தலைப்பு

வெள்ளி, 26 ஜூன், 2020

வேண்டுவது இதயத்திலிருந்து வேண்டும்.. உதட்டளவில் அல்ல!


இறைவனை எப்படி பிரார்த்தனை செய்வது..? எவ்வகையில் வழிபடுவது ..? என்பதை பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியே விவரிக்கிறார் இதோ...

இதயத்திலிருந்தே வேண்டுதல் புரிய வேண்டும் உதட்டளவில் இல்லை...
ஆனால் இப்போதெல்லாம் பல சாதகர்கள் ஆன்மீக வழி நடப்பது போல் பாவனையே செய்கிறார்கள். அவர்கள் இறைவனுக்கு கொடுக்கும் விண்ணப்பங்கள் உதட்டளவில் எழுவனவே அன்றி இதயத்திலிருந்தல்ல. ஒருவேளை உதட்டளவு வேண்டுதலுக்குட்பட்டு கடவுள் அவர் முன்னே  தோன்றி அவர் கேட்ட முழு விடுதலை கொடுக்க முற்பட்டால் அவர்கள் கைகால்கள் உதறி நடுநடுங்கிப் போவர். “ஐயா! நான் கேட்ட முழு விடுதலை ஒரு கணக்கில் அடங்குவதாகும். இப்படி கணக்கிலும் எண்ணத்திலும் அடங்காதது அல்ல. எனது  மனைவி, மக்கள், மாடு, செல்வம் எல்லாம் விட்டு உடனடி முழு விடுதலை வேண்டுவதில்லை. நான் அதை ஆண்டு அனுபவித்த பிறகு அதை ஏற்றுக்கொள்கிறேன். அதுவரை அதை சற்று தள்ளி வையும். இதுவே எமது விண்ணப்பம்''.


ஒரு விறகு வெட்டிக்கு சிறிது அதிக பணம் தேவைப்பட்டதால் அன்று அவன் சற்று அதிக அளவு விறகுகளை வெட்டி கட்டி வைத்தான். சுமை கூடுதலாதலால் எவரேனும் காட்டு வழி வந்தால் சுமையை தலைமேல் ஏற்ற துணை கொள்ளலாம் என்றிருந்தான். தனது வறுமையை நினைத்து மனம் நொந்தான். மரணத்தின் தேவனாம் எமனை நினைத்து வருகிறான். "ஏன் என்னை மறந்தனை. அழைத்துச் செல்லும். என் துயரம் தீரட்டும்.


எமன் வந்து சொன்னான் "வா, நான் உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்" என்றான். விறகுவெட்டி பதறிக் கூறினான் "இவ்வளவு விரைவாய் வேண்டாம் நண்பரே. இந்த சுமையை என் தலைமேல் ஏற்ற ஒரு கரம் கொடுத்து  உதவுவீரா?

இந்த சாதகர்கள் கடவுளோடு பேரம் பேசுகிறார்கள். தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொடுத்திடவும் செல்வம் செழித்திடவும் கடவுளை வாழ்த்துகிறார்கள்.

காணிக்கைகளால், பணமாய், தேங்காய் பழங்களாய், முடியாய் கொடுத்து கடவுளை திருப்தி செய்ய எண்ணுகிறார்கள். இவையெல்லாம் இவர்களது சாமர்த்தியத்தால் உண்டானதாய் எண்ண வேண்டாம். அப்பழுக்கற்ற அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் காணிக்கையாக்குங்கள். மனிதன் அன்பின் பெருமையையும் சக்தியையும் வீச்சையும் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அது 'டன்' கணக்கிலான புத்தக அறிவையும் பல யோசனை தூரமுள்ள பட்டங்களின் அணி வகுப்பையும் விட எல்லாம் சிறந்தது. இவற்றையெல்லாம் வாழ்வு என்னும் தராசின் ஒரு தட்டில் வைத்து விட்டு மறு தராசில் இறையன்பின் ஒரு துளியை வைத்தாலும் அந்த ஒரு துளி மற்ற குப்பைகளைக் காட்டிலும் கனமானதைக் காண்போம்.

ஆதாரம்: Sathya Sai Speaks Volume 17 


🌻எவ்வளவு சத்திய வார்த்தை பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி சொல்வது.
அதை உள்ளூற உணர்ந்து கொண்டு உளமாற பக்தியில் உறைவோம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக