தலைப்பு

வெள்ளி, 19 ஜூன், 2020

உதி அளித்து கேன்சரை விரட்டிய சத்ய சாயி!


ஷிர்டி சாயியும் சத்ய சாயியும் ஒருவரே.
ஷிர்டி சாயி அளித்த உதியையே சத்ய சாயியும் அளித்து எப்படி புற்று நோயை விரட்டினார் என்பதற்கான அற்புத அனுபவம் இதோ.. 

திருமதி பானர்ஜி தனது கணவருடன் நீண்டகாலமாக புட்டபர்த்தியில் வாழ்ந்து வருகின்றார். சுவாமியுடன் அவளது இருப்பு, அவளது ஆறு மாத குழந்தை பருவத்தில் இருந்தே ஆரம்பித்து தொடர்கிறது. அவளது கனவில் சுவாமி அடிக்கடி வருகின்றார். தனது கரங்களால் அவளை ஒரு குறிப்பிடத்தக்க கருவியாகவே சுவாமி செய்துவிட்டு அநேகமாக அதன் மூலம் செய்திகளையும், கட்டளைகளையும் மற்றவர்களுக்கு தெரிவித்தார். இது ஒரு பிரத்தியேக சேவா!

பின்வரும் நிகழ்ச்சி 2013 ஜனவரி 5ஆம் தேதி அன்று நடந்தது. திருமதி பானர்ஜி தன் கணவர் மற்றும் நியூசிலாந்தில் இருந்து வந்த ஒரு தம்பதிகளுடன் முத்தன்னஹள்ளி  செல்ல தீர்மானித்திருந்தனர். ஆனால் விடியற்காலை சுவாமி கனவில் வந்து அன்று போக வேண்டாம் என்றும், அவளைத் தேடி ஒரு நோயாளி வருவார் என்றும் கூறினார். மேலும் அந்த நோயாளிக்கு உதியும் (விபூதி) தண்ணீரும் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும், உணவு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் அவள் எதிர்மறை எண்ணங்களால் தாக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அவளுக்கு நிறைய ஆக்கபூர்வமான வார்த்தைகளை பேசி உற்சாகம் கொடுக்கவும் சொன்னார். மிஷ்ரி க்யூப்ஸ் அவளுக்குக் கொடுக்க வேண்டும், தினமும் 3 மிஷ்ரி கியூப்ஸ் அவளது நாக்கிற்கு அடியில் வைக்க வேண்டும். ஒரு சிட்டிகை உதியை சிறிது தண்ணீரில் கரைத்து குடிக்கக் கொடுக்க வேண்டும். பொதுவாக சீரடி சாயி தான் விபூதிக்கு உதி என்பார். இப்பொழுது சத்ய சாயியும் அதே வார்த்தையை உபயோகிக்கிறார்.

காலை 10 மணிக்கு அவளது வாசலில் மணி ஒலித்தது. அவள் கதவைத் திறந்த பொழுது அவளது பழைய சிநேகிதி அஞ்சலி அங்கே நிற்கக் கண்டாள். அவளைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தாலும் அருகே நிற்கும் மெலிந்த ஒரு பெண்மணியைப் பார்க்க வருத்தமாக இருந்தது.
அவளது பக்கத்து வீட்டுப் பெண்மணி, 21 வயது தான் இருக்கும். கேன்சரால் பாதிக்கப்பட்டு அதிக நாட்கள் உயிருடன் இருக்க மாட்டாள் என தோன்றியது. கையில் ஒன்றரை வயது பெண் குழந்தை வேறு! ஹீமோதெரபியால்  முடி எல்லாம் கொட்டி இருந்தது! அவளை திருமதி பானர்ஜி பூஜை ரூமிற்கு அழைத்துச் சென்று, பகவானின் அற்புத சக்தியால் எல்லாம் குணமாக வாய்ப்பு  இருக்கின்றது என்று சொல்லி, இதுபோல் நிறைய பேருக்கு குணமாகி இருக்கின்றது என்று நம்பிக்கை கொடுத்தாள்.


2013 மார்ச் 9ஆம் திகதி மீண்டும் கனவில் வந்து சுவாமி அவளை பம்பாயில் ஒரு ஆஸ்பத்திரியில் சென்று செக் அப் செய்து கொள்ளுமாறு, விலாசமும் கொடுத்தார். அதன்படி அந் நோயாளியின் கணவரை திருமதி. பானர்ஜி பம்பாய்க்கு செல்லுமாறு கூறினாள். புட்டப்பர்த்திக்கு  வரும் முன் செக் அப் செய்தனர். பெண்ணின் உடல் முழுதும் கேன்சர் பரவி இருந்தது. ஆனால் பம்பாய் ஹாஸ்பிடலில் செய்த செக் அப்பில் கேன்சர் இருந்ததற்கான அறிகுறியே இல்லை! உதியும், பிரார்த்தனையும் முற்றிலுமாக அவளைக் குணப்படுத்தி விட்டது!

ஆதாரம்: Mother Sai's Miracles of Love | Published by Sri Sathya Sai students and staffs welfare society, Prasanthi Nilayam. 
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 

இறைவன் சத்யசாயியால் குணமடையாத நோய் எது தான் உள்ளது! பிறவி நோய் எனும் கொடிய நோயே அவரால் மட்டுமே குணமாகிறது.
நோய் என்பது துன்பம் எனும் புற்று கட்டியிருந்தால் அந்தப் புற்றை இடித்து ... உலகப் பற்றையும் இடித்து ஆன்மீக வாழ்வில் பக்தரைப் பயணிக்க வைப்பவர் இறைவன் சத்ய சாயி ஒருவரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக