தலைப்பு

ஞாயிறு, 14 ஜூன், 2020

அறுவை சிகிச்சை செய்த ஆண்டவன் சாயி!


நம்மிடமிருந்து பூரண அன்பைப் பெற்றுக் கொண்டு ஆரோக்கியத்தை பிரசாதமாக வழங்குபவர் இறைவன் சத்ய சாயி...அப்படி ஒரு ஆபத்தான நோயாளிக்கு எப்படி சிகிச்சை அளித்தார் என்பதன் பரவச அனுபவம் இதோ..

ஒரு நடுத்தர வயது பெண்மணி, தாங்கமுடியாத வயிற்று வலியோடு கொண்டுவரப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அவள் டாக்டர். பூர்ணேந்து தாத்தாவின் கண்காணிப்பில் வைக்கப்பட்டாள். அவளுக்கு மலக்குடலில் துவாரங்கள் ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அடி வயிற்றைத் திறந்து, சிகிச்சை ஆரம்பித்த பொழுதுதான் தெரிந்தது, அனேகமாக பெரும்பகுதி பாதிக்கப்பட்டு, மலம் வெளியே கசிய ஆரம்பித்து விட்டது. முடிந்தவரை சிகிச்சை செய்யப்பட்டது. இத்தகைய நிலையில் ஒருவர் உயிருடன் இருப்பதே மிகவும் கடினம். மிகவும் அபாயகரமாக குடல் பாதிப்படைந்து விட்டது.

இதுபற்றி ஆஸ்பத்திரியில் உள்ள மற்ற மருத்துவர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டது. அனைவருமே நோயாளி பிழைக்க வாய்ப்பில்லை என்றனர். டாக்டர் பூர்ணேந்து மனதிற்குள் பாபாவை பிரார்த்தித்து, தன்னை இந்த சிகிச்சை முறையில், தனக்கு வழி காட்டுமாறு, தன்னால் முடிந்தவரை செய்தார்.

பாபாவிற்கு இவருடைய பிரார்த்தனை கேட்டிருக்க வேண்டும். அவள் 10 நாட்களில் குணமாகி வீடு சென்று விட்டாள். பல வாரங்களுக்குப் பிறகு, டாக்டர் தத்தா அவருடைய பழுதடைந்த பெரும் மலக்குடலை நீக்கிவிட்டு, வழக்கமான மல வெளியேற்றம் நிகழ, பாகங்களை இணைத்து விட்டார்! பாபாவின் கருணை மட்டும் இல்லாவிடில், அறுவை சிகிச்சையின் விளைவுகள் வேறுவிதமாகப் போய்விடும் என்பதை டாக்டர் தத்தா மிக உறுதியாக உணர்ந்தார்.

ஆதாரம்: Dr. Purnendu Dutta, Inspired Medicine P 253
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

மருத்துவர்கள் இறைவன் சத்ய சாயி கைகளில் இருக்கும் வெறும் கருவிகளே! அதுவும் தனது பக்தரான மருத்துவர் வழி சிக்கலான பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் என்பதை உணரும் போது கண் கலங்குகிறது.
கர்மாவே நோய்களுக்கு எல்லாம் பெரிய நோய்..
ஆனால் அதைக் களையும் இறைவன் சத்ய சாயியே ஆரோக்கியத்தின் தாய். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக