தலைப்பு

வியாழன், 9 ஜூலை, 2020

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை!


சுவாமியின் முன்னாள் மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம்:

“திக்கற்றவர்க்கு தெய்வமே துணை” என்பார் சுவாமி.  மனிதன் தன்னிடம் ஒன்றும் இல்லாத நிலையில் இறைவன் பக்கம் திரும்புகிறான், அவனுக்கு எல்லாம் கிடைக்கிறது. பிருந்தாவன் வளாகத்தில் ஸ்ரீ சத்ய சாயி உயர் கல்வி நிலையத்தில் படித்து வந்த ஒரு மாணவன் இந்த உண்மையை தன் வாழ்நாளில் உணர்ந்திருக்கிறார். 

இந்த மாணவன் வடகிழக்கு இந்தியாவை சேர்ந்தவன், தனது சக மாணவனை அணுகினான்,  அவனுக்கு தன் வீட்டிற்குச் செல்ல பணம் இல்லாததால் உதவி கேட்டான், அந்த நண்பனிடமும் மிகக் குறைந்த அளவே பணம் இருந்ததால் அவனாலும் உதவ முடியவில்லை.  சுவாமியிடம் வேண்டிக்கொள்ளச் சொல்லி அறிவுரை சொன்னான்.  அன்று மாலை மாணவர்கள் த்ரை ப்ருந்தாவனில், தர்சனுக்காக ஒருவர் பின் ஒருவர் அமர வைக்கப்பட்டனர்.  இவ்விரு மாணவர்களும் அருகருகில் அமர்ந்து இருந்தனர், சுவாமி மெதுவே நடந்து வந்தார். சுவாமி தன் கையில் ஒரு கவர் வைத்திருந்தார், இவனுக்கு அருகே சுவாமி வந்ததும், அந்த பையனின் கடிதத்தை பெற்றுக் கொண்டு, தன் கையில் இருந்த கவரை இவன் கைகளுக்குள் நழுவ விட்டார்! மற்ற மாணவர்கள் கவனிக்கவில்லை, ஆனால் இவனுக்குப் பின்புறம் அமர்ந்த மாணவன் கவனித்து விட்டான்.

இருவரும் ஹாஸ்டலை சென்று அடைந்ததும், தனக்கு சுவாமி தேவையான தொகையை தந்து விட்டதை கூறினான்.  இந்த நண்பனுக்கு, இவன் எப்படி வேண்டிக் கொண்டான் என்று தெரிந்து கொள்ள ஆவல்!  தான் வேண்டிக் கொள்ளவே இல்லை என்றும், கோரிக்கையை கடிதத்தில் எழுதி வைத்திருந்ததாகவும், ஸ்வாமி கடிதத்தை வாங்கிக்கொண்டு பணக்கவரை ஒப்படைத்ததாகவும் கூறினான்!

🌻 இது தான் சுவாமியின் ஆழமான அன்பின் அடையாளம்! நமக்கு உதவ யாருமே இல்லாத பொழுது, நினைவு கொள்ளுங்கள்! ஸ்வாமி நம்மருகில் இருப்பார். 🌻

ஆதாரம்: SAI SPARSHAN, P181
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக