அன்பே மனிதனின் இயல்பு..இயற்கை குணம் அதை விட்டு விலகுவதே செயற்கைத் தனம்.. இயல்பாய் இயற்கையாய் வாழ்வதையே இறைவன் சத்ய சாயி அனைவரிடத்திலும் விரும்புகிறார் என்பதை இதோ இறைவனே..
சன்யாசி ஒருவர் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தார். நீரில் ஒரு தேள் மிதப்பதைக் கண்டார். 'தேள் என்ற வடிவத்திலும் பெயரிலும் அடைபட்ட தெய்வம் இது' என்பதாக அவர் உணர்ந்தார். அதை அவர் காப்பாற்ற விரும்பினார். உள்ளங்கையில் எடுத்ததும் அது நறுக்கென்று கொட்டியது, கையை உதறினார்.தேள் நீரில் விழுந்தது. அவருக்கு வருத்தமாகிவிட்டது. அதை மீண்டும் கையில் எடுத்தார். இப்படி அவரை அது ஐந்தாறு முறை தேள் கொட்டியது. ஒரு வழியாக இறுதியில் அவர் தனது கருணைச் செயலில் வெற்றி பெற்றார்.தேள் தரையில் போய் விழுந்து உயிர்தப்பி சந்தோஷமாக ஓடிப்போனது.
அந்த விடாமுயற்சியைக் கண்டவர்கள் அவரது மிதமிஞ்சிய கருணை என்ற'முட்டாள்தனத்தை' எள்ளி நகையாடினார்கள். "தேள் எனக்கு ஒரு பாடம் கற்பித்தது.அதற்கு நான் நன்றிக்கடன் படுகிறேன்"என்றார் சன்யாசி. "அது என்ன?" என்றார்கள். மக்கள் எதுநடந்தாலும் உனது உள்ளார்ந்த இயல்பைக் கைவிடக்கூடாது என்பதுதான் அந்தப்பாடம். யாரானாலும், எப்போதானாலும் கொட்டுவது அதன் இயல்பு. மனிதனின் இயல்பு மெய்ஞானம் அடைவது.மனிதனின் ஆதாரம் ஆனந்தம். அன்புதான் அவனைக்காக்கும் ரத்தஓட்டம். சாந்தி என்னும் கண்ணோட்டம் அவனை வழிநடத்தும். அதனால்தான்அவனை உபநிஷதங்கள், "அம்ருதஸ்ய புத்ர"என அழைக்கின்றன. அவன் அமரத்துவத்தின் புதல்வன்.அவனுக்குப் பிறப்பில்லை, மரணமில்லை" என்றார் அவர்.
ஆதாரம்: Chinna Katha: Stories and Parables, Revised and Enlarged, Quoted from the Divine Discourses of Bhagavan Sri Sathya Sai Baba
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக