தலைப்பு

சனி, 20 ஜூன், 2020

மாணவர்கள் தெய்வத் துணையை நாட வேண்டும்!


தெய்வமே ஒரே துணை என்கிறார் பரிபூரண தெய்வமான சத்யசாயி.
தெய்வத்துவம் என்பது அன்பே என அரசாணை பிறப்பிக்கிறார் இதோ ஈரேழு பதினான்கு லோகத்தின் ஒரே சக்கரவர்த்தியான இறைவன் சத்ய சாயி.. 

அன்பில்லாத தியானமும் ஜபமும் உயிரற்ற சடங்குகள், எல்லா உயிர்களிடத்தும் கொள்ளும் அன்பே இறைவனிடம் உள்ள அன்பு. அன்பு இல்லாது உண்மை, பக்தி இல்லை. மாற்றத்திற்கு உட்படாததும் எந்த தியாகம் செய்யவும் தயங்காததும் அன்பு ஒன்றே. அது போன்ற அன்பு நிறைந்த தியாக எண்ணம் திகழும் மாணவர்கள் உண்டானால், நாடு கலப்படம் அற்ற முன்னேற்றமும், உயர்வும், அமைதியும் பெறும். முதலில் பெற்றோரைப் போற்றக் கற்றுக்கொள்ளுங்கள். பெரியோரிடம் மரியாதை காட்டி அவர்கள் காட்டும் நெறியை பின்பற்றுங்கள். இறைவனிடத்து நம்பிக்கை வையுங்கள்.

இறை நம்பிக்கை இன்றி மற்ற எந்த சொத்துக்களும் வீணே. துரியோதனனை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். அவன் ஒரு நாட்டின் பேரரசன். துரியோதனனும் அர்ஜூனனும் பாரதப்போர் துவங்கும் முன் கிருஷ்ணனிடம் சென்றார்கள். துரியோதனன் கேட்டது கிருஷ்ணனின் படைகளை.
அர்ஜூனனோ கிருஷ்ணனின் துணையை மட்டுமே வேண்டினான். இறுதியில் வெற்றி அடைய அர்ஜூனனுக்கு அது மட்டுமே போதுமாய் இருந்தது.

துரியோதனனின் அத்தனை படைகளும் வீண் போயின. துரியோதனன் சகுனியின் தந்திரங்களை நம்பினானே அன்றி கண்ணனின் இறை அறிவில் நம்பிக்கை கொள்ளவில்லை. இதிலிருந்து மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டுவது என்னவென்றால் அறிவினை பின்பற்றாது சராசரி புரிதலுக்கும் எண்ணங்களுக்கும் மேலான உயர்  வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும். அனைத்தையும் படைத்துக் காக்கும் பரம் பொருளின் துணையை நாட வேண்டும்.

ஆதாரம்: Sathya Sai Speaks Volume 17 

🌻 பஞ்சபாண்டவர்கள் போரில் வென்றது சத்ய சாயி கிருஷ்ணனால் மட்டுமே.. வாழ்க்கை எனும் குருஷேத்திரத்தில் இறைவன் சத்ய சாயி துணை இருக்க அவரே பரிசுத்தமும்.. பிரகாசமும்.. பரகதியும் அளிக்கிறார். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக