தலைப்பு

ஞாயிறு, 28 ஜூன், 2020

அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின்(NSF) இயக்குனர் திரு பஞ்சநாதன் அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!!


அமெரிக்காவின் முன்னணி அறிவியல் நிதி ஒதுக்கீடு அமைப்பின் (National Science Foundation)  இயக்குநர் விஞ்ஞானி திரு. சேதுராமன் பஞ்சநாதன் அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்யசாயி அனுபவங்கள்! 

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் சத்ய சாயி பகவானின் தீவிர பக்தராவார். அதுமட்டும் அல்லாமல் இவர் பாலவிகாஸ் மாணவரும் கூட. அமெரிக்காவின் ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பின் மண்டலத் தலைவர்களில் ஒருவராக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயி கல்லூரியில் கணக்கு மற்றும் கணினி பொறியியல் துறையில் விருந்தினர்(Guest) விரிவுரையாளராகவும் இருந்திருக்கிறார்.

 தேசிய அறிவியல் நிறுவனம்(NSF), அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் நிறுவனம்(NSF), அறிவியல் மற்றும் பொறியியல் தொடா்பான அடிப்படை ஆராய்ச்சிக்கு உதவிபுரியும் பெரும் நிதி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ரூ. 56,426 கோடி ஆண்டு வரவு செலவு திட்டத்தை கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் இயக்குநராக இந்திய அமெரிக்க விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதன் (58) நியமிக்கப்பட்டாா். அதற்கான ஒப்புதலை அந்நாட்டின் மேலவையான செனட் சபை தற்போது ஒருமனதாக வழங்கியுள்ளது.


கடந்த 1986-ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் மின் பொறியியல் படிப்பில் பட்ட மேற்படிப்பை முடித்த சேதுராமன், கடந்த 1989-ஆம் ஆண்டு ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினி பொறியியல் படிப்பில் முனைவா் பட்டம் பெற்றாா். சேதுராமன் சென்னையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஆவார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் ‘பஞ்ச்’ என்று அழைக்கப்படும் பஞ்சநாதன், மாற்றம் ஏற்படுத்தும் தலைவராகப் பார்க்கப்படுகிறார், இவரது மானுட மைய முயற்சிகள் உலக அளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்று அமெரிக்கா இவரைப் புகழ்ந்துள்ளது.

அமெரிக்க செனட் தற்போதைய கசப்பான அரசியல் சூழலில் இருந்தாலும் தேசத்தின் முதன்மை விஞ்ஞானியை தேர்வு செய்ததில் பிளவு ஏதுமில்லை. இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு நியமனம் வரையிலும் செனட் அதிவிரைவாகச் செயல்பட்டுள்ளது. தேசிய அறிவியல் அறக்கட்டளையின் 15-வது இயக்குனராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 


குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருதரப்பிலும் இவருக்கு ஆதரவு உண்டு. இவ்வளவு பெரிய பொறுப்பை இந்தியர் கையில் ஒப்படைத்தது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் பெருமையடைந்துள்ளனர். பஞ்சநாதன் தேசிய புதிய கண்டுபிடிப்பாளர்கள் உத்திப்பூர்வ திட்டங்கள் அமைப்பின் துணைத்தலைவராகவும் இருக்கிறார். அரிசோனா கவர்னர் டக் டியூசி 2018-ல் இவரைத் தனக்கு மூத்த ஆலோசகராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் சத்யசாயி அனுபவங்கள்  கேட்பதற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். அதனால் அனைவரும் தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.
👇👇
Source: ரேடியோ சாய்
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: செப்டம்பர் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக