தலைப்பு

சனி, 22 பிப்ரவரி, 2020

அனைத்து தெய்வீக தத்துவங்களும் இணைந்தது சாயி உருவம்!


“நான் உங்களோடு பழகுவதால், உங்களைப்போலவே உண்பதால், உங்களோடு பேசுவதால், இது ஒரு மானிட உருவமே என்ற மாயையில் நீங்கள் மூழ்கிக்கிடக்கிறீர்கள். நானும்கூட உங்களோடு ஆடிப்பாடி, சேர்ந்து பணி புரிந்து உங்களை மாயையில் ஆழ்த்துகிறேன். ஆனால் எந்த வினாடியிலும் என் தெய்வீகத்தன்மை உங்களுக்கு வெளிப்படுத்தப்படலாம். அதற்கு நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்…..

“எல்லா தெய்வீக உண்மைகளும், எல்லா தெய்விகத் தத்துவங்களும் நிரம்பிய வடிவம் இந்த என் மானிட வடிவம்! அதாவது மனிதன் கடவுளுக்கு இட்ட எல்லாப் பெயர்களையும், எல்லா உருவங்களையும் வெளிப்படுத்துகிறது இந்த உருவம். சர்வதேவதா சொரூபங்களைத் தரித்துள்ள மானிட உருவம் இது! (ஸர்வதேவதா சொரூபலனு தரின்ச்சின மான்வாகாரமே ஈகாரமு என்று பாபா தெலுங்கில் கூறினார்)."

- தெய்வீக பேருரை, 17.05.1968 (சத்ய சாயி அருளமுதம், தொகுதி – 8)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக