தலைப்பு

புதன், 24 ஜூன், 2020

கூரையை வலுவூட்டிய சாயி கண்ணன்!


அண்ட சராசரத்தின் அஸ்திவாரமே இறைவன் சத்யசாயியால் தான் அசையாமல் இயற்கையோடு இசைந்து போகிற போது மனிதர் வாழும் வீட்டுக் கூரைகள் மட்டும் சாயி விருப்பமில்லாமல் தாங்குமா ? என்பதற்கான..  உத்தரவாதப் பதிவிதோ... 

ஒரு முறை காக்கிநாடாவிற்கு பாபா விஜயம் செய்த போது பெரிய கூட்டத்தை எதிர் கொண்டு பேச வேண்டி இருந்தது. தெரு  முழுதும் கூட்டம்  நிறைந்தது,   தெருவின் இரு பக்கமும் உள்ள வீட்டு கூரைகளின் மேல் மக்கள் கொத்து கொத்தாய் அமர்ந்திருந்தனர். 

பாபா முழு கூட்டத்தை நோக்கி பேச எழுந்தார், ஆனால் ஆரம்பிக்கு முன் கூட்டத்தின் சுற்றுவட்டாரத்தின் ஒரு பகுதியில் உள்ள கட்டிடத்தின் கூரைகளை மட்டும் 5 நிமிடங்களுக்கும் மேல் நன்றாகப் பார்த்தார். பிறகு பேச ஆரம்பித்தார், மக்களோடு உரையாடும் பொழுது, “நான் ஏன் 5 நிமிடங்களுக்கும்  மேலாக அவ்வாறு பார்த்தேன் தெரியுமா? இந்த வீட்டின் மேல் தளம் கட்டப்படும் போது இவ்வளவு சுமை அதன் மேல் வரும் என்று தெரியாமல் கட்டியிருப்பர், மரங்களின் கிளைகளின் மேல் கூட எவ்வளவு ஜனங்கள் அமர்ந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார்.


தன்னுடைய அருள் பார்வையாலேயே கூரைகள் மற்றும் தளங்கள் முறிந்து அல்லது இடிந்து கீழே விழாமல் பாபா பாதுகாத்ததில் ஆச்சர்யமில்லையல்லவா?. 
                                                                                                   
ஆதாரம்: Loving God – P -297
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 கோழி அடை காப்பதைப் போல் கடவுள் சாயி நம்மை அடை காக்கிறார்.. அவர் அடை காக்க... அடை காக்க அதிலிருந்து புனிதராய்த் தான் மனிதர் பொரிந்து வெளியே பொலிவு பெற்று உயர்வர். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக