தலைப்பு

செவ்வாய், 2 ஜூன், 2020

GRACE பட்டம் பெற எவ்வளவு உழைக்கவேண்டும்?


சாதாரண உலக அறிவைக் கற்பதற்கே நிறைய நேரம் செலவழித்து...தேர்வுகள் எழுதி தயாராக வேண்டி இருக்கிறது.. இறைவனின் கருணைக்கு.. அவன் அருளுக்கு பாத்திரமாக எவ்வளவு மணி நேரம் செலவழித்து .. எத்தனை தேர்வுகளை சந்தித்து நம்மை தயார் படுத்த வேண்டும் என்பதை ஆழமாய் மிக சுருக்கமாய் விவரிக்கிறார் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி... 

சுவாமி ஒருமுறை பொறியியல் மாணவர்களின் குழு ஒன்றைப் பேட்டிக்கு அழைத்திருந்தார். பேசிக்கொண்டிருக்கையில், பொறியியல் பட்டப்படிப்புக்கு எவ்வளவு நாள் எடுக்கும் என்று கேட்டார்.நான்கு வருடங்கள்  என்று விடை சொன்னார்கள் சகோதரர்கள். தொடர்ந்து சுவாமி, அந்த பட்டம் பெற எத்தனை பரீட்சைகள் எழுத வேண்டும் என்று கேட்டார்."நான்காண்டு BE படிப்பில் குறைந்தது 50 தேர்வுகளாவது எழுத வேண்டியிருக்கும் சுவாமி"என்று ஒரு மாணவர் நன்கு யோசித்தபின் கூறினார்.சுவாமி இப்போது ஆணியடித்தாற்போல, "வெறும் BE என்கிற இரண்டெழுத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது பாருங்கள். அப்படியானால், அதை விட அதிகப் பயனுள்ள GRACE என்கிற ஐந்தெழுத்துப் பட்டம் பெற எத்தனை உழைப்பும் சிரத்தையும் வேண்டும்?" என்று கேட்டார். நம்முடைய உழைப்பில்லாமல் எதுவும் வருவதில்லை என்பதை நாங்கள் அன்றைக்கு உணர்ந்தோம்.கடினமாக உழைத்து  அதற்கான பலனைப் பெறவேண்டும்.கடவுளின் அருளையும் சம்பாதிக்க முடியும். நம்மை நாமேதான் அதற்குத் தகுதியுள்ளவர்கள் ஆக்கிக்கொள்ள வேண்டும்.     
       
ஆதாரம்: 90 Divine Interactions of Bhagawan with youth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக