தலைப்பு

வியாழன், 30 ஜூலை, 2020

புட்டபர்த்தி இரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய 'லிப்ட்' துவக்கம்!


பகவானின் பெரும் கருணையால், இன்று (30.07.2020) காலை புட்டபர்த்தி இரயில் நிலையத்தில் (ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலையம்) பயணிகளின் உபயோகத்திற்காக புதிய பளுதூக்கிகள் (lift) துவக்கி வைக்கப்பட்டன. 

பக்தர்களுக்காகவே பகவான் என்பதை ஸ்வாமி அடிக்கடி கூறியதை நினைவு கொள்ளும் வகையில், பர்த்தி ஶ்ரீ சத்யசாயி ப்ரசாந்திநிலையம் ரயில்வே ஸ்டேஷனில், வயதான, மூட்டுவலியால் படியேறி இறங்கமுடியாத பக்தர்களுக்காகவும், பொது ஜனங்கள் உபயோக வசதிக்காகவும், இரண்டு (02) புதிய லிப்டுகள் - Lifts (1 வது, மற்றும் 2, 3 வது பிளாட்பாரங்களுக்கு  செல்ல )
ஶ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளையால் நிறுவப்பட்டு இன்று காலை(30.07.2020) ஒரு சிறிய பஜனையுடன் நமது அறக்கட்டளை நிர்வாக ட்ரஸ்டி திரு.J. ரத்னாகர் சாய்ராம் அவர்களால் ரயில்வே உபயோகத்திற்க்காக அர்ப்பணிக்கப்பட்டது.

முக்கிய அம்சமாக, ரயில்வேயின் உயர் பொறுப்பு அதிகாரிகள் பலர் இவ்விழாவில்  கலந்து கொண்ட போதிலும், கடைநிலை ஊழியரான ஒரு ரயில்வே துப்புரவு தொழிலாளியுடன் சேர்ந்து ட்ரஸ்டி திரு.ரத்னாகர் சாய்ராம் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறப்பு விழா செய்தது, கொராணாவா ? பயப்பட தேவையில்லை, பகவானின் கருணா‼️நம்மை வழி நடத்தி செல்லும் என்பதை கலந்து கொண்ட அனைவர்க்கும் உணர்த்தியதோடு, பகவானின் அறக்கட்டளையில், ஏழை ,எளிய நலிந்தோர்க்கே முதலிடம் என்கிற சேவையின் தாரக மந்திரமும் நிரூபணமானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக