தலைப்பு

வியாழன், 11 ஜூன், 2020

"நேர்மையே வழி - தர்மமே ஒளி" சொல்கிறார் இறைவன் சாயி


இறைவன் சத்ய சாயி கிருஷ்ணரை போல் ஓரிரு வரிகளில் கீதை சொல்லும் கடவுள் உலகில் வேறு யாரும் இல்லை. ரத்தினச் சுருக்கமாய் ஞானத்தை நம்  இதயத்தில் விதைத்து அதை பாரிஜாத வேராய் படர விடுகிறார் இதோ.. 

தருமமும் ஞானமும் மனிதனுக்கு, அவனுடைய தனித் தன்மையையும் இறையாண்மையையும் உணர்த்த கொடுக்கப்பட்ட இரு கண்களாகும்.
ஒவ்வொரு தனி மனிதனும், குழுவும்,சமுதாயமும் கடைபிடிக்க வேண்டிய நேர்மையான பாதையே தருமம் எனப்படுவதாம். தன்னை மீறுபவரை தருமம் தகர்த்து விடும், தர்மத்தை காப்பவரை அதுவே காக்கும். "தருமம் உள்ள இடம் வெற்றியே', என திருமறைகள் இயம்புகின்றன. உண்மையினும் சிறந்த தருமம் இல்லை. தருமம் எனும் மாபெரும் கோபுரம் எழுப்பப்படுவதே உண்மை எனும் அஸ்திவாரத்தின் மீது தான். நியாயம் என்பது தருமத்தின் இன்றியமையாத பகுதி. சமுதாயமோ, நாடோ, தனி ஒருவனோ நீதிக்கு கட்டுப்பட்டால் மட்டுமே உயர்வெய்த முடியும். ஒருவர் உழவு, தொழில் போன்றவற்றால் செல்வச்செழிப்பு எய்துவது போல, நீதிக்கும் தருமத்திற்கும் தலை வணங்குவதன் மூலமே இறை அருளையும் மேன்மையையும் பெற வேண்டும்.

ஆனால் தருமம் மட்டும் போதுவதில்லை தருமத்தின் வழியே நேர்மையைக் கடைபிடிக்கும் அதே வேளையில் ஞானத்தையும் பெற வேண்டும். அண்டத்தின் அடிப்படை ஒன்றே என்பதுதான் உண்மை அறிவு. இருமையின் கண் உண்டாவதே அனைத்து துன்பங்களும் துயரங்களும். 'நான்' என்றும் 'எனது' என்றும் உள்ள எண்ணங்கள் ஒழிந்தால் எல்லாமாய் உள்ள இறையின் உணர்வு நிலை விளங்கும்.

ஆதாரம்: Sathya Sai Speaks Volume 17 

இறைவன் மேற்சொன்னவை யாவும் அவரின் சத்ய குணங்களே.. அந்த குணங்களே மனிதரையும்... ஈரேழு உலகினையும் இருளில் இருந்து மீட்டெடுத்துக் காப்பாற்றி ஒளி வீசி வழிநடக்கூடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக