தலைப்பு

சனி, 6 ஜூன், 2020

செவித் திறனை மீட்டுத் தந்த சத்யசாயி!


உடல் சார்ந்த பிரச்சனையோ ... மனம் சார்ந்த பிரச்சனையோ பயப்படவே செய்யாமல் பரம்பொருள் சத்யசாயியிடம் ஒப்படைத்துவிட்டு சரணாகதி அடைந்துவிட்டால் அவர் யாவற்றையும் கவனித்துக் கொள்வார் என்பதற்கான ஓர் பரவசப் பதிவு இதோ...

பகவானின் இந்த லீலை,  Dr. சிவ செந்துராம் M.B.B.S, B.Sc.,  FRCA, FCICM – (டவுன்ஸ் வில்லே, ஆஸ்திரேலியா) அவர்களால்  பகிரப்படுகிறது.   ஆஸ்திரேலியாவில் காலேஜ்  ஆஃப்  இன்டென்ஸிவ் கேர்   மருத்துவத்துறையில் உயர் பதவி வகித்து வந்தார். 2012  October 10 ஆம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பியவர், தனது மகன் 7 வயது  ஹரி காது கேட்காமல்  போனதை அறிந்தார்.  அவருடைய  மனைவி லக்ஷ்மி, மகன் ஹரி கொஞ்ச நாட்களாகவே  காது பிரச்சனை  பற்றி சொல்லிக்  கொண்டே இருக்கிறான். ஓய்வு பெற்ற எலும்பு நிபுணரான, சிவாவின் தந்தை ஹரியின் காதை நன்கு பரிசோதித்து செவிப்பறை (drum)  நன்றாக உள்ளதாகச் கூறினார், காது குருப்பு (wax) கொஞ்சம் அடைத்திருக்கலாம் என்று அதையும் சுத்தம் செய்தனர்.   சிவாவும் காதை ஓட்டோஸ்கோப்பின் உதவியுடன் பார்த்தார். சரியாக இருப்பதாகத்தான் தெரிந்தது. 

 ஹரியின் கேட்கும் திறனை சிவா கிசு  கிசுப்பாகப் பேசிப் பார்த்தும், ட்யூனில்   ஃபோர்க் மூலம் சோதித்தும்  பார்த்ததில்  வலது காது மட்டும் கேட்கவில்லை என்றான். இது மிகவும் அசாதாரணமானது ; சில சமயம்  காதில் கட்டி இருந்தால் இந்த குறைபாடு வரலாம் என்று கருதப்பட்டது. சிவா செய்வதறியாது பாபாவின் படத்தைப் பார்த்து வணங்கினார். ஹரி யிடம் பகவான் மேல் நம்பிக்கை வைத்து,  ஒரு நண்பனைப் போல் கருதி பிரார்த்திக்கச் சொன்னார்.  அது ஒன்றே வழி என்றார். சிவா இறைவனிடம்,  அற்புதமான குழந்தைகளைக் கொடுத்தமைக்கும், அவர்களை வளர்ப்பதற்கு வேண்டிய வசதியைக் கொடுத்தமைக்கும் நன்றி கூறி, இந்தக் குறையையும் தீர்க்குமாறு வேண்டினார். 

அன்று இரவு சிவா மிகவும் மனத்தாக்க முற்றார் “எங்கள் குறைகளை உங்களிடம் வந்து சொல்ல நீங்கள் ஸ்தூல ரூபமாகக் கூட இல்லையே ஸாயி!    நாங்கள் என்ன செய்வோம்“ என்றார்.   இரவு தூங்கவே முடியவில்லை. அவருள் ஒரு குரல் கேட்டது. மருத்துவ சோதனை அனுமானம் (diagnose) மாறிவிட்டது. 

“நீ நான் உனக்கு அளித்த பணியை செய், நான் பார்த்துக் கொள்கிறேன்”.   என்பதாகக் கேட்டது! சிவாவிற்கு ஒன்றும் புரியாவிட்டாலும். 20 வருடம் ஸாயியுடன் இருந்த அனுபவத்தில், வருவதை ஏற்றுக் கொள்வதே சரி, வேறு எதையாவது வேண்டுவதை விட என்பது புரிந்திருந்தது.

ஹரியின் கேட்கும் திறன் மீட்கப்பட்டது:

மறுநாள் காலையிலும் ஹரிக்கு அப்படியே தான் இருந்தது. “அவர் கருணை கிட்டிவிடும்” என்று எண்ணியபடி வேலைக்குச் சென்றுவிட்டார்.  லக்ஷ்மி  ஈ.என். டி (ENT) யிடமும், செவித்திறன் நிபுணரிடம் அழைத்துச் சென்று எல்லா சோதனைகளையும் செய்து  பார்த்தாள் எல்லாம் சரியாக இருந்தது!  டாக்டர்கள் சில குழந்தைகள் இல்லாததை இருப்பது போல் (Psycosomatic) சொல்வர் – என்றனர்.   ஆனால் ஹரி அப்படிப்பட்ட விவரமற்ற குழந்தை அல்ல.  காது தொந்தரவு இருந்து கொண்டே இருந்து சமீபமாக தீவிரமடைந்து, ஒரே இரவில் குணமடைந்தது எனில் இறைவன் சத்ய சாயி அனுக்ரஹமே!  சிவா வாயடைத்து நன்றியுணர்வில் திளைத்தார். மாலை உள்ளூர்  பஜனுக்குச் சென்றார், இரவு பாபாவிடம்  நன்றி கூறியவண்ணம் உறங்கச் சென்றார். 

மறுநாள் யதார்த்தமாக இச் சம்பவத்தை தனது ஹாஸ்பிடலின் நிலை மருத்துவரிடம் விவரித்த போது, அவர் கேட்டு முடித்து விட்டு பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டார், ஏனெனில் அவருடைய மனைவிக்கு காதில் திடீரென்று கேட்கும் திறன் நின்று விட்டது. ஆனால் காது நிபுணர்கள் அது உட்காதி தொற்று ஏற்பட்டுள்ளது என்று சாதாரணமாக சொல்லிவிட்டனர், இன்று வரை அவளுக்கு காது கேட்கவில்லை என்றார்!.

டாக்டர் சிவா இன்னொரு அற்புதத்தையும் விவரித்தார். அப்பொழுதும் பகவான் இவரது பிரார்த்தனைக்கு செவி சாய்த்து அருளினார். சிவாவின் குடும்பம் யு.கே.யில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் பொழுது புறப்படுவதற்கு சில நாட்கள் முன்பு அவரது தாய் பயங்கரமான உடல் உபாதை அடைந்தார்.  இவரது அறைக்கு வந்து அழ ஆரம்பித்து விட்டார்,  தனக்கு என்ன செய்கிறது என்று கூட  சொல்ல முடியவில்லை. பேச்சு வரவில்லை! அவரை அணைத்து ஆறுதல் சொன்ன சிவா ஸ்வாமியிடம் வேண்டினார், புட்டபர்த்தியில் இருந்து வந்த விபூதியை அம்மாவிற்கு இட்டு, உடனேயே அம்மாவிற்கு சரியாக ஆரம்பித்துவிட்டது!. நியூராலலிஸ்ட்- நரம்பியல் நிபுணரிடம் காண்பித்து, TIA  பாதிப்பு இருக்கிறதா எனப் பார்க்க scan- ஸ்கேன் எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நார்மல் என்று காண்பித்தது. அது முதல் அம்மாவிற்கு எந்த உடல் கோளாறும் வரவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா? 2004 ல் UK புறப்பட்ட பொழுது, தான் இல்லாத நேரம் தன் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென பிரார்த்தித்தார்.

தான் கவனித்துக் கொண்டதைவிட அதிக அக்கறையுடன் ஸாயி கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை சிவா உணர்ந்தார். ( அருகில் இல்லாத போதும்
ஸாயி  வெகு தூரத்திலிருந்து தன் பக்தர்களைக் கவனித்துக் கொள்வார்) .
                                                             
ஆதாரம்:  Dr. Siva Sethuram, Personal Narration.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

இந்த உடல் என்பது இறைவன் சத்யசாயியின் இயந்திரமே .. அவரிடம் உடல் .. பொருள் ஆவியை ஒப்படைப்பதே உன்னதமான பக்தி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக