(புட்டபர்த்தியில் வாழும் பக்தை பாலாம்பாள் உமாசங்கர் அவர்களுக்கு நிகழ்ந்த இறைவன் சத்ய சாயி அனுபவம்)
அந்த நாள்!!! நினைவவைவிட்டு அகலாத நாள்...... புட்டபர்த்தியிலிருந்து பெங்களூருக்குச் செல்ல ரயில் நிலையத்திற்கு விரைந்தேன் .. கையில் ஒரு suitcase , கைப்பை (handbag) மற்றும் சாப்பாடு நிறைந்த ஒரு சின்ன zip bag-உம் வைத்திருந்தேன்....... குறித்த நேரத்திற்கு முன் station வந்து சேர்ந்து விட்டேன்.......
அப்ப்பா!!!!!! சுத்தத்தின் இருப்பிடமாகவும் அமைதியின் சின்னமாகவும் விளங்கிய ரயில் நிலையத்தைப் பார்த்து வியப்பான வியப்பு!!! என்ன நிசப்தம்!!!!!
முதல் முறையாக புட்டபர்த்தி வந்து திரும்புகிறேன்.......... அந்த சூழ்நிலையில் பகவானை நினைக்கத் தூண்டியது......... ஊர் முழுவதும் அவரது ஆட்சி அல்லவா!!!! விளக்கமும் தேவையா???? சொல்லொணா மகிழ்ச்சி மனதில் கூத்தாடியது ... குறித்த நேரத்தில் ரயிலும் வந்தது....... பயணிகள் அதிகம் இல்லையாதலால் platform வெறிச்சோடி கிடந்தது.. நானும் விரைந்தேன்.ரயிலின் உள்ளே suitcase வைத்து விட்டேன். பிறகு உள்ளே ஏற எத்தனித்த போதுதான் அந்த நிகழ்வு நடந்தது... கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தோளில் மாட்டியிருந்த பை நழுவி படியில் விழுந்து விட்டது. படியில் இருந்த பையை எடுக்க குனிந்து எடுக்கும் போது பையின் கனம் அதிகமாக இருந்ததால் தண்டவாளத்தில் விழுந்து விட்டது.. அப்படி விழுந்த பையையும் handbag ஐயும் எப்படி எடுப்பேன்?? ரயில் கிளம்ப இடையில் சிறிது நேரமே இருந்த நிலை........ என்னுடைய compartment -இல் ஒரு சிலரே இருந்தனர்.. பாஷைத் தெரியாத ஊர்........ நான் ஸ்தம்பித்து நின்ற அதே நேரத்தில் தான் இரண்டு நபர்கள்.......... அதிலும் ஒருவர் சுருட்டை முடியுடன் சற்று பருமனாகவும்....... அடுத்தவர் சற்றே மெலிந்தும் காணப்பட்டார்.. ரயில் புறப்பட சில நிமிடங்கள் தான் இருந்தது..... அதனால் பதட்டத்தில் ""ரயிலை நிறுத்துங்கள் நிறுத்துங்கள் ???"" என்று கூச்சலிட்டேன்... அந்த இருவரும்..... என் பதட்டத்திலும் விழிபிதுங்கி பார்த்துக்கொண்டு இருந்ததையும் புரிந்துக்கொண்டு சுருட்டை முடியுடன் இருந்த நபர்..... சற்றும் தயங்காமல் தண்டவாளத்தில் இறங்கி பொருட்களை எடுக்க முற்பட்டார்.
எனக்கோ ரயில் கிளம்பி விட்டால் என்ன ஆவது??? ஐயோ??? தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக்கொண்டது........ எனது உடைமைகளை கொடுத்து விட்டார்......... பையை வாங்கி வண்டியில் வைத்துவிட்டு நானும் வண்டியின் உள்ளே ஏறன உடனே....... உயிரைப் பணயம் வைத்து செய்த செயலுக்கு நன்றியைத் தெரிவித்து பணமும் கொடுக்கலாம் என்று பார்த்தால் அந்த இரண்டு நபர்களும் காணவில்லை..... எங்கே போயிருப்பார்கள்???.. ரயிலும் கிளம்பி விட்டது....
மகிழ்ச்சி மனதில் கூத்தாடியது......
அய்யோ...நன்றியைக் கூடத் தெரிவிக்கவில்லையே........
பிளாட்பாரம் காலியாக இருக்கிறதே...
மனப்போராட்டம் பெரியதல்லவா!!.... மனக்குதிரை ஓடியது....... கண்களில் இருந்து நீர் வழிந்தவண்ணம் எனது இருக்கையில் அமர்ந்து விட்டு உதவி புரிந்தது யார் என்று யோசித்து"
"ஆபத்பாந்தவனான சாக்ஷாத் ஸ்ரீ சத்ய சாய் பகவான்" தான் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்........ உலகையே ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஸ்வரூபத்தின் கருணையை வார்த்தைகளால் அளப்பது அவ்வளவு சாத்தியமா என்ன?????.....
தொகுத்தவர் : சரஸ்வதி வெங்கட், புட்டபர்த்தி.
யாரோ மீட்டுத் தந்ததைப் போய் பாபா தான் செய்தார் என்கிறார்களே.. எப்படி நம்புவது என நினைக்கலாம்.
ரயில் நகரும் அந்த நொடியில் உயிரைப் பணயம் வைத்து உதவி செய்த பின் பெண்மணியும் அவர்களும் பார்த்துப் புன்முறுவல் புரிவது தான் மனித இயல்பு.
அந்த இக்கட்டில் உதவி செய்தவரும் சற்று ஆசுவாசப் படவே செய்வர். அந்த இடத்தை விட்டு ஓடிச் செல்லும் அளவுக்கு ஏதேனும் அவசரம் இருந்திருந்தால் அவர்கள் உதவி செய்யவே முன் வந்திருக்க மாட்டார்கள்.
கண்ணிமைக்கும் நொடியில் மீட்டுத் தந்து கண்ணிமைக்கும் நொடியில் காற்றோடு கலப்பது இறைவன் சத்ய சாயியால் மட்டுமே சாத்தியம்.
இறைவன் சத்ய சாயி கூப்பிடும் தூரத்தில் கூட இல்லை. நமக்குள்ளேயே நிரந்தரமாய் வசிக்கும் அவர் மட்டுமே அந்தர்யாமியும்... ஆபத்பாந்தவனும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக