தலைப்பு

திங்கள், 1 ஜூன், 2020

நேரடி சத்தியத்தை உரைக்கும் சத்திய இறைவன்!


கடவுள் யாருக்கு இறங்கி வருகிறார்..? யார் பக்தர்..? யார் ஆத்ம சாதகர்? என்பதை மிக தெள்ளத் தெளிவாய் கடவுள் சத்ய சாயியே கருணை கூர்ந்து விளக்குகிறார்.. 

ஒருவரது வாழ்வில் பதினாறாவது வயது முதல் முப்பதாவது வயது வரை மிகவும் விலை மதிப்பில்லாதது. ஒருவரது சக்தியும் வீச்சும் எல்லா விதங்களிலும் உச்சத்தை அடையும் காலம் இது. அதனால் இந்தப் பருவத்தை ஒவ்வொருவரும் மிகச்சரியாக பயன்படுத்த எத்தனித்தல் அவசியம்.
தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு, வேட்கை, வீரம் ஆகிய நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய பருவம் இதுதான். இந்தப் பொழுது வீணாய் விரயம் செய்யப்பட்டால் வாழ்வில் பின்னர் வீழ்ச்சியும் துயரமும் தான். தீய எண்ணங்களும், பழக்கங்களும் புறங்கூறுதலும் அறவே விட்டொழிக்கப்பட வேண்டும். இந்த முக்கிய பருவத்தில் ஒருவர் தனது வாழ்வின் காரணம் புரிந்து இலட்சியங்களை அடைவதற்கான முயற்சியில் தனது கவனத்தை குவிக்க வேண்டும். உடலிலும் உள்ளத்திலும் உள்ள வலு இழந்தபின் எவ்வித ஆன்மீக முயற்சியும் இயலாது. இளைஞர்கள் இந்த முக்கிய கால கட்டத்தை தவறான வழிகளில் விரயம் செய்வது வேதனைக்குரியது. தங்களது திறமைகளை வளர்த்து வாழ்வில் சிறந்து விளங்கி முன்மாதிரியாய் திகழ வேண்டும் என்பதே சுவாமியின் எதிர்பார்ப்பு.

நாம் தற்போது உலகில் காண்பது நாடகம் ஆடுதல்.எல்லோரும் பக்தர் போல் காட்சி அளித்து தமது தியாக உணர்வை பறைசாற்றுகின்றனர். ஒவ்வொருவரும் தம்மை ஒரு சாதகராக அறிவித்துக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் கடவுளைக் காண்பதாக கூறிக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட பக்தர் எனப்படுவோர் கடவுளைத் தேடுகின்றனரா, கடவுள் உண்மையான பக்தரை தேடுகிறாரா என்பதை தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. சாதகன் கடவுளுக்கு சேவை செய்கிறானா, அல்லது கடவுள் சாதகனுக்கு சேவை செய்கிறாரா என்பதுதான் கேள்வி. சாதகன் செய்யும் சேவை மிக அற்பமானது.
கடவுள் நமக்குத் தந்ததை கடவுளுக்கே அர்பணிப்பது என்பது கங்கையிலிருந்து எடுத்த நீரை கங்கைக்கே அர்பணிப்பது போன்றது. உண்மை என்னவென்றால் கடவுள்தான் பக்தருக்கு சேவை செய்கிறார். கடவுளால் அளிக்கப்பட்ட சக்திகள் எல்லாம் அந்த இறையின் பணியிலேயே பயன்படுத்தப்பட வேண்டும். இறைவனை தேடிச் செல்ல வேண்டியதில்லை. இறைவன் எந்நேரமும் உண்மையான அயராத பக்தனையே தேடி வருகின்றான். கடவுளை நாடுவது தன் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு, காலத்தால் மறையும் சாதாரண நலன்களுக்கு உண்மையான அன்பின் தன்மையையோ எல்லாவற்றின் அடிப்படையில் இறைவனையோ அவன் காண விழைவதில்லை. இன்றைய சாதகன் நல்லொழுக்கம் சாராது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்பவனாய் திகழ்கிறான்.

ஆதாரம்: Sathya Sai Speaks Volume 17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக