தலைப்பு

புதன், 3 ஜூன், 2020

யாவரின் வாழ்விலும் அற்புதம் செய்யும் சாயி!


நம்முடைய சத்ய சாய் யுகம் வாட்ஸ் அப் குழுவைச் சேர்ந்த திரு. காமராஜ் அவர்களின் கட்டுரை பகிர்வு.. 

ஓம் ஸ்ரீ சாய்ராம்..! இப் புனித நாமத்தை உச்சரிக்காத நாவுகள் இல்லை..! நாடுகளும் இல்லை..!

உன் அற்புதங்களை அறிந்த நாள் முதல் உனைத் தரிசிக்க புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்திற்கு வந்து மணிக்கணக்கில் நாள்கணக்கில் காத்திருந்த கோடானுகோடி சாயி பந்துக்களில் யானும் ஒருவன்..!

உனது எழுபதாவது அவதாரத் திருநாளில் காவடி எடுத்தத் தமிழ்நாட்டுச் சேவகர்களில் எனக்கும் ஓர் நல் வாய்ப்பு கிட்டியது..! என் போன்ற உனது விசுவாசிகளுக்குத் தமிழ்க்கடவுள் திருமுருகனின் வடிவில் நீ காட்சி தந்ததை என் வாழ்நாளில் இனி என்றும் மறக்க இயலாது..!

இரண்டு அவதாரத்திருநாள் திருவிழா நாட்களில் பிரசாந்தி நிலையத்தில் சாயி சேவதளத்தொண்டர்களுடன் தங்கி இருந்து புட்டபர்த்தியில் சேவை புரிந்த மனநிறைவும் சென்னை திருவான்மியூரில் நீ நிகழ்த்திய மாபெரும் யாக வேள்வித் திருவிழாவிலும் கலந்து கொண்டு சேவை புரிந்த நல் பாக்கியமும் உன் அருளாசியினால் எனக்குக் கிடைத்தது..!

மங்களம் பல நிகழ்த்த வந்த எங்கள்
ஸ்ரீசத்யசாயி
மங்கல்யானிலும் நின் வருகையின் அற்புதம் குறித்த வரலாற்றுச் செய்தியை ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரக வாசிகள் அறிந்திருக்கக்கூடும்..!

உனை ஈன்றெடுத்தப் பெருமைமிகு
ஈஸ்வராம்பாளின் கட்டளைகள் அனைத்தையுமே நீ பூர்த்தி செய்து விட்டுப் புதிய அவதாரமாம் பிரேம சாயியாக மீண்டும் இம் மண்ணில்
எங்களின் துயர்தீர்க்க நீ அவதரிக்கும்
அப் புனித நாளை ஆவலுடன் நாங்கள்
எதிர் நோக்கிக் காத்திருக்கின்றோம்..!

எத்தனையோ அரசியல் தலைவர்களும் அயல்நாட்டுப் பிரமுகர்களும் நினைச் சரணடைந்த காரணத்தினால் அவர்களின் வாழ்க்கைச் சரிதம் புனிதம் ஆனது..!

உன்னை கொடைக்கானலில் ஒரே ஒருமுறைதான் தரிசித்தாள் எனைப் பெற்றதாய்..!

கடந்த நவம்பர் 23 நீ அவரித்தத் திருநாளில் பெருமைமிகு நின் திருவடியில் சேர்ந்தாள்..!

எனைப் போன்று யார் யார் வாழ்வில் நீ என்னென்ன அதியற்புதங்கள் நிகழ்த்தி இருக்கின்றாயோ?

அதையெல்லாம் அறிந்து கொள்ள இந்த ஒரு பிறவி போதாது..! சாய்ராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக