கு புரிந்தவர்.


தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவம் பல்கலைக் கழகத்தின் எமிரிட்டஸ் பேராசிரியராக உள்ள டாக்டர் சீனிவாசன், அரசுப் பதவியில் இருந்தபோதே இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் ஃபெலோஷிப்புகளைப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், 2001-ம் ஆண்டு அமெரிக்க நரம்பியல் அகாடமியின் ஆண்டுக் கூட்டத்தில் AINA விருது பெற்ற ஒரே இந்திய மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மேலும் இவர் இந்திய நரம்பியல் அகாடமியின் தேர்வுநிலைத் தலைவராகவும் இருந்திருக்கிறார். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதல் பி.ஹெச்டி வரை மருத்துவ மேற்படிப்புகளை முடித்து அதே கல்லூரியில் நரம்பியல் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி 2008-ல் ஓய்வு பெற்றவர் டாக்டர் சீனிவாசன். அவருக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் கவுரவ DSc பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது.

நன்றி: சரஸ்வதி வெங்கட், புட்டபர்த்தி. 



மொத்தம் இரண்டு பாகங்கள்
Source: ரேடியோ சாய் (RST 209 & 210)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: மே 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக