தலைப்பு

ஞாயிறு, 7 ஜூன், 2020

1000 கோடி செலவில் அரசின் திட்டத்தோடு புதுப்பிக்க இருக்கும் புட்டபர்த்தி!


புட்டபர்த்தியின் வளர்ச்சிப் பணிக்காக மாபெரும் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது : MLA திரு D. ஸ்ரீதர் ரெட்டி அவர்களின் பதிவு இதோ.. 

புட்டபர்த்தி(அனந்தபூர்): MLA D ஸ்ரீதர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பன்னாட்டு சேவார்த்திகளின் புனித யாத்திரை இலக்கான புட்டபர்த்தியின் வளர்ச்சிக்கே தான் பெருமளவில் பாடுபடப் போவதாக தெரிவித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா நம்மிடையே இன்றளவும் நடமாடும்  புட்டபர்த்தி அநேக வெளிநாட்டு பக்தர்கள் வருகையினால் ஆன்மீக புகழ் பெற்ற ஸ்தலமாக இருந்து வருகிறது. 

இந்நகரில் பல பயணியர் விடுதிகள் மற்றும் பாபாவின் வெளிநாட்டு பக்தர்கள் கட்டிய தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன. இவை அனைத்தும் மந்திராலயத்தில் உள்ளது போலவே மேம்படுத்தப்படும் என கூறினார். 

ரூபாய் 1000 கோடி மதிப்புள்ள பகுதி மேம்பாட்டு திட்டத்தில் சத்யசாய் தேசிய பூங்கா, பாதாள சாக்கடை திட்டம்,  நிலத்தடி மின் இணைப்பு,  வெளிவட்டச் சாலை(Ring Road),  R & B மின்சுற்று கொண்ட பயணியர் விடுதி,  உணவுப் பூங்கா மற்றும் யோகா ஆரோக்கிய மையம் இவை அனைத்தும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறினார். 


The Hans India  பத்திரிகை நிருபர்களிடம் நாடு தழுவிய Covid-19 முடக்கத்துக்கு முன்பே இத்தொகுதி  மேம்பாட்டு திட்டத்தின் வரைபடத்தின் முன்மாதிரி தயாரிக்கப் பட்டதாக திரு ஸ்ரீதர் ரெட்டி கூறியுள்ளார். 

கூடிய விரைவில் இத் தொகுதி மேம்பாட்டு திட்ட விவரங்கள் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் திரு ஜெகன் மோகன் ரெட்டியின் பார்வைக்கு  வைக்கப்படும் என்றும் கூறினார். 

உணவுப் பூங்கா அமைக்க 100 ஏக்கர் நிலத்தை APIIC(Andhra Pradesh Industrial Infrastructure Corporation Ltd) வழங்கும் என்றும்  மணிலகுண்டா சுற்று,  கொத்தசெருவு,  புட்டபர்த்தி  மற்றும் புக்கபட்டணம் இந்த மண்டலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து 31.5 கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்படவிருக்கும் வெளிவட்டச் சாலைக்கு பொதுப்பணி துறை ரூபாய் 350 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 60 ஏக்கர் நிலப்பரப்பில் யோகா ஆரோக்கிய மையம் கட்டுவதற்கான இடம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது என்பதையும் திரு ஸ்ரீதர் அறிவித்தார். 

புட்டபர்த்தி - புக்கபட்டிணம்  - கொத்தசெருவு ஆகியவற்றை இணைப்பதற்காக முன்மொழியப்பட்ட வெளிவட்டச்  சாலையில்(Ring Road) மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். 


புட்டபர்த்தி வரும் யாத்ரீகர்களை கவரும் வகையில் சித்ராவதி அணையில் செயற்கை நீரூற்று ஒன்றும் பிரம்மாண்டமான பாபா சிலையையும் வடிவமைக்கவும் MLA  திரு ஸ்ரீதர் முடிவு செய்துள்ளார். 

ஆதாரம்  : ஆதாரம்: ஜூன் 02, 2020 அன்று 'The Hans India' ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தி.

தமிழாக்கம்: R. வரலட்சுமி, குரோம்பேட்டை, சென்னை. 

இறைவன் சத்ய சாயி சங்கல்பம் இன்றி எதுவும் மனித மனத்திற்கு தோன்றுவதுமில்லை அது செயல்படுவதுமில்லை.
யாவும் இறைவன் சத்யசாயியின் திருச் சங்கல்பமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக