தலைப்பு

புதன், 3 ஜூன், 2020

கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய சாயி கடவுள்!


இறைவன் சத்ய சாயி ஒருவரே ஆபத்பாந்தவர்.. தன் பக்தர்களை எப்பேர்ப்பட்ட இன்னல்களில் இருந்தும் இமை அசைக்கும் நேரத்தில் காப்பாற்றுபவர். அவசரத்தில் இறைவன் சத்ய சாயி பெயரை நாம் அழைக்க மறந்தாலும் நம்மை அந்த ஆபத்திலிருந்து அவர் மீட்கவே மறக்காதவர் என்பதற்கான இரு பரவச அனுபவங்கள் இதோ.. 

பாபாவின் கருணையினால் கார் விபத்தில் இருந்து தப்பிய சம்பவங்கள் நிறைய உண்டு. ஆனால் இரண்டு வினோதமான விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை, நிகழ்ந்திருக்க வேண்டியவை, நடக்கவே இல்லை.

முதல் சம்பவம் 70ஆம் ஆண்டின்  பிற்பகுதியில் நடந்தது. அப்பொழுது லோவேன்பெர்க்ஸ்  தம்பதியினர் தென் ஆபிரிக்காவில் தான் இருந்தனர்.

அவர்களது மகன் அலெக்ஸ், மகள் லூயிஸ் தெய்வாதீனமாக தப்பினர் என்றே கூறவேண்டும். ஒரு சனிக்கிழமை இரவு நால்வரும் தென்னாபிரிக்காவின் தலைநகரமான பிரிட்டோரியா சென்று, பாபாவின் திரைப்பட பதிவு ஒன்றை பஜனைக்கு பின்னர் திரையிடுவதற்காக  சென்றனர். அவர்கள் இரண்டு கார்களில் சென்றனர். ஜோஹன்னஸ்பர்க் மக்கள் சிலரை பிரிட்டோரியா அழைத்துச் சென்று திரும்புவதற்காக உதவும் பொருட்டு இவ்வாறு சென்றனர். லாடியம் எனும் இடத்திலிருந்து மேற்கு பிரிட்டோரியா செல்லும் சாலையில் இருவரும் ஓட்டிச் சென்றனர். அலெக்ஸ் லூயிஸ் இடம் பேசிக்கொண்டே ஓட்டிக் கொண்டிருந்தார். பஜனைகள் பாடிக் கொண்டும், பார்த்த பாபாவின் திரைப்படம் பற்றியும் பேசிக் கொண்டு நல்ல மகிழ்ச்சியான மனநிலையில் சென்று கொண்டிருந்தனர்.

 திடீரென லூயிஸ் "அங்கு பார்" என சத்தமிட்டாள். இரண்டு, இரண்டாக இரு கார்களின்  முக விளக்குகள் இவர்களுக்கு நேரே நெருங்கி வேகமாக கிட்டத்தட்ட ஒ‌ன்றை ஒன்று முந்திக்கொண்டு வரலாயின! அலெக்ஸ் பயப்படவே இல்லை! இந்த மாதிரி நேரங்களில் வயிற்றில் தோன்றும் கலக்க உணர்வும் இல்லை! அமைதியாக "சாய்பாபா" என்று மட்டும் சொன்னார்.

 இரண்டு ஜோடி முக விளக்குகள் (headlights) மிக அருகில் வந்து,  அடுத்த நொடி இரண்டு கார்களும் அலெக்ஸின் காருக்குப் பின்னால் இருந்தன!!
இவர்களது இரண்டு கார்களையும் மோதாமல் எப்படி பின்னால் சென்றார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை! மோதப் போகிறது என்று நிச்சயமாக நம்பிய லூயிஸ் மூச்சைப் பிடித்து விழுந்து என்ன ஆயிற்று என்றாள்
"எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஆச்சரியமாக ஒரு கீறல் கூட இன்றி நாம் தப்பி உள்ளோம்." என்று கூறினார். "நான் இறப்பதற்கு இது  நேரம் அல்ல என்பதை நான் உள்ளுக்குள் உணர்ந்தேன். இன்று நடந்திருக்க வேண்டிய மோதல் எப்படி நிகழாமல் போனது என மலைக்கின்றேன்." என்றான்.

இரண்டாவது சம்பவம் ஜான் ஹிஸ்லாப் என்பவரை பற்றியது...



ஒரு மாலை, பிருந்தாவனில் சுவாமி தரிசனத்திற்குப் பின் தனது மாடி அறைக்குச் சென்ற பின் ஹிஸ்லாப்பும் அவரது மனைவியும் பெங்களூரில் பெங்களூரில் உள்ள தங்களது ஹோட்டல் அறைக்குள் செல்வதற்காக தயாராகினர். ஒரு அமெரிக்க தம்பதியினரும் அவர்களது பெண்ணும் இவர்களிடம் தாங்களும் வண்டியில் வர அனுமதி கோரினர். (Lift) ஹிஸ்லாப்பும் உடனே சம்மதித்து எல்லோரும் டாக்ஸியில் ஏறினர். டாக்ஸி டிரைவருக்கு ஏதோ அவசரம்; பழைய பாதை, குறுகலானது ஒன்றை தேர்ந்தெடுத்து  அதில் விரைவாகச் செல்ல எத்தனித்தார். இருட்ட ஆரம்பித்து விட்டதால் எல்லா வாகனங்களுமே ஒளிவிளக்கோடு வந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் டாக்ஸி ஒரு பஸ்ஸிற்குப் பின்புறமாக வந்தது. டாக்ஸி டிரைவரோ பஸ்சை முந்திச் செல்ல விரும்பினார். பஸ்சின் பக்கவாட்டில் பார்த்தால் பஸ் நின்று கொண்டிருப்பது போல விளக்கு தெரிந்தது. சுலபமாக முந்திச் சென்று விடலாம் (overtake) என்ற நோக்கத்தில் டாக்ஸியை கிளப்பினார். வண்டி நகர ஆரம்பித்ததும் தான், எவ்வளவு பயங்கரமான தவறு செய்தோம் என்பதை உணர்ந்தார். அந்த ஒற்றை விளக்கு வேகமாக நகர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு காரின் விளக்கு! இவர்களை நோக்கி மோதும் அளவிற்கு வந்து கொண்டிருந்தது. மோதுவதை தவிர்க்க சாலையின் பக்கவாட்டில் வரமுடியாத நிலை!! ஏனெனில் சாலை பழுது பார்க்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. மேலும் கட்டடப் பொருட்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தது. எனவே மோதுவதை தவிர்க்க முடியாத நிலையில் எல்லோரும் கண்களை மூடிக் கொண்டு காத்திருந்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை! அவர்கள் கண்களைத் திறந்த பொழுது எதிரே சாலை சுத்தமாக இருந்தது. டாக்ஸி சென்று கொண்டுதான் இருந்தது.  ரியர்நோக்கி  விண்டோ வழியாக நோக்கிய பொழுது, மோத வந்த காரின் பின்புற விளக்குகள் தெரிந்தன. நகர்ந்து மறைந்து கொண்டு இருந்தது. ஹிஸ்லாப்பின் மனதில் "நடந்தது சாத்தியமே இல்லை" என்ற எண்ணம் ஓடியது.

மறுநாள் காலையில் சீக்கிரமாக பிருந்தாவன் சென்றார். சுவாமி வராந்தாவில் இருந்தார். சுவாமியின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். "சுவாமி! காப்பாற்றியதற்கு நன்றி ஸ்வாமி" என்றதற்கு
"ஆமாம் ஆமாம். அது ஒரு  பெரிய நிகழ்வு தான் இல்லையா?" என்றவர், மேலும் "அதிர்ச்சியில் சுவாமியைக்  கூப்பிடக் கூட முடியவில்லை! ஆனால் காப்பாற்றி விட்டார்" என்றார். பிறகு அதிலிருந்த தெலுங்கு டாக்டர்களிடம் மொத்த சம்பவத்தையும் விபரித்தார். விபத்தை தவிர்க்க சுவாமி நேரத்தையும், வெளியையும் கூட மாற்றி அமைத்திருப்பார்!!!

இறைவன் சத்யசாயியால் இயலாதது தான் என்ன இந்த ஈரேழு உலகிலும்....! அவசியத் தேவை பக்தியும்.. அவர் பாத சரணாகதியுமே... அப்படி சரணாகதி அடைந்து இறைவன் சத்ய சாயி சங்கல்பத்தில் தன் வாழ்வினை முழுதாய் ஒப்படைப்பவர்களே ஒப்பற்ற பக்தர்கள். 

ஆதாரம் : The heart of Sai by Lowenburg. P. 35,36 & Seeking Divinity by John Hislop P. 95.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக