தலைப்பு

செவ்வாய், 16 ஜூன், 2020

'அதே பாபாதான் இவர்' தொடருக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?


கேள்வி: சத்ய சாயி யுகம் குருப்பில் எதற்கு 'அதே பாபாதான் இவர்' தொடருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? இருவரும் ஒருவரே என்று நம் அனைவருக்கும் அறிந்த ஒன்றுதானே..

சரியான கேள்வி. ஆனால் அனைவர் என்பதில் மட்டும் திருத்தம். சத்ய சாயி பக்தர்கள் இருவரும் ஒருவர் தான் என உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஷிர்டி சாயி பக்தர்கள் பலருக்கும்.. புதிதாய் இணைந்திருக்கும் பல சத்ய சாயி பக்தர்களுக்கும் சிறு குழப்பங்கள்.. சிறு சந்தேகங்கள்.. சில கேள்விகள்.. அதைத் தெளிவுபடுத்தவே அதே பாபாதான் இவர் எனும் முக்கியத் தொடர்.

பல புதிய பக்தர்கள் எங்களிடம் ஷிர்டி சாயி பாபா தானே சத்ய சாயி பாபாவின் குரு எனக் கேள்விகள் கேட்டிருக்கின்றனர்.
ஷிர்டி சாயி பாபாவினுடைய பவர் தானே (ஆற்றல் தானே) சத்ய சாயிக்கு அவர் வழங்கி அதனால் தானே தன்னை சாயி பாபா என அழைத்துக் கொண்டார்?
என நிறைய கேள்விகளைப் புதிய பக்தர்களிடம் எதிர் கொண்டிருக்கிறோம்.

பல ஷிர்டி சாயி பக்தர்களோ அவரை வழிபடுகிறோம் என்ற பெயரில் அவதார சத்தியமே உணராமல் சத்ய சாயியை குறை சொல்வது ... பழிப்பது... எல்லாம் தெரிந்தது போல் உதாசீனப்படுத்துவது எல்லாம் ஷிர்டி சாயியையே சென்று சேரும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு மிக மிக முக்கியமாக தெளிவு ஏற்படுத்தவே இந்தத் தொடர்.

ஷிர்டி சாயி.. சத்ய சாயி... பிரேம சாயி எனும் மூன்று அவதாரங்களும் ஒன்று தான்..
மூவரும் ஒருவரே!

வடிவ மாயையில் மயங்கி இருப்பவர்கள். ஆன்ம ரசம் அறியாதவர்கள்.
ஆன்மீகம் உணராதவர்கள்.
ஆத்ம சாதனையில் ஒரு அடி கூட முன்னேறாதவர்கள்.

மனம் என்பது பிரித்தும்.. பழித்தும்.. வெறுத்தும்.. ஒதுக்கியும்.. கிடைத்திருக்கின்ற பெரும் வாய்ப்பையும்.. பெரும் பாக்கியத்தையும் இழக்கச் செய்துவிடுகிறது.

சத்தியம் ஒன்று தான்.. அவை வெவ்வேறு வடிவங்களில் .. வெவ்வேறு கோணங்களில் பரந்து விரிந்து உள்ளே உறைந்து அருள் புரிந்து கொண்டிருக்கிறது.

எப்போது பேதம் நிற்கிறதோ.. அப்போது ஞானம் உதிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக