தலைப்பு

வெள்ளி, 5 ஜூன், 2020

மாணவ சாயிக்கு பாடம் எடுத்த ஆசிரியரின் ஆச்சர்யக் குறிப்புகள்!


இறைவன் ஷிர்டி சாயியை தன் "முந்தைய மேனி" என்பார் இறைவன் சத்ய சாயி.

ஒரு விளக்கிலிருந்து அணைவதற்கு முன் இன்னொரு விளக்கில் ஏற்றப்படுகிற ஜோதி அதே பழைய ஜோதி தான்.
இரண்டு ஜோதிக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.
அது போல இறைவனின் இரண்டு ரூபங்களான ஷிர்டி சாயி - சத்ய சாயி.

உடை களைந்து மாற்றுடை அணிவது போல மனிதனின் மறுபிறவிகளும் (பகவத் கீதை கூற்று)
ஒரு விளக்கிலிருந்து இன்னொரு விளக்கிற்கான ஜோதி போல் இறைவனின் மறு அவதாரங்களும்...

நீ தான் சாய்பாபா என்றால் எங்களுக்கு நீரூபி எனும் போது கை நிறைய மலர்களைத் தரையில் தூவுகிறார் இறைவன் சத்ய சாயி. அவை "ஸாயி பாபா" என தெலுங்கில் வளைந்து நெளிந்து ஆச்சர்யங்களை அழைத்தன..

அவதாரங்கள் தொடர்கின்றன.. முந்தைய அவதாரம் ஷிர்டியில்.. அடுத்த அவதாரம் கர்நாடகாவில் பிறக்கப் போகிறது என்கிறார் பால சாயி.

பாபா எனும் இஸ்லாமிய ஆவி தான் பிடித்தாட்டுகிறதோ எனக் குழம்பினர்.
அப்பாவிகள் அவர்கள்.
போலி பூசாரியான மந்திரவாதி ஒருவனிடம் அழைத்துச் சென்றனர்.
அவன் படாதபாடு படுத்தினான் பரம்பொருளை. ஆழ்கடலாய் அமைதி காத்தார் ஆண்டவ சாயி.

காக்கவே செய்கிற சத்யசாயி கடவுள்
காக்கவும் செய்கிறார்.

இந்த சமயத்தில் தான் புக்க பட்டணத்தது ஆசிரியர்கள் இருவருக்கு குழந்தை இறைவனான சத்யா தன் பூர்வ அவதாரத்து சரிதத்தை மொழிந்திருப்பதும். அதில் ஓர் ஆசிரியர்  அதைக் குறிப்பெடுத்து அச்சேற்றி வைத்திருப்பதும் அவர்களே விஜயம் செய்து அறிவிக்க குழப்பம் தீர்கிறது.

"அவன் எனக்கு பிரகலாதனைப் போல ஆரம்பத்தில் காட்சி அளித்தாலும்.. சாதாரண குடும்பத்து பையனாக தோன்றவில்லை. அவன் செய்த அற்புதங்களைக் கேள்விப்பட்டும்.. கண்கூடாகப் பார்த்தும் மெய் மறந்திருக்கிறேன். அமானுஷ்ய ஆற்றல் பெற்ற பையனாகவும் .. சித்தபிரமை பிடித்தவனாகவும் தோன்றினான்.
தான் சாய்பாபா எனவும் .. தன் முந்தைய பிறவி சரிதம் கேட்டுவிட்டுப் போகும் படியும் அவன் தெரிவித்தான்" என்கிறார் ஆசிரியர் பி.சுப்பண்ணா சார்.

இன்னொரு ஆசிரியரான வி.சி. கொண்டப்பாவோ குழந்தை இறைவனான சத்யாவே சொன்ன ஷிர்டி சாயியின் பிறப்பு மற்றும் வளர்ப்பைக் குறிப்பெடுத்து "சாயிசுனி சரிதமு" என  தெலுங்கு புத்தகத்தில் 108 சுலோகங்களாய் எழுதி இருக்கிறார்.

(ஆதாரம் -- சத்யம் சிவம் சுந்தரம் - பாகம் 1. ஆசிரியர் ஸ்ரீ கஸ்தூரி சாய்ராம்)

ஆசிரியர்களை ஒப்புக் கொள்ள வைப்பது சாதாரண செயலல்ல..
அவர்களிடம் ஆராயும் புத்தி உண்டு.
இறைவனை அனுபவிக்க மட்டுமே முடியுமே தவிர ஆராய ஆரம்பித்தால் அனுபவிப்பதற்கு அது தடையாகிப் போகிறது.

ஆனால் கொடுத்து வைத்த இந்த இரண்டு ஆசிரியர்களோ சத்யாவே ஷிர்டி சாயி எனத் தன்னுணர்வு ஏற்பட்டவர்கள்.

அதில் ஒருவர் சுலோகங்களே எழுதி வைத்திருக்கிறார் எனில் சாதாரண செயலே அல்ல...

"ஏதேதோ சொல்லாதே .. போய் ஒழுங்காய்ப் படி.. வீட்டுப் பாடம் செய்தாயா?.. இந்த இடத்தில் க் வரவேண்டும்.. உன் கையெழுத்தும் கோழிக் கிறுக்கல்..  நீ வாங்குவதும் கோழி முட்டை" என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தும் ஆசிரியர்களுக்கு மத்தியில்

இறைவன் சத்யசாயிக்கு மட்டும் ஆசிரியர்கள் மிக வித்தியாசமான .. தெய்வீகமான ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.

சாயி சங்கல்பமே அது.

ஆசிரியர் சொல்வார் மாணவர்களாகிய நாம் குறிப்பெடுப்போம்.  ஆனால் இங்கே மாணவ சாயி சொல்ல ஆசிரியர் குறிப்பெடுத்திருக்கிறார்.

சத்யாவே (சத்யசாயியே) ஷிர்டி சாயி என்ற பேருணர்வு ஏற்பட்டால் ஒழிய இந்த அற்புதம் நிகழுமா?

அது தான் இறைவன் சத்ய சாயியின் மகத்துவம்.

சத்தியம் வளரும்

பக்தியுடன்
வைரபாரதி ✍️ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக