தலைப்பு

செவ்வாய், 9 ஜூன், 2020

பாபாவின் தரிசனமே ஆனந்தம் - 'பாரத ரத்னா' பண்டித் பீம்சேன் ஜோஷி


இறைவன் சத்யசாயிக்கும் பிரபல பாடகர் பாரத ரத்னா பீம்சேன் ஜோஷிக்குமான பக்த பந்தம் பற்றியும்.. இறைவனுக்கும் ஒரு பரம பக்தனுக்குமான பரம்பொருள் பிணைப்பை ஒரு நேர்காணலின் வழி அவரே விளக்குகிறார் இதோ...

பாபாவுடனான என்னுடைய முதல் சந்திப்பு புகழ்வாய்ந்த பாடகி திருமதி. ஹீராபாய் பரோடேகர் இல்லத்தில் நடந்தது. நம் இதய தெய்வமான பாபாவின் முன்னிலையில் நான் பாடினேன். அதன் பிறகு எனக்கு அடிக்கடி புட்டபர்த்தி சென்று பாபாவைத் தரிசிக்கும் வாய்ப்புகளும் அவர் முன்னிலையில் பாடும் வாய்ப்புகளும் கிடைத்தன.

கேள்வி: எப்பொழுது நீங்கள் பாபாவின் தெய்வீக சக்திகளை உணர்ந்தீர்கள்?

பதில்: நான் பாபா எனக்குள்ளேயே நடத்திய லீலைகளைக் கண்டுள்ளேன். நம் சுவாமி நிறையப் பொருட்களை  சிருஷ்டித்துப் பக்தர்களுக்குப்  பரிசாக வழங்குவதைக் கண்டுள்ளேன். நான் எப்பொழுதும் அவரின் தெய்வீக சக்தியை அனுபவித்துள்ளேன். எப்பொழுதுமே நான் பாபாதான் இறைவன் என்பதை உணர்ந்திருக்கிறேன். அவரது ஆசிர்வாதங்களைப் பெற்ற நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.


எப்பொழுதெல்லாம் நான் பாபாவிடம் முக்கியமான  கேள்விகளுடன்  செல்கிறேனோ அப்பொழுதெல்லாம் பாபா நான் கேட்குமுன்னே பதிலளித்து விடுவார். இப்பொழுதெல்லாம் நான் கேட்பதில்லை. பாபாவே என்னிடம் , “உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்க, “எனக்கு எப்பொழுதும் தங்களின் அன்பும், ஆசிர்வாதமும்  வேண்டும்” எனக் கேட்கிறேன். நம் பாபா மிகச்சிறந்த அதிசயிக்கத்தக்க ஆற்றல் உள்ளவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஏழைகளின் நலனுக்காக இலவச மருத்துவ வசதி, இலவசக் கல்வி வசதி, இலவசக் குடிநீர் வசதி என  நம் பாபா செய்கின்ற சேவைகளே அவரின் மிகப்பெரிய அற்புதங்கள்.


கேள்வி: பாபா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு எவ்வாறு ஆசிர்வதித்துள்ளார்?
என்பதை கேட்கும் போது பீம்சென் ஜோஷியோ தனக்கு நிகழ்ந்த ஒரு பேரற்புதத்தை விளக்குகிறார்...

1988ம் ஆண்டு எனக்கு ஒரு ஆரோக்ய பிரச்சினை வந்தது. மூளையில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதும் மிகுந்த கலக்கம் அடைந்தேன். பூனேயில் ஜேபி ஹாஸ்பிடலில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சைக்கு முன், பகவானின் அருள் எனக்கு இருப்பதன் அடையாளமாக, ஏதாவது ஒன்றின் மூலம் காட்டியருளுமாறு பிரார்த்தனை செய்தேன்.அப்பொழுதே ஸ்ரீ நிஷிகாந்த் பரோடேகர் என்ற பிரபல பாடகர் (பத்மவிபூஷன் ஹீராபாய் பரோடேகரின் பேரன்) புட்டபர்த்தியில் இருந்த அவசரமாக வந்து, பகவானின் கட்டளைப்படி  எனக்கு விபூதியை கொண்டு வந்து தந்தார்.


 அதற்கு முதல்நாள் பிரசாந்தி நிலையத்தில், பகவான் நிஷி காந்த்தின் கைகளில் விபூதியைக் கொட்டி "இது உனக்கு அல்ல! உடனே பூனே சென்று பீம்ஸென்னிடம் கொடு" என்றாராம். பூனே சென்று என்னைப் பார்க்கும் வரை, எனக்கு அறுவை சிகிச்சை நடப்பதே நிஷிகாந்திற்கு தெரியாது. விபூதி பிரசாதத்தை கைகளில் வாங்கியதுமே என்னைப் பீடித்த பயம் போய்விட்டது. நான் நகைச்சுவையுடன் பேசி சிரித்த வண்ணம், "நீங்கள் நினைத்தால் கூட என்னை கொல்ல முடியாது" என்று டாக்டர்களிடம் தமாஷ் பண்ணினேன். பிறகு பூரண குணம் அடைந்தேன்.

 மேலும் எப்பொழுதெல்லாம் நான் அவரிடம் சென்று தரிசனம் செய்கிறேனோ அப்பொழுதெல்லாம் மிகப்பெரிய ஆனந்த நிலையை அடைகிறேன். இந்த ஆனந்தநிலைதான் அவரின் ஆசிர்வாதம் ஆகும். எனவேதான் எப்பொழுதும் அவரின் ஆசிர்வாதங்களை விரும்புகிறேன்.

ஆதாரம்: 1999ல் ஒரு மராட்டிய தினசரி நாளிதழில் வெளிவந்த செய்தியின் தமிழாக்கம்.. 

தமிழாக்கம்: திருமதி.உமாராணி சங்கரலிங்கம் & திருமதி ஜெயா பாலசுப்பிரமணியம்


இதில் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய அதிமுக்கியமான விஷயம்.. இறைவன் சத்ய சாயி விபூதி வெறும் பஸ்பம் என்று நினைத்தால் அது நம் அறியாமையே. 
சர்வ ரோக நிவாரணி சத்ய சாயி விபூதி..
இந்தக் கொடுமையான காலகட்டத்தில் அனைவரும் சத்ய சாயி விபூதியை நெற்றியிலும்.. வாயிலும் இட்ட பிறகே தேவையானால் வெளியே சென்று வரவேண்டும்.
சத்ய சாயி விபூதி என்பது உயிர் காக்கும் கவசம்.. பரம ஔஷதம்.. 
சத்ய சாயி சஞ்சீவினி அது என்பதை மறவாமல் விபூதி இடுவதையும் உட் கொள்வதையும் கடைபிடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக