சிறுவர்கள் கள்ளம் கபடமற்றவர்கள்.
பரிசுத்தமானவர்கள். அவர்களின் இதயத்தில் பூமியின் பொய்ப் புழுதி கலக்கப்படுவதில்லை.. அப்பேர்ப்பட்ட சின்னஞ் சிறு சிறுவனான ஒரு சுவாமி மாணவன் கடிதமாக இறைவன் சத்யசாயிக்கு என்ன எழுதினான்... இதோ
மாணவர்கள், தங்களை தாயன்புடன் பாதுகாக்கும் பகவானின் மீது, அதிக அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர். சாயியும், அவர்களோடு அளவளாவி, அவர்களது பிறந்த நாட்கள் அன்று அவர்களை ஆசீர்வதிப்பார்.
ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு இரண்டாம் வகுப்பு சிறுவன், சுவாமியின் ஆசியை வாங்க, மந்திருக்கு வந்தான். ஆனால் அதற்கு முன்பாகவே சுவாமி, மற்ற மாணவர்களை ஆசீர்வதித்துவிட்டு, இன்டர்வியூவுக்கு சென்றுவிட்டார். அந்த மாணவன், தன் இதயப்பூர்வமாக சுவாமிக்கு ஒரு கடிதம் எழுதினான்.
இண்டர்வியூ முடிந்த பிறகு, சுவாமி வெளியே வந்து, இச்சிறுவனை கவனித்து விட்டார். சிறுவன் கடிதத்தை சுவாமியிடம் கொடுத்தான். அவரது முகம் கடிதத்தை படிக்க படிக்க பிரகாசம் ஆகியது. அதை படித்ததும் சுவாமி மனம் நெகிழ்ந்து விட்டார். உரக்கப் படித்தார்;
"அன்பான சுவாமி! உங்கள் ஆரோக்கியம் எப்படி உள்ளது? உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். அனாதைகளையும், பிச்சைக்காரர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள் ஸ்வாமி! உங்களை மிகவும் விரும்புகிறேன்-உங்கள் அன்பு மகன்."
இந்த சிறிய கடிதம், சுவாமி மாணவர்களிடம் எவ்வளவு ஆழமான அன்போடு மதிப்பீடுகளை புரிய வைத்திருக்கிறார் என்று விளங்க வைக்கிறது! எல்லா மதிப்பீடுகளின் சாரம்சம் அன்புதான்! இவ்வாறாகத் தான் இறைவனிடம் அன்பு வளர்கிறது. குழந்தைகளின் இளம் மனங்களில் கூட! ! !
ஆதாரம்: Gems of Sai, Garland of 80, Page 112
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்
உங்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்று கேட்கின்ற பிரகலாத பக்தி எத்தகைய மேன்மையானது!
சுயநலமே இல்லாத அந்த பக்தியே இறைவன் சத்ய சாயி விரும்புவதும்.. அந்த பக்திக்கே இறைவன் சத்யமாய் திரும்புவதும் ... உள்ளே பேரருள் சுகந்தமாய் அரும்புவதும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக