தலைப்பு

வெள்ளி, 17 ஜூலை, 2020

ஓய்வளித்து நோயை ஓடச் செய்த மருத்துவ சாயி!


இறைவன் சத்ய சாயியே யாராருக்கு என்னென்ன சிகிச்சை தர வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பவர். அவரே சிரஞ்சீவ இறைவன்.. அவரின் ஒவ்வொரு அசைவுமே சஞ்சீவினி மூலிகை...

பகவான் ஒரு முறை, மிகவும் ஆரோக்கியமாக தோன்றிய 30 வயது தாண்டிய இளைஞனுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யுமாறு  Dr.  சௌத்ரிவொபேடியை கேட்டுக் கொண்டார். இப்பொழுது கார்டியாலிஜிஸ்டுகளையும், Dr.சௌத்ரியையும் ஒரு வயதான நீரிழிவு நோயாளியான ஒரு மருத்துவரை ICU வில் வைத்து டெஸ்டுகள் எடுக்குமாறு கூறினார். ஆம் சுவாமி சொன்னபடியே பரிசோதனையின் முடிவில் அவருக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
   
மறுநாள் பகவான், அந்த நோயாளிக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று அறிய விரும்பினார், Dr.  சௌத்ரியிடம் வந்தார். Dr. சௌத்ரிக்கு பகவான் என்ன கூறப் போகிறாரோ என்று பதட்டமாக இருந்தது. பகவான், “அந்த நோயாளிக்கு ஒரு கோளாறும் இல்லை ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்,  அவர் அதிகமாக உழைத்திருக்கிறார் ஆகவே அவருக்கு ஓய்வே போதுமானது. அவரை டிஸ்சார்ஜ் செய்யுங்கள்” என்றார்! அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.   சமீபத்தில் அந்த நபரை மிகவும் ஆரோக்யமாக இருப்பதை Dr.  சௌத்ரி பார்த்தார்!                                                                                                               
ஆதாரம்: My Holyman is Avatar Bhagawan Sri Sathya Sai Baba [Dr. Choudary Voleti] P 64
தமிழாக்கம்: திருமதி ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 நோய் நாடி .. நோய் முதல் நாடி என்பது தமிழ் மூதுரை. அந்த அருந்தமிழே இறைவன் சத்ய சாயி அல்லவா... ஆகவே தான் அவர் அளிக்கும் சிகிச்சை எல்லாம் சிலப்பதிகாரமாய் சிறப்பதிகாரம் எழுதுகிறது. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக