தலைப்பு

சனி, 13 ஜூன், 2020

குரோஷியா நாட்டிற்கே சென்று சேவையாற்றிய சாயி கடவுள்!


குரோஷியா(Croatia) நாடு வரைபடத்தில் எங்கிருக்கிறதென நம்மில் பாதி பேருக்கு தெரியாது என்பதே எதார்த்தம். வரைபடத்தில் இல்லாத தேசத்திற்கும் சுவாசம் அனுப்புபவர் இறைவன் சத்யசாயியே. அங்கே அவர் நிகழ்த்திய பேரற்புதம் இதோ.. 

குரோஷியக் குடியரசு, தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும்; வடமேற்கில் ஸ்லோவேனியா,வட கிழக்கில் ஹங்கேரி,கிழக்கே செர்பியா, தென்கிழக்கில் போஸ்னியா, ஹெர்சிகோவினா மற்றும் மாண்ட்டெனெக்ரோ முதலிய நாடுகளையும், இத்தாலியுடன் கடற்பரப்பையும் எல்லைகளாகக் கொண்டு திகழ்கிறது.
 
சுவாமி,  புட்டபர்த்தியில் ஒரு விடுமுறை காலத்தில் கிரேக்கப் பெண்மணி ஒருவரை கூட்டத்தில் உரையாற்றும்படி சொன்னார். அந்தப் பெண்,சாயி சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு மருத்துவராவார். ஒருமுறை, குரோஷியா போரில் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது. அச்சமயம் போரில்் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அவர் ஒரு சேவாதளத் தொண்டர்கள் குழுவை தன்னுடன் அழைத்துக் கொண்டு குரோஷியா சென்றார். அவர்கள், அம்மக்களுக்கு உணவு, ஆடை மற்றும் மருந்துகள் அடங்கியப் பைகளை வழங்கினர்.அதனுடன் சுவாமியின் சிறிய படம் ஒன்றும் வழங்கப்பட்டது. தனது
அனுபவத்தைத் தொடர்ந்த மருத்துவர், "அம்மக்கள், நாங்கள் வந்து உதவியதற்கு
மகிழ்ச்சி தெரிவித்தனர்.ஒருவர் சுவாமியின் படத்தைப் பார்த்து,"எங்களுக்கு இந்த நபரைத் தெரியும்", என்றார். "அவரை உங்களுக்கு எப்படி தெரியும்?அவரைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?", என்று மிகவும் வியப்புடன்
கேட்டேன். அவர்கள், "அவரை நாங்கள் இங்கே பார்த்திருக்கிறோம்", என்று கூற, திகைத்துப் போன நான், "என்ன?, இவரைக் குரோஷியாவில் பார்த்தீர்களா?இங்கு என்னசெய்து கொண்டிருந்தார்?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள்,"உங்களைப் போல அவரும் உணவு,போர்வைகள், மருந்துகளை எமக்கு அளித்தார்",என்றனர். நான் திகைத்துப் போனேன், என்று தனது மயிர்கூச்செரியும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அங்கு இருந்த பக்தர்களுள் ஒருவர், "சுவாமி, இது உண்மையிலேயே அசாதாரணமான நிகழ்வு, என வியந்து கூறினார். "உங்களுக்கு தான் இது அசாதாரணமான நிகழ்ச்சி.ஆனால் எனக்கு, வழக்கமாக நடக்கும் சாதாரண நிகழ்ச்சியே", என்று சுவாமி பதிலுரைத்தார். இதைக் கேட்ட பக்தர்கள், ஆச்சரியம் அடைந்ததில் வியப்பேது!!

சேவையின் மகிமையை சேவையாற்றியே உணர்த்தியவர் இறைவன் சத்ய சாயி. வெற்று உபதேசங்களை உதிர்ப்பவர் அல்லர்.. கடவுள் எதைத் தான் கடைபிடிக்கிறாரோ அதையே பக்தர்க்குப் பரிந்துரைப்பவர். மற்றபடி இறைவன் சத்ய சாயி சகஜமாய் எல்லா நேரமும் எப்போதும் எப்போதும் உலா வரும் சுவாசக் காற்றவர். சர்வாந்தர்யாமிக்கு இதுவெல்லாம் சாதாரண விஷயமே!

ஆதாரம்: http://www.radiosai.org/Journals/05NOV01/TemplesLearning/Trayee.htm
தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக