தலைப்பு

செவ்வாய், 23 ஜூன், 2020

கடவுள் சாயியே எழுதி அளித்த பிரார்த்தனைப் பாடல்!


கண்ணம்மா எனும் பழம்பெரும் பக்தை இறைவன் சத்ய சாயி முன் வந்து சுவாமி உங்களுக்கு இனி நிறைய பக்தர்கள் வருவார்கள்..
எங்களைப் போன்ற எளிய பக்தரை எல்லாம் ஒரு நாள் மறந்துவிடுவீர்கள்.
அதை நினைக்கும் போதே கண்ணீர் கண்களுக்குள் கட்டுப்படாமல் வெளியே தப்பித்து ஓடுகிறது எனக் கலங்கிச் சொல்ல..

சிரித்துக் கொண்டே.. இறைவன் சத்ய சாயி .. யார் சொன்னது நான் உங்களை மறப்பேன் என்று?

இதைப் பாடுங்கள்..
இதைப் பாடும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொண்டே இருப்பேன்.

சதா பக்த சிந்தனன் அல்லவா இறைவன் சத்ய சாயி...

இறைவனே எழுதி அளித்த பாடலும் அதன் அர்த்தமும் இதோ..


Marachithivemo madilo mammu Sai Natha prabhuva O sainatha
மறந்துவிட்டாயா ஓ சாயிநாதா
துறந்துவிட்டாயா இதயத்தில் எம்மை 

Marugu cherithimi mamudhari cherchamu
அதல பாதாளத்தில்  அமிழ்ந்திட்ட
எம்மை அரவணைத்திடுவாய் ஓ சாயிநாதா

maanitha Vara prabhuva sainatha kanava O Sai Natha prabhuva
வரம் தரும் பிரபஞ்ச வள்ளலே
எம்மிடம் வந்தருள் தந்திடு   
ஓ சாயிநாதா.     

vyaadhula thodan baadhala nondan vyadalam baduthe vidhiya maaku
எங்களின் கண்ணீர் எங்களின் பிணிகள் எங்களின் துன்பங்கள் நீ அறியாயோ? இவையோ  எம்விதி 
எனச் சொல்வாயோ ஓம் ஸ்ரீசாயி பகவானே.

Ee dhara paapambulu bhariyimpa velasithi vata Deva sainatha prabhuva
அகிலச் சுமையை தாங்குவதற்கு 
அவதரித்தாயே ஓ சாயிநாதா.

Aapadbhandavu danchu vintin
தீனர்கள் துயரம் துடைப்பவன் நீயே 
ஆபத்பாந்தவா  ஓ சாயிநாதா.

Aadharinchumani Vedu kontin
மன்றாடி வேண்டுவோம் காப்பாய் எம்மை சர்வேஸ்வரனே ஓ சாயிநாதா.

Maa pain nee krupachoopamu tantin
உந்தன் கருணையை எங்கள்மீது பொழிந்திடுவாய் ஸ்ரீ சாயிநாதா.

Mamu vidanadaga joochedava Sai Natha prabhuva
எங்களை ரட்சிக்க இயலாமல் போமோ
இயம்புவாய் நீயே ஓ சாயிநாதா.

பக்தி என்பது வேறொன்றுமல்ல..
இறைவன் நம் மீது கருணையோடு இருக்கிறார் .. அந்த கருணையின் பிரதிபலிப்பே நமக்கு அவர் மீது பக்தி ஏற்பட காரணம். மற்றபடி பக்தி என்பது சுய முயற்சி அல்ல..
அது பிறவிகள் தோறும் தொடர்ந்து தூய்மை அடைந்து கனியக் கூடியது!

அந்த பக்தியை தரும் இறைவன் சத்ய சாயி பாதார விந்தங்களை சரணாகதி அடைவதே பக்தியின் ஒரே இலக்கு

பாடல் தமிழாக்கம் : குஞ்சிதபாதம்
விரிவாக்கம்: வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக