தலைப்பு

வெள்ளி, 19 ஜூன், 2020

பிறப்பே சர்வ துக்கங்களுக்கும் காரணம்!


பேதம் காண்பவர்களுக்கு எல்லாம் இறைவன் சத்ய சாயி உணர்த்துகின்ற வேதம் இதோ.. 

இயற்கையோடு கொள்ளும் உறவுதான் தனித்தன்மை தோன்றச்செய்து இருமை தத்துவத்தை உண்டாக்குகிறது. ஒருவன் காண விழைய வேண்டியது இறையுடனான ஒற்றுமையைத்தான் அதை உணர்வதற்கான முறையினை பகவத் கீதையின் 12வது பாகத்தில் உண்மை பக்தனின் குணங்களாக கூறப்பட்டுள்ளது. தலையாய தேவை பிற உயிர்களிடத்து வெறுப்பு இன்மை. "அத்வேஷ்டாஸ் ஸர்வ பூதானாம்" (எல்லாம் அரவணைக்கும் பேரன்பை வளர்த்துக் கொள்). பிறருக்கு இன்னலிழைப்பதை தவிர்க்கவும். பிறரைப் பற்றி தவறாய் பேசாதீர்கள். அகங்காரமும் தற்பெருமையும் தவிர்க்கவும். எண்ணத்திலும் பேச்சிலும் இயக்கத்திலும் தூய்மை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தற்பெருமையின் பிறப்பிடம் எது? அறிவா? இந்த அறிவு என்பதென்ன? அது அறியாமையே. அறியாமையின் காரணம் என்ன? இருமை உணர்வே. இருமையில் நம்பிக்கை எங்கி வருகிறது. இராகத்துவேஷத்திலிருந்து (விருப்பு வெறுப்பிலிருந்து) இவை எதிலிருந்து எழுகின்றன? அவை சூழலினால் உருவாவன. சூழல் எவ்வாறு அமைந்தது? அவரவர் முன்வினை (கர்மா) காரணமாய். முன்வினையின் காரணம் என்ன? பிறப்பே காரணம். அப்படி என்றால் பிறப்பே அனைத்து துயரங்களுக்கும் காரணம் என்பது தெளிவு. எனவே பிறப்பினின்றும் விடுதலை பெற்றால் மட்டுமே துன்பத்தினின்றும் விடுதலை பெற இயலும். மனிதப்பிறவியின் பயனை இந்த மேலான இலக்கை அடைய பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகளை சிறுவயது முதலே சரியான பாதையில் செலுத்த வேண்டிய கடமை பெற்றோரை சார்ந்தது. பிள்ளைகள் தவறான பாதையில் செல்ல எத்தனிக்கையில் திருத்தவோ தண்டிக்கவோ கூடத் தயங்கக்கூடாது. பாசத்தைக் காட்டுவதற்கான சிறந்த முறை அவர்களை சரியான பாதையில் செலுத்த ஆவன செய்வது என்பதே. திருத்தத்திற்கப்பாற்பட்ட பிள்ளையானால் தள்ளி வைக்கவும் அஞ்சுதல் கூடாது. தீய புதல்வர்கள் ஒரு கூட்டம் இருப்பதை விட ஒரே ஒரு மேன்மையான மைந்தன் இருப்பதே மேல்.

ஆதாரம்: Sathya Sai Speaks Volume 17 

விருப்பு வெறுப்புகளை இறைவன் சத்ய சாயி பாதமான துறப்பினை தாங்கிப் பிடித்தால் பேதம் என்ற அழுக்குகளிலிருந்து பரிபூரணமாக விடுபட்டு பரிசுத்தமாவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக