தலைப்பு

புதன், 17 ஜூன், 2020

டாக்டருக்கு குரு பாதம் காட்டிய கடவுள் பாபா!

Dr. Alreja Meets his Maha Guru 

இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே குருவுக்கு எல்லாம் குருவாகிய மகாகுரு.. சத்குரு.. கீதை உரைத்த ஒரே ஜகத் குரு.. பிற மகான்கள் வெறும் குருவே. உலகின் எல்லா குருவும் கடவுள் சத்ய சாயி கற்பக மலர் பாதங்களில் அடக்கம் எனும் பேருண்மையை உணர்த்தும் விதமாக ஒரு பரவச அனுபவப் பதிவு இதோ

மும்பையில் Dr. நரோட்டான் மெங்க்ரா ஆல்ரேஜா மிகவும் தீவிரமான ஆன்மீகவாதி! ஒரு சித்த புருஷரின் வழிகாட்டுதலின்படி, மற்றொரு சித்த புருஷரை, தேடிக்கொண்டிருந்தார். 104 வயது வரை வாழ்ந்த ஒரு ஞானி/ முனிவர், ஆல்ரேஜாவிடம், கூடிய சீக்கிரம் ஒரு மகா குருவை சந்திக்கக்கூடும் என்று கூறியபின், சில காலம் கழித்து இப்பூவுலகை நீத்தார். அத்தகைய குருவை தேடி 1965ல் பிருந்தாவன் வந்து சேர்ந்தார் ஆல்ரேஜா!

பகவானின் முதல் வார்த்தைகளே, "டாக்டர், பம்பாயிலிருந்து எப்போது வந்தீர்கள்?" என்றார். ஆல்ரேஜாவிற்கு ஆச்சர்யம்; பகவானுக்கு, தனது தொழில், தான் வசிக்கும் இடம், எப்படி தெரிந்தது என!! பகவான் அவருக்கு ஒரு நேர்காணல் (இன்டர்வியூ) கொடுத்தார்.


"உனக்கு என்ன வேண்டும்?" என பகவான் கேட்டார். கடவுள் புண்ணியத்தில் தனக்கு எல்லாமே இருப்பதாகவும், எதுவும் தேவையாக இல்லை எனவும் கூறினார். பகவான் மேலும் வற்புறுத்திக் கேட்டார், "ஆனால் உனக்கு இன்னும் ஏதோ தேவைப்படுகிறது; சொல்" என கேட்டார். ஆனால் ஆல்ரேஜா தன் புத்தி, பௌதீகப் பொருள் எதையும் கேட்கக்கூடாது என்றுதான் உணர்த்துவதாக கூறினார். பகவான் தொடர்ந்து, "நீ பரிபக்குவம் ஆன புத்தியை உடையவன் என்று எனக்கு தெரியும், நல்லது, என்ன வேண்டும் கேள்" என்றார். பிறகு டாக்டர் தன்னுடைய ஆசையை வெளியிட்டார். தனக்கு பக்தியும், சிரத்தையும் வேண்டும் என்று கோரினார்.

பகவான் டாக்டரின் தலையைத் தொட்டு தனது ஆசிகளை வழங்கினார். ஆல்ரேஜா குனிந்து பகவானின் பாதங்களை தொட்டார். அவருடைய ஆச்சரியத்திற்கு அளவே இல்லை! ஏனெனில் சுவாமியின் சின்ன பாதங்கள், தனது முந்தைய குரு, சித்த புருஷரின், பெரிய பாதங்களாக தோன்றின. ஆல்ரேஜாவின் மகாகுருவுக்கான தேடல் அன்றே பிருந்தாவனில் முடிவுக்கு வந்தது. Dr. ஆல்ரேஜா, 1975ல் பிரசாந்தி நிலையத்தில், சத்திய சாயி பொது மருத்துவமனையின், தலைமை மருத்துவ மேலாளராக ஆனார். 30 ஆண்டுகள் தன் அன்பு பகவானுக்காக மிகுந்த ஈடுபாட்டுடன் சேவை செய்தார்.

ஆதாரம்: Sathyam Sivam Sundaram Vol5. P238
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.


🌻மருத்துவர்கள் சத்தியத்தை தேடி வருகின்ற போது ஸ்ரீ சத்ய சாயி இறைவனே அவர்களுக்கான சஞ்சீவி மூலிகையாகிறார். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக