தலைப்பு

வியாழன், 16 ஜூலை, 2020

சத்ய சாயி பாபாவின் மொழிப்புலமையை சந்தேகித்த கென்யா நாட்டு இளைஞர்!


ஈரேழு உலகையும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தையும் படைத்து பரிபாலனம் செய்யும் இறைவன் சத்ய சாயிக்கு மொழி என்பது ஒரு தடையே இல்லை.. எல்லா மொழியும்.. மொழிப் புலமையும் ... அதன் வழி மனிதன் உறவாடும் உள்ளாற்றலும் அவரே ஆகையால் மொழி ஒரு சுவரில்லை அவருக்கு..
எல்லா மொழிகளை விடவும் இறைவன் சத்ய சாயி விரும்புவது மனிதனின் இதய மொழியே!

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை தரிசிக்க, வெளிநாடுகளிலிருந்து ஆங்கிலம் தெரியாமல் வரும் அன்பர்களிடம் பகவான் அவர்களின் தாய் மொழிகளிலே தான் உரையாற்றுவார். உதாரணத்திற்கு ஜெர்மனியில் இருந்து வரும் அன்பர்களிடம் ஜெர்மானிய மொழியிலும், ஜப்பானிலிருந்து வரும் அன்பர்களிடம் ஜப்பானிய மொழியிலும்  உரையாற்றுவார். 1975 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் பாபாவை தரிசிக்க கென்யாவிலிருந்து 8 பேர் கொண்ட அன்பர்கள் குழு புட்டபர்த்திக்கு வந்தார்கள். அவர்கள் வந்த இரண்டாவது நாளே அந்த குழுவில் ஒமண்டி என்ற ஒரு இளைஞரை மட்டும் பாபா நேர்காணலுக்கு அழைத்தார். அந்த இளைஞருக்கு ஆழ்மனதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. சந்தேகம் என்னவென்றால் சாய்பாபாவுக்கு அனைத்து மொழிகளும் தெரியும் என்று சொல்கிறார்களே, அது எப்படி சாத்தியம். உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றது அத்தனை மொழிகளும் பாபாவுக்கு எப்படி தெரியும். அப்படி பாபாவுக்கு தெரியும் என்றால் என்னுடைய தாய்மொழியான சுவாகிலி  மொழியில் பாபா என்னிடம் உரையாற்றினால் மட்டும்தான் நான் நம்புகிறேன் என்று அவருடன் வந்த நண்பரிடம் இதை தெரிவித்திருந்தார். பொதுவாக சுவாகிலி மொழி சோமாலியா பகுதிகளில் பேசப்படும் மொழியாகும்.

பின்பு கென்யா நாட்டு அன்பர் நேர்காணல் அறைக்கு சென்றார். அவர் சென்ற உடனே பாபா 'எப்படி இருக்க ஒமண்டி?  உன்னுடைய அம்மா கடந்த மாதம் கீழே விழுந்தார்களே கால் இப்போது பரவாயில்லையா?' என்று  அவரின் தாய்மொழியான சுவாகிலி மொழியில் கேட்டார் பாபா. கேட்ட உடனே ஒமண்டி கண்கலங்கி பகவானின் பாதத்தை வணங்கி மன்னிப்பு கேட்டார்.  

அதற்கு பகவான் 'ஒமண்டி இந்த உலகத்தை படைத்தவனே நான் அப்படி இருக்கும்போது மொழியெல்லாம் பெரிய விஷயமா' என்று பதிலுரைத்தாா்.

ஆதாரம்: பிரசாந்தி ரிப்போர்ட்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக