தலைப்பு

ஞாயிறு, 5 ஜூலை, 2020

இறைவன் இருக்கிறார்! - பரிபூரணனின் குருபூர்ணிமை உரைத்துளி -5


இந்த மந்திரம் ஒன்றே போதுமானது:
மகான்கள் இறைவன் பெயரை மந்திரமாய் அளிப்பர்.ஆனால் இறைவனோ எதை மந்திரமாய் அளிக்கிறார் என்பதை விவரிக்கும் பதிவு இது... 

இந்த குரு பூர்ணிமா தினத்தன்று உங்களுக்கு நான் எந்த ஒரு அஷ்டாக்ஷரியினையோ (எட்டெழுத்து) அல்லது பஞ்சாட்சரியினையோ (ஐந்தெழுத்து) மந்திரமாக எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் நாமத்தையோ அடிப்படையாகக் கொண்டு, வழங்கிட எண்ணவில்லை. அதே போன்று எந்த உபநிடதமோ அல்லது கீதையோ அல்லது பிரம்ம சூத்திரங்களோ நீங்கள் கற்றிட வேண்டும் என நான் வலியுறுத்தவில்லை. எளிதான ஐந்தெழுத்து உச்சரிப்பு ஒன்று தெலுங்கில் உள்ளது. ‘தேவுடு உன்னாடு’ (இறைவன் இருக்கிறார்). இதனை விடாது நீங்கள் ஜபித்து வந்தால், அதனையே சிந்தனையாக மற்றவர்களுக்கு தெரிவித்து வந்தால், உலக நல்வாழ்விற்கு நீங்கள் பெரிய அளவில் பங்கேற்றதாக கருத இயலும்.

இந்த குரு பூர்ணிமாவின் செய்தியாக இந்த மந்திரத்தைக் கருதி, அனைத்து சூழல்களிலும், அனைத்து இடங்களிலும், முழு உறுதி மற்றும் வலிமையுடன் இதனை எடுத்துரையுங்கள். இறைவன் மீதான உங்களுடைய நம்பிக்கையினை வலுப்படுத்தி, உங்களது செயல்களில் அதனை எடுத்துரைக்கும் போது, உலகமே பூலோக ஸ்வர்கமாக மாற்றம் கொள்ளும்.

எவ்வகையான சிக்கல்களையும், இன்னல்களையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும், தீர்மனத்தையும் நீங்கள் கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தினை பரப்புவதன் மூலம் இறைவன் மீதான அன்பு மற்றும் பாபத்திற்கு அஞ்சுதல் (தெய்வ ப்ரீதி, பாப பீதி) ஆகியவற்றை நீங்கள் மக்களிடையே பரப்பிட இயலும். ‘இறைவன் இருக்கிறார்’ எனும் மந்திரம், ஒரு குறிப்பிட்ட தெய்வ நாமத்தின் அடிப்படையில் உள்ள மந்திரத்தை விட அதிக வலிமை கொண்டது. மேலும், எந்த ஒரு மந்திரத்தையும் ஜபிப்பது சிறிதளவு பயனையே தரும். மந்திரம் அல்லது யந்திரத்தின் வலிமையைவிட தூய இதயத்தின் (சித்த சுத்தி) வலிமை அதிக அளவிலானது. உங்கள் நம்பிக்கை தெய்வத்தின் இருப்பிடமான தூய இதயத்தில் இருந்து எழ வேண்டும்.”

- பகவான் பாபா, (குரு பூர்ணிமை, 21.07.1986)

🌻 இறைவன் இருக்கிறான் என இறைவனே அளித்த மந்திரம் மிகவும் சக்திவாய்ந்தது.. இறைவன் சத்ய சாயியின் இருப்பை கணம் தோறும் உணர்த்துவது. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக