தலைப்பு

ஞாயிறு, 7 ஜூன், 2020

பாபாவையே கேள்விப்படாத பெண்மணிக்கு பாபா நிகழ்த்திய அற்புதம்!


சத்ய சாயி யார்? எப்பேர்ப்பட்ட இறைவன் அவர்.. எத்தகைய பரிபூரண அவதாரம்.. என்பவை எதுவுமே தெரியாத ஒரு பெண்மணிக்கு இறைவன் சத்ய சாயி நிகழ்த்திய அற்புதத்தையும் அதனால் தீர்ந்து போன அவரது பிரச்சனையையும் அவரே எழுத்து வடிவில் பாக்கிய வாக்குமூலமாய் தருகிறார் இதோ...

 இந்த அற்புதம் நிகழ்வதற்கு முன்பு வரை எனக்கு ஸ்ரீ பகவானைப் பற்றி எதுவுமே தெரியாது. ஷிர்டி பாபா பற்றி கூட எதுவுமே அறியாது தானிருந்தேன். 

ஷிர்டி சாயி தான் சத்ய சாயி என்பதும்.. அவரே பகவான் கிருஷ்ணரின் மறு அவதாரம் என்ற எந்த அறிதலும், உணர்தலும் அற்றவளாய் தான் வாழ்ந்து வந்தேன்.. ஆம்! சுமார் 15 வருடங்களுக்கு முன்னர்.சென்னை மேற்கு மாம்பலத்தில் எனக்கு சொந்தமாக ஒரு flat இருந்தது. அதனை விற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதுவும் ஒரு மாதத்திற்குள் விற்றால் தான் முடியும்.அப்படி முடியவில்லை என்றால் பின்னர் அதனை விற்கவே முடியாது என்ற ஒரு சூழ்நிலை.மனதில் குழப்பம்....நினைவில் நடுக்கம்....                           

வாரநாளிதழ்களிலும்,தினசரி, பத்திரிகைகளிலும் , அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாசலிலும் விளம்பரம் செய்து, நண்பர்களிடமும் சொல்லி வைத்தும் நாட்கள் நகர்ந்தது தான் மிச்சம். எனினும் வீட்டைப் பார்க்கக்கூட யாருமே வரவில்லை.   இந்த நிலையில் மனவேதனையும், பயமும் என்னை மாற்றி மாற்றி ஆட்கொண்டன. அந்த சமயத்தில் தான் ஒரு தம்பதியர் என் வீட்டிற்கு வந்தனர். "இதுதான் நீங்கள் விற்கபோகும் வீடா??" என்று கேட்டனர். ஆமாம்.நீங்கள் யார்? விளம்பரங்களைப் பார்த்து வந்தீர்களா? என்று கேட்டேன். பிறகு உள்ளே வந்து உட்காரச் சொன்னேன்.

"நாங்கள் புட்டபர்த்தி  சென்று பகவானை தரிசனம் செய்து .. அவருடன் interview முடித்துவிட்டு  நேராக இங்கு வந்துள்ளோம்.."என்றார்கள்... அப்படியா !!!! எந்த விஷயமாக பார்க்க வந்தீர்கள்??? என்று கேட்டேன்...                         
அதற்கு அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டவுடன் எனக்கோ மின்சாரம் தாக்கியது போல் அதிர்ச்சி. அப்படியே உறைந்து போனேன். பேச்சு வராமல் தொண்டையில் ஒரு பரவச உணர்வு அடைத்தது.. கண்ணின் ஓரம் இனம் புரியாத ஈரம் எட்டிப் பார்த்தது...

அவர்களோ...  "மதுரையில் ஒரு நிலம் விலைக்கு வந்துள்ளது..அதை வாங்கலாமா??? என்று ஸ்ரீ பகவானிடம் கேட்டோம்........
அதற்கு ஸ்ரீ பகவானோ... "வேண்டாம்......நேராக சென்னைக்கு செல்லுங்கள்..... அங்கே மேற்கு மாம்பலத்தில் ரயில்வே station ற்கு (வலது பக்கத்தில்) அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்குச்சென்று. Ground floor இல் ...5 ஆம் எண் உள்ள வீடு விலைக்கு வந்துள்ளது... அதை நீங்கள் வாங்கி விடுங்கள் ...." ( முழு விலாசத்தையும்  ஸ்ரீ பகவான் விளக்கமாக சொல்லி அனுப்பியுள்ளார் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.) என்று உத்திரவிட்டார்.......... அதனால்தான் நாங்கள் புட்டபர்த்தி யிலிருந்து நேராக இங்கு வந்துள்ளோம்.என்றார்கள்..........   

நான் சொன்ன விலைக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் பணத்தைக் கொடுத்து வீட்டை மிகவும் சந்தோஷமான ஒரு மனநிலையில் வாங்கிக் கொண்டார்கள்...     
ஸ்ரீ பகவானைப் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு .....அவரது அனுக்ரகத்தைக் கொடுத்து. மீளாத துயர நிலையிலிருந்த என்னைக் காப்பாற்றிய அந்த தெய்வத்தை... அந்த பரிபூரணத்தை... அந்தப் பரம் பொருளை... அன்று முதல் இன்று வரை 'நீயேகதி' என்று என் இதயத்தில் வைத்து பூஜித்து வருகிறேன்...
 இப்போது அவரின் ஜனன பூமியான புட்டபர்த்தியிலேயே வாழ்கின்ற ஒரு பாக்கியமும் அந்த கருணா மூர்த்தியே வழங்கி இருக்கிறார்.
  அந்த அற்புத இறைவன் நடமாடிய காற்றையே சுவாசித்து வருகிறேன்...     எங்கும் ஸாயிமயம்.🙏🙏🙏எதிலும் ஸாயிமயம்🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சாய்ராம்...🙏🙏🙏 ஜெய்சாய்ராம்..🙏🙏

ஸ்ரீ ஸத்யஸாய் பகவானின். திருப்பாதங்களை வணங்கி.இந்த நிகழ்வை சமர்ப்பிக்கின்றேன்.

-சரஸ்வதி வெங்கட். 
புட்டபர்த்தி.

எத்தகைய அற்புதம் இவை.. தன்னைப் பற்றித் தெரியாத... தன்னை நினைக்காத.. தன்னை கண்டு கொள்ளாத.. தன்னை வழிபடாத மனிதர்க்கும் இரங்கி அருள் புரிகிற தனிப்பெருங்கருணை உள்ள ஒரே கடவுள் சத்ய சாயி..
தன்னை நிந்திப்பவரையும் அரவணைப்பதே இறைவனின் அடிப்படை சுபாவம்.. அத்தகைய அருட்பெரும் இறைவனே சத்ய சாயி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக