தலைப்பு

புதன், 24 ஜூன், 2020

காளைக்கும் கருணை காட்டிய சாயி!


இரங்கியதால் தான் இறங்கினார் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயிபாபா. மனித உயிர்களுக்கு மட்டுமல்ல அந்த ஈவிரக்கம் சகல ஜீவ ராசிகளுக்குமானது என்பதை உணர்த்தும் பரிவான பதிவிதோ.. 


ஆரம்ப கால பிரசாந்தி நிலையம், ஸ்வாமி தம்மிடம் சற்றுமுன் விடைகொண்ட சில பக்தர்களை மீண்டும் அழைத்து வர ஆளனுப்பினார். பக்தர்கள் என்னவோ ஏதோ என்று ஏக ஆர்வத்துடன் திரும்பி வந்தனர். ஸ்வாமி அவர்களிடம், “ஒன்றுமில்லை. நீங்கள் இத்தனை பேரும் ஒரே வண்டியில் வந்திருக்கிறீர்கள். மாட்டுக்கு கஷ்டம். சாதாரண சாலையிலாவது பரவாயில்லை. சித்ராவதி மணலில் ரொம்பவும் சிரமப்படும். ஆகையால் ஆற்றுப் படுகை தாண்டுகிற வரையில் வண்டியிலிருந்து இறங்கி நடந்து செல்லுங்கள். இதைச் சொல்லவே கூப்பிட்டேன்” என்றார். ஸர்வ பூத தாயபரன்!!!


(ஆதாரம், ரா.கணபதி அவர்களின் ஸ்வாமி, அத்யாயம் – 5)


எப்பேர்ப்பட்ட இரக்கம்...
எப்பேர்ப்பட்ட கருணை...
எப்பேர்ப்பட்ட கரிசனம்.. சனம் என்பதை பல்வேறாய் பார்க்கிறது வெகுசனம்.. அதில் பேதம் கற்பிக்கிறது பொது சனம் ஆனால் பூலோக சனம் எல்லாம் ஒன்றே என்கிறது பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் கரிசனம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக