இதய தாகம் அறிந்து இறங்கிய இறைவன் சத்ய சாயி தண்ணீர் தாகம் அறிந்து எவ்வாறு இரங்கினார் என்பதற்கான அற்புதப் பதிவு இதோ...
1980இல் பிரசாந்தி நிலையக் கல்லூரி... ஹாஸ்டல். என நிறைய வந்ததும், தண்ணீர் பற்றாக்குறை வந்துவிட்டது. சித்ராவதி நதியின் கரையில் இன்னும் ஆழ்துளை கிணறுகள் அமைக்க திட்டம் போடப்பட்டது. (Borewells) திருப்பதியிலிருந்து நிபுணர்கள் வந்து சில இடங்களை போர்வெல்(Borewell) தோன்றுவதற்காக குறியிட்டு வைத்தனர். குடும்பாராவ் இவ் விஷயத்தை சுவாமியுடன் கூற, ஸ்வாமி அவ்விடத்திற்கு வந்தார். சில கூழாங்கற்களை பொறுக்கி எடுத்து, தூக்கி வீசி எறிந்து, "கூழாங்கற்கள் எங்கு போய் விழுந்தனவோ அங்கு தோண்டுங்கள் என்று கூறியபடி...
அந்தக் கற்களை வீசி எறிந்தார்..
எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறது கடவுள் கரம் பட்ட அந்தக் கற்கள்..
அகலிகைக் கல்லாய் இந்த அவசரத் கற்களும் பரவசக் கற்களாய் பூமிக்குள் இருக்கும் அமுத நீரை அள்ளித் தர குதித்து விழுந்தன..
அதன்படி அங்கெல்லாம் தோண்டி உறைகிணறு இறக்கியதில், அங்கெல்லாம் சுவையான தரமான அதிக நீர் கிடைத்தது. நிபுணர்களும் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெகு அதிகமாகவே நீரின் தரம் அமைந்துள்ளது என்றனர்.
ஆதாரம்: சத்யம் ,சிவம், சுந்தரம் Vol 6 P.185.
🌻 விண் நீரையே உருவாக்கும் இறைவன் சத்ய சாயிக்கு பூமியில் ஓடும் தண்ணீரை உருவாக்குவதொன்றும் கடினமான செயலே அல்ல..
மனித மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் எண்ணங்களை மட்டுமல்ல மண்ணின் அடி ஆழத்தில் இருக்கும் தண்ணீரையும் இறைவன் சத்ய சாயி மட்டுமே கண்டுபிடித்து புரிந்துணர்ந்து அருள் பாலிக்கிறார். 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக