தலைப்பு

திங்கள், 20 ஜூலை, 2020

தன்னை வெறுப்பவரையும் தொழ வைத்த சாயி தெய்வம்!


யார் இறைவன் சத்ய சாயியை அதிகமாக வெறுக்கிறார்களோ அவர்களே அவரின் காலடியில் விரைவில் விழப்போகிறார்கள் என அர்த்தம்.
இறைவன் சத்ய சாயிக்கு எது மீதும்.. எவர் மீதும்  வெறுப்பும் இல்லை.. அவருக்கு எதிரிகளே இல்லை.. 
கடிந்து கொள்பவரை சம்ஹாரம் செய்யாமல் ஆரத்தழுவி அரவணைக்கும் ஒரே பரம்பொருள் சத்ய சாயியே என்பதன் பரவசப் பதிவிதோ...

பாலக்காட்டில் ஒருவர் பாபாவின் மேல் நம்பிக்கையற்றவராக இருந்தார். அவரது மருமகள்(daughter-in-law) பாபாவின் மேல் பக்தி உள்ளவள். அவள் ஸாயி பாபாவின் படம் ஒன்றை மாட்டி வைத்திருந்தாள். அதை பூஜை அறையில் இருந்து, அகற்ற முயற்சி செய்தும், அவரால் முடிய வில்லை! ஏனெனில் படம் சுவற்றோடு ஒட்டிக் கொண்டுவிட்டது. உடனே விபூதியும், தேனும் படத்தில் இருந்து வர ஆரம்பித்து விட்டது!  இந்த தெய்வீக நிகழ்வால் ஆச்சரியப்படலானார். அதோடு அவருக்கு நம்பிக்கையும் வந்து விட்டது. அவர் பட்டாபியை அழைத்து பாபாவைப் பற்றிப் பேசுமாறு அழைத்தார்.

 பட்டாபி நின்ற இடத்தில் இருந்து, பேச வேண்டிய  இடத்தை அடையும் வழியில் விபூதியால் காலடித் தடங்கள்  தோன்றி இருந்தன. இது பகவான் இருப்பதை உறுதி செய்தது. அங்கு குழுமியிருந்த மக்கள் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தனர்! எனவே அவ்வீட்டில் தொடர்ந்து பஜனைகள் நடத்தப்பட்டன. (பாபாவையே மறுத்த ஒருவர் வீட்டில் இந்த அதிசயம் !!!)
                                                                             
ஆதாரம்: R பாலபட்டாபி | Nectarine leelas of Bhagawan Sri Sathya Sai Baba P -112
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 இங்கு யாவரும்.. யாவையும் இறைவன் சத்யசாயியின் குழந்தைகளே.. பிள்ளைகள் கோபம் கொண்டு தூற்றினால் தாய் வெறுப்பாளா..
ஒரே நிரந்தர சத்ய தாயான சத்ய சாயியின் பேரன்பே பூமியில் நிஜம்.. அதுவே வெறுப்பவரையும் உணர வைக்கிறது.. உணர வைத்து பக்தியில் உருக வைக்கிறது... 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக