தலைப்பு

சனி, 15 பிப்ரவரி, 2020

மாதவ் தீக்ஷித்தின் நீரிழிவு குணமாக்கப்பட்டது!


கல்லூரி விடுமுறை நாட்களில் டாக்டர்.காதியா புட்டபர்த்திக்கு ஒரு குழுவோடு சென்றார். ஸ்ரீ மாதவ் தீக்ஷித்தும் அவரோடு சென்றார். ஒவ்வொரு முறை புட்டபர்த்தி செல்லும் பொழுதும், அவருடைய அதிர்ஷ்டம் சுவாமி நேர்காணல் அருளினார். விபூதி வரவழைத்துக் கொடுத்தார்.

பிறகு டாக்டரைப் பார்த்து மாதவ் தீக்ஷித்திற்கு இன்சுலின் கொடுக்கிறீர்களா என்று கேட்டார். 40 யூனிட் இன்சுலின் கொடுப்பதாகவும், மாதவ்வின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 140 mg இருப்பதாகவும் சொன்னார். (இருக்க வேண்டியது 100 120mg)

இதைக் கேட்ட சுவாமி, தீக்ஷித் லட்டு மிகவும் விரும்புவார். சுவாமி அவரது நீரிழிவை இன்று குணப்படுத்துகிறேன்.பிறகு அவர் லட்டு சாப்பிடலாம் என்றார். சுவாமி டாக்டரிடம் மறுநாள் முதல் அவருக்கு இன்ஜெக்ஷன் கொடுக்க வேண்டாம் என்று கூறி சாக்லேட் கலரில் விபூதி வரவழைத்து தீக்ஷித்தை சாப்பிடச் சொல்லி நீரிழிவு குணமாகிவிட்டது" என்றார்.

  சுவாமியின் வார்த்தைகளைக் கேட்டு டாக்டர் மாதவ்வின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலை கொண்டார். சுவாமி உடனே கூறினார், நான் இருக்க பயமேன்? நான் சொல்வதைக் கேள்! நான் ஒன்றும் மாயாஜாலம் செய்யவில்லை, என்னுடையது தெய்வீக சக்தி" என்றார்.

இன்சுலின் இன்ஜெக்ஷன் நிறுத்தப்பட்டது. ஆசைதீர இனிப்புகளை தீக்ஷித் சாப்பிட்டார். ஒரு வாரம் கழித்து டாக்டர், மாதவ்வின் சர்க்கரை அளவை சோதித்தபொழுது, அது சரியாக இருந்தது.(normal) சுவாமியின் தெய்வீக சக்தி, நிரந்தரமாகவே மாதவ் தீக்ஷித்தின் நீரிழிவை குணப்படுத்தி விட்டது.
                                                             
ஆதாரம்: SAI SMARAN, P:86

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக