இறைவன் சத்ய சாயிக்கு காலம் - இடம் - தேசம் ஆகிய எந்த வேறுபாடும் இல்லை.. பாகுபாடும் இல்லை.. இறைவன் சத்ய சாயிக்கு காலம் என்ற வரையறையே இல்லை என்பதற்கான ஒரு அற்புத அனுபவப் பதிவோடு அந்த சந்தேக பக்தரின் ஐயத்தைப் போக்க அவருக்கு வழங்கப்பட்ட காலமற்ற சத்ய சாயியின் காலம் காட்டும் கைக்கடிகாரம் இதோ..
ஒருமுறை தென்னாப்பிரிக்காவிலிருந்து பக்தர் ஒருவர் புட்டபர்த்திக்கு வந்திருந்தார். பாபாவின் பக்தர் எனினும்,பாபாவின் மேல் பல சந்தேகங்களும் அவருக்கு இருந்தது. சுவாமி அவரை நேர்காணலுக்கு அழைத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு,சுவாமி அவரிடம் "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்க,"எனக்கு கைக்கடிகாரம் வேண்டும்,என பதிலளித்தார்.
பாபா உடனே கடிகாரத்தை வரவழைத்துக் கொடுத்தார்.அதைப் பெற்றுக் கொண்ட அந்த பக்தர், அதற்குரிய பில்லும் தேவை, என்றார். சுவாமி காற்றினூடே கையை அசைத்து வரவழைத்துக் கொடுத்தார். என்னே
ஆச்சரியம்!! அந்த பில்லில், அந்த பக்தருடைய வசிப்பிடத்தில் உள்ள கடையின் முகவரியும், அன்றைய தேதியும் பதிவாகியிருந்தது. அந்த பக்தர், பர்த்தியிலிருந்து,10,000 மைல்களுக்கு அப்பால் உள்ள தனது டவுனில் எப்படி வாங்கி இருக்க முடியும் என்ற குழப்பத்துடன் அந்த பில்லை பத்திரப்படுத்தி கொண்டார்.
தனது நகரத்துக்கு திரும்பியவுடன், பில்லில் இருந்த முகவரிக்கு சென்று, அதன்
நகலை வாங்கிப் பார்த்தார்.விசாரித்ததில், அந்த கடை நிறுவனர்,"ஆம்,அன்று சிவப்பு நிற ஆடை அணிந்து, சுருள் முடியுடன் சிறிய உருவத்துடன் ஒருவர் வந்தார்.நீண்ட நேரம் செலவழித்து, இந்த கடிகாரத்தை பணம் கொடுத்து வாங்கினார். உடன் இங்கிருந்து சென்றுவிட்டார். சில நிமிடங்களில் திரும்பி
வந்து, அதற்குரிய பில்லை கேட்டு வாங்கிச் சென்றார். மிகவும் மகிழ்வளிக்கக்கூடிய ஆளுமையுடையவராக இருந்தார்...",என்று
விளக்கிக் கொண்டே போனார்!!!
ஆதாரம்: Sai journal published by South African devotees.
தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.
பில் வேண்டும் என்று அந்த சந்தேக நபர் கேட்க பில்லும் தருகிறார் இறைவன் சத்ய சாயி.. என்ன ஒரு பெருங்கருணை... சந்தேக நபர்களை சந்தத பக்தராக்குவது தானே இறைவன் சத்ய சாயியின் தனிப்பெரும் மகிமை.
Sairam
பதிலளிநீக்கு