தலைப்பு

வியாழன், 2 ஜூலை, 2020

மனிதனுக்கு இடப்பட்ட ஐந்து தருமங்கள் (கடமைகள்)


இறைவன் சத்ய சாயி கண்ணன் மனிதர்களை கடமையாற்றும் போது ஒரு கருவியாக மட்டும் இயங்கச் சொல்லி .. பலன்களையும் சேர்த்து அவரிடம் சமர்ப்பிக்கச் சொல்கிறார் அல்லவா.. அப்பேர்ப்பட்ட கடமைகள் எனும் அடிப்படை தர்மங்கள் விவரிக்கப்படுகிறது இதோ...

மனிதனுக்கு ஐந்து தருமங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று குலதருமம். இன்னொன்று தேசதருமம். மூன்றாவது மததருமம் அல்லது சமய தருமம். நான்காவது கனதருமம் அல்லது சமுதாய தருமம். ஐந்தாவது ஆபத்தருமம் அல்லது ஆபத்தில் இருக்கையில் செய்ய வேண்டுவது.

இந்த ஐந்துமே ஒருவனது இகவாழ்வில் செய்ய வேண்டிய கடன்களே அன்றி பர வாழ்விற்கானதல்ல. இவை ஒவ்வொன்றிலும் தவறுவதற்கான தண்டனைகள் உண்டு. இந்த தண்டனைகள் இன்றி உலக வாழ்வு இயங்காது. இந்த தண்டனைகள் தேவையற்றவை என கருதக்கூடாது. மாறாக அது ஒருவரின் திருத்தத்திற்கான முறை என்றே கொள்ள வேண்டும். இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே மனிதன் பெரும் சிகரங்களை வாழ்வில் அடைய முடியும்.

கட்டுப்பாடு என்பது குதிரைக்கு இடப்பட்ட கடிவாளம் போன்றது. யானைக்கு குத்தியுணர்த்தும் கோல் போன்றது. கட்டுப்பாடுகளும் அவற்றை மீறுகையில் தண்டனைகளும் இன்றி மனிதனின் தவறுகளை திருத்த இயலாது.

தமிழகத்தில் உள்ள சாயி பக்தர்கள் தங்களது வாழ்வின் பாதையை மாற்றி அமைக்கும் அதே வேளையில் தம்மைச்சுற்றி உள்ளவர்களின் வாழ்வையும் சீராக்குவதை பார்த்து, மற்ற பக்தர்களும் தம்மால் பிறரது வாழ்வு சிறக்க என்ன செய்ய முடியும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். பகவானிடம் பலர் பல்லாண்டுகளாக வருகிறார்கள். அவர்கள் தங்கள் குணத்தையும் நடத்தையையும் எந்த அளவு மேன்மை செய்து கொண்டோம் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்த அளவுக்கு அவர்கள் விருப்பத்தகாத பழக்க வழக்கங்களை கை விட்டார்கள்? என்ன என்ன நல்ல பழக்கங்களை கற்றுள்ளனர்? எந்த அளவு பகவானின் போதனைகளுக்கு உட்பட்டு நடக்கின்றனர்? எந்த அளவு ஆசிரம விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றனர்? இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் பக்தரின் நன்மைக்காகவே. வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் தங்களுக்கு வழங்கப்படும் விதிமுறைகளை மிகத்துல்லியமாய் கடைபிடிக்கின்றனர்.

-பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா | 9.2.84 பிரசாந்தி நிலையம்

🌻 இறைவன் சத்ய சாயி மனித மனங்களை திருத்துபவரே தவிர வருத்துபவர் அல்லர். யாவும் நன்மைக்காகவே நம் வாழ்வில் இறைவன் சத்ய சாயி நடத்துகின்ற நிகழ்வுகள் எல்லாம்... 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக