தலைப்பு

வியாழன், 4 ஜூன், 2020

உனது வாழ்வே பாரதப்போர்!


தர்ம வழி எப்படி வாழ வேண்டும் என்பதை இதிகாசம் வழி உணர்த்துகிறார் இறைவன் ஸ்ரீ சத்யசாயி இதோ.. 

உமது வாழ்வின் விளையாட்டுகளை பாரதப்போருடன் ஒப்பிடலாம். ஒருபுறம் கௌரவர்கள் எனும் தீமையின் படைகள். மறுபுறம் பாண்டவர் எனும் நன்மையின் சேனைகள். அவர்கள் வாழ்வு எனும் விளையாட்டை கால்பந்தாக்கி விளையாடினார்கள்.

போர் முடியும் வரை தர்ம வழியில் செல்லும் பாண்டவர் பக்கமே கிருஷ்ணன் இருந்தான். தீமையின் சின்னமாம் கௌரவர் படை நாயகர்கள் ஒவ்வொருவராய் வீழ்ந்தனர். ஆனால் முற்றிலுமாய் கண்ணனிடம் சரண் புகுந்த பாண்டவர்கள் இறுதியில் வென்றனர். இந்தப்போர் தீய சக்திகளான போட்டி, பொறாமை, அகந்தை , ஆசை, விரோத மனப்பான்மை ஆகியவற்றிற்கும் நன்மையின் வடிவங்களான பொறுமை, உண்மை, நேர்மை, அகிம்சை, அன்பு ஆகியவற்றிற்கும் இடையே நடந்ததாகக் கொள்ளலாம்.உடல் ஒரு போர்க்களம். நன்மையின் இருப்பிடம் ஒரு அணியின் தலைவன். இன்னொரு அணியின் தலைவன் தீயனவற்றின் உறைவிடம். அழிகின்ற உலகின் ஆசைகளுக்கு எப்போதும் அழிவும் தோல்வியும்தான். மாற்றமில்லா உண்மையை நாடுவோர்க்கு எப்போதும் வெற்றியும் இன்பமுமே.

திருதராட்டினன் மனைவியும் கௌரவர்களின் அன்னையுமான காந்தாரியும், சகுனியும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்தான். எனினும் காந்தாரி ஒரு அமுதக்குடம். சகுனி அறிவாளன் எனினும் விஷம் நிறைந்தவன். சகுனியின் வார்த்தைக்கேற்ப நடந்து கொண்டதால் கௌரவர்கள் தம் நாட்டையும் அறியணையையும் எல்லாவற்றையும் இழந்தனர்.

தமது வெற்றியையும், அறிவுக் கூர்மையையும் எண்ணி எவரும் செருக்குறுதல் கூடாது. படிப்பறிவையும் மேதமையையும் விடச் சிறப்பானது நன்னடத்தையும் தூய சிந்தையுமே. உங்கள் அறிவுத்திறத்திறத்தையும், கல்வியின் பயனையும் நல்லொழுக்கமும் தூய சிந்தையும் கொடுக்கும் ஆனந்தத்தை அடைவதில் பயன்படுத்துங்கள். இலட்சியத்திற்காக வாழுங்கள்.

ஆதாரம்: Sathya Sai Speaks Volume 17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக