அருளையே ஆறுதலாகவும்.. அன்பையே ஆன்மீகமாகவும் அள்ளித் தரும் இறைவன் சத்யசாயி பக்தரின் மேல் எத்தனை கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் என்பதும்.. அப்படி அவர் மீட்டளத்தப் பொக்கிஷமும் இதோ..
1964 ல் ஜெயலட்சுமியின் தாயார் இறந்து விட்டார். அவளது தந்தை 75 வயது அப்பொழுது! பிரிந்த ஆன்மாவிற்கு ஈமக்கடன்கள் செய்ய பிள்ளை இல்லை! பாபா விட்டல் ராவிற்கு கடிதம் எழுதினார்- “விட்டல் ராவ் , தைரியமாக இரு! நீயே உன் மனைவிக்கு இறுதிக் கடனைச் செய்! நான் உனக்கு துணையாக இருப்பேன்! மனைவிக்கு கணவன் கையால் சடங்கு செய்து கொள்வது மிக அபூர்வம்! சரோஜம்மா உயர் பதவியை அடைந்து விட்டார். மகிழ்ச்சியாக இருங்கள்!”.
சடங்குகள் முடிந்த பிறகு, பாபா அவர்களை பிருந்தாவனில் தங்கி இருக்கச் சொன்னார், ஒரு நாள் விட்டல் ராவ், பாபாவால் தனக்கு கொடுக்கப்பட்ட வெள்ளி பதக்கம் ஒன்றை ஒரு சில்க் பையில் வைத்திருந்தார், அதை திடீரெனக் காணவில்லை, அவருடைய உடமைகளை நன்கு தேடியும் கிடைக்கவிலை! ஜெயலட்சுமியிடம் அதை சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த பாபா, “நீங்கள் என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியும் ! சரோஜாம்மா இன்று காலை என்னிடம் வந்தாள் , நீங்கள் அந்த சில்க் பையை தொலைத்து விட்டதாகவும், தினமும் அந்த பதக்கத்தின் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் தான் விட்டல் ராவ் ஆரோக்யமாக இருப்பார் என்றும் நான் அது கிடைப்பதற்கு உதவ வேண்டுமென்றும் கூறிச் சென்றார். உன்னுடைய, நான் அளித்த அந்த பரிசை நானே மீட்டுத்தருகிறேன், அதற்கு முன்பு நாம் பந்தர்பிர் போக வேண்டி இருப்பதால், வந்ததும் தருகிறேன்” என்றார்.
சொன்னபடியே மீண்டும் பிருந்தாவன் வந்ததும் பாபா அழைத்து, நான் தரப்போகும் வெள்ளிப் பெட்டியில் வெள்ளி பதக்கம் மட்டுமின்றி, ஏற்கனவே கேசவ் பூசை செய்த இரண்டு மல்லிப்பூக்களும் இப்பொழுது காய்ந்த நிலையில் உள்ளன. ஒரு ஓரணா காசும் இருக்கிறது அது ஸ்வாமி கொடுத்தது, ஸ்வாமி தொட்டு கொடுத்ததால் அந்த பொக்கிஷம் போல் பார்த்து பாதுகாத்து வந்தார் கேசவ். மீண்டும் சரோஜம்மாவால் அவருக்குக் கிடைத்துள்ளது என்றார் ஸ்வாமி! பிறகு ஸ்வாமி தன் கையை சுழற்றி, கையில் அந்த சிறு பெட்டியை வரவழைத்தார் திறந்து பார்த்தால் ஸ்வாமி சொன்ன அத்தனைப் பொருட்களும் அதில் இருந்தன. கேசவ் விட்டலிடம் கொடுத்த ஸ்வாமி, “கவனக் குறைவாக இருக்காதீர்கள்! பதக்கத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் சரோஜம்மா உங்கள் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுகிறார்” என்று கூற, இருவரும் ஸ்வாமியின் பாதங்களில் வீழ்ந்து ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
ஆதாரம்: SAI SPARSHAN, P 144
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.
🌻 மீட்டாத பக்தரின் இதயத்தில் பேரன்பு ராகம் ததும்ப மீட்டும் இறைவன் சத்ய சாயியே மீட்காத பொருளை எல்லாம் மீட்டுத் தருபவர். அதில் முக்கியமான ஒரு பொருள் பரம்பொருளாகிய அவரே அவரை அகத்தில் மீட்டுத் தருபவர். 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக