தலைப்பு

புதன், 19 பிப்ரவரி, 2020

கவிதா வாஹினி! (பக்கம் -3) -கவிஞர் வைரபாரதி

65) மந்தஹாஸ சாயி மந்தஸ்மித சாயி:


சுவாமி நீ 
சிரிக்கிறாய் 
 சிரிப்புப் பறவை
உன் இதழிலிருந்து
என் இதயக் கூட்டிற்கு
இடம் பெயர்கிறது 

குரு பெயர்ச்சி 
அது என்பதால் 
அங்கிங்கெனா ஞானம்
ஆன்மாவில் ஆலிங்கனமாகிறது

நீ பல் தெரியச் சிரிப்பது 
பறவை 
பறக்கிறது போலவே 
இருக்கிறது

வெறும் புன்னகை என்பது 
பூப் பூப்பது 

பூக்களிலிருந்து 
பறவையாவதற்குள் 
என் பக்தி 
எத்தனையோ முறை 
பூத்து விடுகிறது 

காரணமின்றி நாங்கள் 
அழுகிறோம் 
உனை தரிசிக்கையில்

காரணத்தோடு தான் 
நீ சிரிக்கிறாய் 
உலகைப் பார்க்கையில்

நிலையாமை ஒரு நகைச்சுவை 
உனக்குப் புரிகிறது
உலகிற்குப் புரிவதில்லை

மாயை ஒரு வேடிக்கை
மனிதர்களே அதில் மும்முரமாகிறார்கள் 

நீ கடலில்
படகு நடந்து போவதாய் 
அதைக்
 கடந்து போகிறாய்

இவர்களே கடலில் 
மழைக் கலந்து போவதாய்க் 
கலந்து போகிறார்கள் 

உன் மந்தஹாசம் 
மந்தங்களை மாற்றி 
பந்தங்களை 
உன்மேல் ஏற்றி 
அந்தங்களையும்
பிரபந்தங்களாய் ஏற்கச் 
சொல்லிக் கொடுக்கிறது 
சிரிப்பைக் கொடுக்கிறது

வாழ்க்கை லேசானது 
மனசு தூசானது 

மனிதர்களே
மனசைக் 
கண்களில் விட்டு 
கலங்குகிறார்கள் 

நீயே ஞானமாகி
துலங்குகிறாய்

கர்மா பயங்கரமானதல்ல...
ஏற்பவர்க்கு 
எதுவும் கடினமல்ல...

சரணாகதியே
கர்மாவைக் காலடியில் 
அணிந்து கொள்கிறது
அகந்தையே அதைத் 
தூக்கிச் சுமந்து 
கனம் தாளாமல்
கணம் நகராமல்
தள்ளாடுகிறது 

சுவாமி நீ
உள்ளாடுகிறாய்
பக்தா ஏன் 
தள்ளாடுகிறாய்?

சுவாமி நீ 
ஊடாடுகிறாய் 
பக்தா ஏன்
போராடுகிறாய் ?

போராடிப் பெறுவதல்ல
பணிந்து பெறுவதே 
அருள் !

சாதித்துப் பெறுவதல்ல
சரணடைந்து பெறுவதே
ஞானம்!

வாதாடிப் பெறுவதல்ல
வணங்கிப் பெறுவதே 
வைராக்கியம் !

தேடிப் பெறுவதல்ல
திறந்து பெறுவதே
தெய்வீகம்!

தியாகமே யோகம் !
தனக்கு என்ன என்பதல்ல
தவம் 

விடுவதே பெறுவது !
இறுகி இருப்பவரிடமல்ல
இளகி இருப்பவரிடமே
இறைவன் 
இணைய வருகிறான் 

பொழிபவரிடமே 
நாயக சாயி 
நனைய வருகிறான் 

தன்னைக் காத்துக் கொள்ளத்
தெரிந்ததாய் நினைப்பவரிடம் 
தெய்வம் ஏன் 
காத்துக் கொள்ள வர வேண்டும்? 

"நான்" என்பதிடம்
வான் எப்படி
விரியும்?

காலியிடம் தேடியே 
கருணை நிரம்பும் 

விளை நிலத்திலே 
விதை விளையும் 

பக்குவத்திடமே 
பக்குவத் திடமே
பூரணத்தில் பூரிக்கும்

நிறைவுணர்வே 
நிறைவை நிறைக்கும்
குறைகளுக்கு எவ்வளவு
கொடுத்தாலும் 
குறை பட்டுக்கொண்டே
குறையும் 

வெற்றிடம் 
வெற்றி இடம் 
நீ அதில் 
வசிக்கிறாய் சுவாமி

உன் 
ஏகாந்தப் புன்னகையே
எல்லாம் உணர்ந்தது 
எங்களின் 
ஏக்கக் கண்ணீரையும் 
உன் 
வெய்யில் நகையே
மாற்றுகிறது 

குறையொன்றுமில்லை 
எனும் 
குறையைத் தவிர 
எந்தக் குறையும் இல்லை

குறையே 
நிறையான உன்னிடம் 
நடந்து வருகிறது 
அது 
நெருங்க நெருங்க 
தான்
நிறை தான் என்பதை
நினைத்து 
நிறைந்து போகிறது 

எங்களின் புன்னகையே
சுவாமி உன்மேல் 
நாங்கள் வைத்த பக்தி

எங்களின் சிரிப்பே
சுவாமி நீ அளித்த
எங்களின் ஞானம் 

கேலிச் சிரிப்பிலல்ல
உன்னுடையது 
கடவுட் சிரிப்பு 

உன் சிரிப்பே 
இதயத்தில் ஒலிக்கும்
கடவுள் சொல்
இதயம் திறக்கும் 
கடவுச் சொல் 

நீயே யாவற்றுக்கும்
தலையானவன் 
மனிதனா 
நிலையானவன் 
உனையே உணர்ந்து
சிலையானவன் எவனோ
அவனே உன்னருட்
கலையானவன் 

சுவாமி உன் சிரிப்பை 
தரிசிப்பதிலேயே 
இருள் அழிந்து விடுகிறது 
வெளிச்சத்திற்கான 
வேண்டுதல் எல்லாம்
வேண்டாமலேயே கிடைத்துவிடுகிறது

என்ன வேண்டும்
உன்னிடமிருந்து?
சுவாமி நான் 
 வணங்க உன் பாதமும்
 மயங்க உன் புன்னகையும் 
இருந்தால் போதும்

வாழ்க்கை என்பது வேறென்ன?

66) பிரசாத சாயி பிரம்மார்ப்பண சாயி:

சுவாமி 
என்றாவது 
உன் இதழில் இனிப்பேனா? 

சுவாமி 
இன்றாவது 
இவ்வினிமையாய்
இணைவேனா ? 

நீ எடுத்து சுவைக்கும் அளவுக்கு
இனிப்பாய் 
மாற்ற மாட்டாயா
இதயத்தை ?

நீ தானே இனிமை 
இணைய மாட்டாயா ? 

நீ தொட்டால் 
உப்பும் எவ்விதத் 
தப்பும் பக்தித்
தவிப்பும் 
இனிப்பாகி
இதயம் கலந்திடுமே!

சர்க்கரையை
அக்கறையே நீ
அகம் சேர்க்க மாட்டாயா?

பிறவி மருகி
பாதி கசந்தும்
பிறவி பெருகி 
பாதி அசந்தும்  
சுவாமி நீயே 
ஆன்மாவை 
ஆட்கொள்ள மாட்டாயா?

உன் கைதொட 
இவ்வினிப்பு தன்
இறுதிக்கு வந்ததே 

உன் இதழ்பட 
அவ்வினிப்பே 
அந்த இறுதியை 
இறுகப்பிடித்த உன்
இதய விரலால் 
உறுதி செய்திருக்கிறது

தாயை கோடி கோடியாய் உன் 
அகத்தில் சுமப்பவனே 
உன் வாயை 
விஸ்வரூபமாக்கி
எனை விழுங்கி
வீடுபேறு தரமாட்டாயா ?

நீ ஆட்கொள்வதற்கே
அமரர் எல்லாம்
அசுரராய் 
துவாபரத்தில் ...

நீ ஆட்கொள்வதற்கே 
மனிதர் எல்லாம் 
பக்தராய்
துலாபாரத்தில் 

சுவாமி நீ 
அருகமர்ந்து 
தராசு தட்டான வாழ்வை 
உயர்த்த மாட்டாயா ?
அதற்காகத் தானே 
தட்டாத கையும் 
பஜனையில் 
தட்டித் தட்டித் தவிக்கிறது !

ஒரு துளசிக்கு 
முள்ளசைத்த 
முராரியே 
எனை
அலசி எடுத்து
துளசியாய்
தூய்மை தர மாட்டாயா? 

எந்தெந்த மாவில் 
எது செய்தாலும் 
நீ தானே முடிவில் 
அதிலமர்ந்து 
இனிப்பாயாகிறாய் 

எந்தெந்த எழுத்தில்
எதைச் சொன்னாலும்
நீ தானே அடிதோறும்
மனம் துயில
இனிப் பாயாகிறாய்

நீ உப்பு கலந்து 
செய்தாயா
உவர்ப்பு கலந்து 
செய்தாயா

மனிதரை ஏன் 
பக்தி எனும் 
எறும்பு 🐜 மொய்ப்பதில்லை?

நீ இனிப்பைப் 
பாகாலும் 
இதயத்தைப் 
புழுதியாலும் ஏன் குளிப்பாட்ட அனுமதிக்கிறாய்? 

நீ ஜாமூன் போல 
மிருதுவை 
எப்போது எங்கள்
இதயத்திற்கும் வார்க்கப் போகிறாய்? 

தன்னலமற்ற 
திண்பண்டமாய் 
நீ எப்போது 
தனி மனிதனை தோற்றுவிக்கப் போகிறாய்? 

நீயே 
இனிப்பாகிறாய் 
உன் பக்தன் எப்போது 
உனக்கான இனிப்பாவது?

நீயே ருசியாகிறாய்
உன் பக்தன் எப்போது 
உனக்குள் 
ருசியாவது? 

நாங்கள் தர 
சுவாமி நீ ஏற்கிறாய்
சொல் சொல் சொல்
சுவாமி 
எப்போது நீ 
எங்களையே 
ஏற்பாய்? 

இனிப்பின் பதமும்
இதயத்தின் விதமும்
உனக்குத் தானே 
நன்கு தெரியும் சுவாமி

கஷ்டம் எனக் கவலைப்படுகிறார்கள் 
சுவாமி நீ 
பக்தரைச் சமைக்கிறாய்
என்பது 
எப்போது புரியப் போகிறது 
பக்தர்க்கு?

வேகாத அரிசியை 
வேண்டாத அரிசியாய்ப்
பார்ப்பவர்கள் 
ஏன் வெந்து போவது குறித்து 
வருத்தப்படுகிறார்கள்? 

நீ வேக வைப்பதே 
சுவாமி 
உனக்கும்
உலகுக்கும் சேர்த்து
விருந்து வைக்கத் தானே !

பக்தன் கடவுளாக 
கடவுளே நீ 
பக்தன் அளவுக்கு 
இறங்கி வருகிறாய்

மண்ணில் விழுந்த 
இனிப்பைக் 
குப்பையில் வீசுகிறவர்கள் 
எப்போது மண்ணாசையில் இருந்து 
வீசி எறியப்படுவார்கள்?

பக்தி தன் கையில்
செடி வைத்துக் காத்திருக்கிறது 
பூந்தொட்டியில் ஏன் 
இவர்கள் 
குப்பைகள் கொட்டியிருக்கிறார்கள்?

எப்போது நடுவது ?
பூவாய் இவர்களை நீ 
எப்போது தொடுவது? 

வருடம் ஒருமுறை 
தையும்
தினந்தோறும்
அகந்தையும்
வந்து வந்து போகிறது 

ஏன் இவர்கள் 
வறுமையால்
கொதித்துக் கொண்டும் 
பெருமையால்
குதித்துக் கொண்டும் 
இருக்கிறார்கள் ?

நடமாடும் 
இனிமையாய் 
இல்லாமல் போனதால் தான் 

நடமாடும்
சர்க்கரை நோயாய் 
நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் 

வாய்களே பாதி
நோய்களுக்கான வாசல்
சுவாமி நீ எப்போது 
பூட்டிடப் போகிறாய்?

இனிப்பால் வருகிறதாம். 
இனிமைக்கு எப்படி 
சர்க்கரை நோய் வரும்?

முக மலர்ச்சியும் பாதி
அக மலர்ச்சியை...
அக மலர்ச்சியும் மீதி
முக மலர்ச்சியைத் தருகிறது 

சுவாமி நீ எங்களை 
ஆன்மா வளர்க்க 
அகிலத்தில் அனுப்பியிருக்கிறாய்

ஏன் இவர்கள் 
வயிறு வளர்க்கவே 
வாழ்ந்து வருகிறார்கள்?

இனிப்புகளை அடைத்த பெட்டியாய்
இனிப்பின் ருசி தெரியாமல் இருக்கிறார்கள்

ஈக்கும் தெரிந்த 
இனிமையை 
இதயத்திற்கும் தெரிவி 

சுவாமி என் 
இருப்பே
இனிப்பாக அருள்புரி 

உடலில் ஈக்கள் மொய்ப்பதற்குள்
என் 
உள்ளத்தில் ஈக்கள் மொய்க்கட்டும் 

இனிப்பை ஏற்கும் 
இறைவனே 
இனிப்பாக்கி என்னை
ஏற்று விடு 

என்ன தயக்கம்
சுவாமி
சர்க்கரை நீ உனக்கெப்படி
சர்க்கரை நோய் வரும்?

67) சமாதான சாயி சமதர்ம சாயி:




உலகம் 
போரைப் பறித்துக் கொண்டிருக்கிறது
சுவாமி நீயே அதன்
வேரை அறுத்துக் கொண்டிருக்கிறாய்

உயிர்கள் 
வெறுப்பை உமிழ்கின்றன 
அதையும் நீயே 
தொண்டையில் தாங்குவதால்
உயிரோடு இன்னுமவைகள்
உழல்கின்றன.. 

போர்க் கொடிகளிலும்
போராட்டக் கொடிகளிலும்
இதயப் பிணங்களே
தொங்குகின்றன 

புன்னகையில் கூட
போலிகளேப் 
பொங்குகின்றன

சுவாமி நீயே 
பொறுமை காக்கிறாய் 
சுவடே இல்லாமல் 
வறுமை தீர்க்கிறாய்

தூக்கத்தில் 
சாமரம் வீசும்
தூயக் காற்றைப் போல் 
சுவாமி நீயே 
சேவையாற்றுகிறாய் 

காற்றில் நீ இடும் 
கையெழுத்தே ஜீவனின்
சுவாசமாகிறது 

இரக்கமும் 
இரக்கப்படுபவரின்
இதயமுமே உன் 
வாசமாகிறது 

துருப்பிடித்த திமிரையும் 
உன் பார்வை ரசவாதத்தில் 
தங்கமாக்குகிறாய் 

தங்கமாக்கிய பிறகே உனது
அங்கமாக்குகிறாய் 

உன் மகிமையை 
எப்படி மொழிவது ? 
அது மௌனத்தை 
மொழி பெயர்க்கப் போய்
கண்ணீராய் வழிவது 

மிருகங்கள் வாயில்லா பிராணிகள்
மனிதர்கள் சந்தேகப் பிராணிகள் 

இரண்டு பிராணிகளையும் நீயே தான் 
பராமரிக்கிறாய் 

குழாயடி முதல் 
குண்டு வீசுவது வரை 
நீயே தான் 
யுத்தங்களை உன்
சித்தங்களால் சரி செய்து வருகிறாய் 

கெட்டாவிகளையும்
கொட்டாவியாய் 
ஊதித் தள்ளுகிறாய்
சுவாமி நீ 

உனக்கு அசதியே இல்லை
காற்றும் சங்கு குகையில்
தியானிக்கிறது 

தன் பயணங்களில் 
நிதானிக்கிறது 

நீதான் சுவாமி 
நீ மட்டும் தான் சுவாமி
ஓய்வறியாதவன் 

எதனோடு உன்னை 
ஒப்புமைப் படுத்த?
தேதிகளைப் போல் நீ
தேய்வறியாதவன் 

நினைவுகள் போல்
நீ
நீர்த்துப் போகாதவன்

வாடி வதங்கி 
வேர்த்துப் போகாதவன் 

நீதான் 
சைத்தான்களுக்கும் 
சட்டைத் தோல் மாட்டிவிட்டிருக்கிறாய் 

அவைகளே இன்றுவரை
சண்டைக்கு வருகிறது 

அவைகளிடம் 
மாட்டிவிடாமல் தடுப்பதும்
உன் பொறுப்பு தான் 

நிலா எழுந்தாலும் 
கதிர் எழுந்தாலும் 
முகடாய் இருந்து அம்
முகங்களுக்கு உடல் தருவதும்
உன் பொருப்பு தான் 

சுவாமி 
நீ சத்தியக் கடவுள் 
உன் பக்தர்
சந்தேகக் கடவுள் 

சந்தேகங்கள் 
தன் தேகங்கள் விடுத்து
உன் சத்தியத்தில்
ஒன்றவே நீ 
சாந்நித்யங்களைப் 
பொழிகிறாய் 

சந்தேகங்கள் 
பஞ்சு மூட்டைகள்
உன் புன்னகை நெருப்பில் பற்றி 
எரிந்து கொண்டே இருக்கிறது 

அது எரிகிற சாக்கில்
பஞ்சில் பதுங்கிய
பஞ்சேந்திரிய அழுக்குகளும் 
கதறக் கதற எரிந்து போகிறது 

அமைதிக்காக
அமைதியாக 
அமைதியோடு ஊர்வலம் வரும்
தேர்க் கொடி நீ 

நீ அணிவித்த சீறுடை கூட
சமாதானத்தையே சுமந்து கொண்டிருக்கிறது 

கோழ் சொல்வது உன்
காதுகளில் ஏறுவதே இல்லை
கோள் சொல்வதே உன்
காதுகளில் ஏறுகிறது

கோழைகளே 
கோழ் சொல்வர்.
உன் புகழ் சொல்லும் 
பக்தர் முன் 
கோளே தன் வாலைச் சுருட்டி ஓடும்

உன் ரோமம்
அதுவும் பொழிகிறது
உன் பிரேமம்

நீ வரப் போகின்ற
வருங்காலங்களில்
எழப் போகின்ற
ஒளிர் மேளங்களில்

பேரன்பே
பாடலின் பல்லவி
அமைதியே 
அனுபல்லவி 
சமாதானங்களே 
சரணங்கள்
பாடப்பாட முக்தி அடையும்
இதய கிரணங்கள் 

நீ கையில் ஏந்தியிருப்பதை
யார் இதயத்தில் ஏந்தியிருக்கிறாரோ
அவரே உன் பக்தர் 

நீ கையில் ஏந்தியிருப்பதை 
யார் வார்த்தையில் 
வளர்க்கிறார்களே 
அவரே உன் பிரியமானவர்

நீ கையில் ஏந்தியிருப்பதை
யார் புன்னகையில் 
பறக்கவிடுகிறார்களோ
அவரே உன் ஆத்ம சாதகர்

நீ கையில் ஏந்தி இருப்பதாய் 
யார் மாறிப்போகிறார்களோ
அவரே உன் ஜீவன் முக்தர்

ஜோதிடக் கிளிகள் அல்ல
பூமிக்கு இப்போது தேவை
உன் கைப் பறவையே 

சுவாமி 
கிளியாய் இருந்த என்னை
வெளியாய் மாற்றி
ஒளியால் தேற்றி 
உன் 
விழி ஊற்றி வளர்க்கிறாய் 

கிளிக்கே குறி சொல்ல நெல் வேண்டும்
உன் கைப்பறவைக்கு 
நெறி சொல்ல 
உன் சொல் போதும் 

பறத்தலும் 
மறத்தலாய் ஆனது
சுவாமி நீ தாங்கி இருப்பதால்
உன் விரல்களே 
எனக்கான சிறகுகள் 

உலக அழகுகள்
அலகுக் கழுகுகள் 
உணர்ந்து கொண்டு உன்
பாதம் தொழும் போது 
பூமியே ஒருநாள் 
புறாவாகும்!

68) சரணாகத சாயி சரணகமல சாயி:


உலகம் 
போரைப் பறித்துக் கொண்டிருக்கிறது
சுவாமி நீயே அதன்
வேரை அறுத்துக் கொண்டிருக்கிறாய்

உயிர்கள் 
வெறுப்பை உமிழ்கின்றன 
அதையும் நீயே 
தொண்டையில் தாங்குவதால்
உயிரோடு இன்னுமவைகள்
உழல்கின்றன.. 

போர்க் கொடிகளிலும்
போராட்டக் கொடிகளிலும்
இதயப் பிணங்களே
தொங்குகின்றன 

புன்னகையில் கூட
போலிகளேப் 
பொங்குகின்றன

சுவாமி நீயே 
பொறுமை காக்கிறாய் 
சுவடே இல்லாமல் 
வறுமை தீர்க்கிறாய்

தூக்கத்தில் 
சாமரம் வீசும்
தூயக் காற்றைப் போல் 
சுவாமி நீயே 
சேவையாற்றுகிறாய் 

காற்றில் நீ இடும் 
கையெழுத்தே ஜீவனின்
சுவாசமாகிறது 

இரக்கமும் 
இரக்கப்படுபவரின்
இதயமுமே உன் 
வாசமாகிறது 

துருப்பிடித்த திமிரையும் 
உன் பார்வை ரசவாதத்தில் 
தங்கமாக்குகிறாய் 

தங்கமாக்கிய பிறகே உனது
அங்கமாக்குகிறாய் 

உன் மகிமையை 
எப்படி மொழிவது ? 
அது மௌனத்தை 
மொழி பெயர்க்கப் போய்
கண்ணீராய் வழிவது 

மிருகங்கள் வாயில்லா பிராணிகள்
மனிதர்கள் சந்தேகப் பிராணிகள் 

இரண்டு பிராணிகளையும் நீயே தான் 
பராமரிக்கிறாய் 

குழாயடி முதல் 
குண்டு வீசுவது வரை 
நீயே தான் 
யுத்தங்களை உன்
சித்தங்களால் சரி செய்து வருகிறாய் 

கெட்டாவிகளையும்
கொட்டாவியாய் 
ஊதித் தள்ளுகிறாய்
சுவாமி நீ 

உனக்கு அசதியே இல்லை
காற்றும் சங்கு குகையில்
தியானிக்கிறது 

தன் பயணங்களில் 
நிதானிக்கிறது 

நீதான் சுவாமி 
நீ மட்டும் தான் சுவாமி
ஓய்வறியாதவன் 

எதனோடு உன்னை 
ஒப்புமைப் படுத்த?
தேதிகளைப் போல் நீ
தேய்வறியாதவன் 

நினைவுகள் போல்
நீ
நீர்த்துப் போகாதவன்

வாடி வதங்கி 
வேர்த்துப் போகாதவன் 

நீதான் 
சைத்தான்களுக்கும் 
சட்டைத் தோல் மாட்டிவிட்டிருக்கிறாய் 

அவைகளே இன்றுவரை
சண்டைக்கு வருகிறது 

அவைகளிடம் 
மாட்டிவிடாமல் தடுப்பதும்
உன் பொறுப்பு தான் 

நிலா எழுந்தாலும் 
கதிர் எழுந்தாலும் 
முகடாய் இருந்து அம்
முகங்களுக்கு உடல் தருவதும்
உன் பொருப்பு தான் 

சுவாமி 
நீ சத்தியக் கடவுள் 
உன் பக்தர்
சந்தேகக் கடவுள் 

சந்தேகங்கள் 
தன் தேகங்கள் விடுத்து
உன் சத்தியத்தில்
ஒன்றவே நீ 
சாந்நித்யங்களைப் 
பொழிகிறாய் 

சந்தேகங்கள் 
பஞ்சு மூட்டைகள்
உன் புன்னகை நெருப்பில் பற்றி 
எரிந்து கொண்டே இருக்கிறது 

அது எரிகிற சாக்கில்
பஞ்சில் பதுங்கிய
பஞ்சேந்திரிய அழுக்குகளும் 
கதறக் கதற எரிந்து போகிறது 

அமைதிக்காக
அமைதியாக 
அமைதியோடு ஊர்வலம் வரும்
தேர்க் கொடி நீ 

நீ அணிவித்த சீறுடை கூட
சமாதானத்தையே சுமந்து கொண்டிருக்கிறது 

கோழ் சொல்வது உன்
காதுகளில் ஏறுவதே இல்லை
கோள் சொல்வதே உன்
காதுகளில் ஏறுகிறது

கோழைகளே 
கோழ் சொல்வர்.
உன் புகழ் சொல்லும் 
பக்தர் முன் 
கோளே தன் வாலைச் சுருட்டி ஓடும்

உன் ரோமம்
அதுவும் பொழிகிறது
உன் பிரேமம்

நீ வரப் போகின்ற
வருங்காலங்களில்
எழப் போகின்ற
ஒளிர் மேளங்களில்

பேரன்பே
பாடலின் பல்லவி
அமைதியே 
அனுபல்லவி 
சமாதானங்களே 
சரணங்கள்
பாடப்பாட முக்தி அடையும்
இதய கிரணங்கள் 

நீ கையில் ஏந்தியிருப்பதை
யார் இதயத்தில் ஏந்தியிருக்கிறாரோ
அவரே உன் பக்தர் 

நீ கையில் ஏந்தியிருப்பதை 
யார் வார்த்தையில் 
வளர்க்கிறார்களே 
அவரே உன் பிரியமானவர்

நீ கையில் ஏந்தியிருப்பதை
யார் புன்னகையில் 
பறக்கவிடுகிறார்களோ
அவரே உன் ஆத்ம சாதகர்

நீ கையில் ஏந்தி இருப்பதாய் 
யார் மாறிப்போகிறார்களோ
அவரே உன் ஜீவன் முக்தர்

ஜோதிடக் கிளிகள் அல்ல
பூமிக்கு இப்போது தேவை
உன் கைப் பறவையே 

சுவாமி 
கிளியாய் இருந்த என்னை
வெளியாய் மாற்றி
ஒளியால் தேற்றி 
உன் 
விழி ஊற்றி வளர்க்கிறாய் 

கிளிக்கே குறி சொல்ல நெல் வேண்டும்
உன் கைப்பறவைக்கு 
நெறி சொல்ல 
உன் சொல் போதும் 

பறத்தலும் 
மறத்தலாய் ஆனது
சுவாமி நீ தாங்கி இருப்பதால்
உன் விரல்களே 
எனக்கான சிறகுகள் 

உலக அழகுகள்
அலகுக் கழுகுகள் 
உணர்ந்து கொண்டு உன்
பாதம் தொழும் போது 
பூமியே ஒருநாள் 
புறாவாகும்!

69) ஹிருதய புஷ்ப ஹிமாலய சாயி:



புண்ய பக்தரின் 
இதயம் ஏந்திக் கொண்டிருக்கிறாய்

புனித பக்தரின் 
ஜனிதம் முதல் சம்பவ
லிகிதம் சகிதம் யாவும்
பார்வையிடுகிறாய்
பராமரிக்கிறாய் 

தூய்மையின் 
தாய்மையும் 
தாய்மையின்
தூய்மையின்
நீயே சுவாமி 

கருணையில் 
கண்டிப்பும் 
கண்டிப்பில் 
கருணையும் 
நீ மட்டுமே சுவாமி 

சூல் பெறா 
வெண் மேகம் 
தீர்த்த கர்ப்பம் தரிக்கவே
உன் 
கையில் இதோ 
வந்திருக்கிறதா சுவாமி 

எந்த மேகம் 
கலைய வேண்டும் 
எந்த மேகம் 
பொழிய வேண்டும்
நீயே முடிவு செய்கிறாய்

ஒவ்வொரு இரவுக்கும்
நீயே
விடிவு செய்கிறாய் 

ஒவ்வொரு தெய்வங்களுக்கும்
நீயே வடிவு செய்கிறாய்

வெள்ளை உன்
பிள்ளை அதற்குக்
கொள்ளை அன்பை நீயே
கொட்டுகிறாய் 

மின்னலாய் வெட்டுகிறாய் 

முடியாதவர்கள் விழி
மூடிக் கொள்கின்றனர்
முடிந்தவர்கள் 
மின்சாரம் தயாரிக்கின்றனர் 

ஆற்றலின் 
ஊற்றுக் கண் சுவாமி
நீயே அனைவருள்ளும்
கலைகளாய் எழுகிறாய் 

சமயத்தில் உணர வைக்கிறாய் அதை
சமயமாய் உணர வைக்கிறாய் 
சமமாய் உணவு வைக்கிறாய் 

சுவாமி 
சிலருக்கேப் பசிக்கிறது 

பந்தியில் அமர்ந்தால் தானே 
ருசிக்க முடிகிறது 

தியானத்தில் அமர்வது என்பது
பந்தியில் அமர்வது

ஓடிக் கொண்டிருப்பவர்கள் 
பின் தாயாய்
உணவெடுத்து 
ஓடிக் கொண்டிருக்கிறாய் 

அடம் பிடிக்கும் தேரையும்
வடம் பிடித்து நீயே இழுக்கிறாய் 

கடவுள் நீ 
தாயாய் 
உன் நிலை இறங்கி
தயவு காட்டுகிறாய் 

உன்னிடம் மாட்டிக் கொள்வதென்பது 
உலகத்திடமிருந்து தப்பிப்பது 

உலகத்திடம் மாட்டிக் கொள்வது 
கலகத்திடம் மாட்டிக் கொள்வது

சொன்னால் கேட்கவே மாட்டாய்
சுவாமி நீ 

இப்படி இரங்கி இரங்கியே
இறங்கிப் போகிறாய் 

உன் கருணை நினைத்து 
பிறவி தோறும் 
அழத் தோன்றுகிறது 
அது 
பிறவிகளை எல்லாம்
ஆழத் தோண்டுகிறது

உனக்காக
உயிரையே விடத் தோன்றுகிறது
விட்டாலும் சுவாமி
உயிர் உன்னிடமே
வந்து சேர்கிறது 

உன்னிடமிருந்து 
எப்படி விலகி இருக்க முடியும்?

இந்த மலருக்குக் கிடைத்த 
பாக்கியமே 
பக்தர்க்குக் கிடைக்கும் 
அதற்கு அவர்கள் 
மலர்ந்து விரிய வேண்டும் 

நீ மட்டுமே
பரம்பொருள்
மற்றவை 
வெறும் பொருள் எனப் 
புரிய வேண்டும்

தெய்வம் தெரிய 
திசைகள் தெரியாதிருக்க வேண்டும் 

பால்வெளியைப் பிடித்திருக்கிறது
உன் கருவெளி 

காலமே நேரமோ
காலாதீதனே உனக்கேது ? 

நீ காவி உடுத்தியதே
துறவை உணர்த்தத்தான்

திறந்தால் தானே
துறக்க முடிகிறது 

திறத்தலே துறத்தல்
மறைத்தலும் 
மறுத்தலும் உள்ளவர்களை
துறவு எங்கனம் 
உறவாட வரும்? 

பயமே துறத்தலைத் 
தள்ளிப் போடுகிறது 
ஆன்மாவை 
ஆசையே
கிள்ளிப் போடுகிறது
ஆனந்தத்திற்கு 
சந்தேகமே 
கொள்ளி போடுகிறது

எதிர்பார்ப்பு ஒரு 
அகந்தை 
அது சுயநலத்தின் பிடியில்
சொக்கட்டான் விளையாடுகிறது 

இதோ ஒரு குழந்தையை கையேந்தியிருக்கிறாய்
அதன் வெகுளித் தனத்தை நீ 
வெகுவாக ரசிக்கிறாய்

அப்பாவியே
அப்பராக முடிகிறது 

கர்விகள் எப்படி உனக்கு
கருவிகளாய் இருக்க முடியும்? 

கருமிகள் கிருமிகள்

கருமிகள் கொடுத்தா
கடவுளே நீ நிறைவாய்?
கருமித்தனத்தை உன்
காலடியில் கொடுத்தால் அல்லவா 
சுவாமி நீ
சந்தோஷம் அடைகிறாய்

வேத நூலே கையில் நீ 
பஞ்சை ஏந்தியிருக்கிறாய் 
அது 
உன்னாடை
நூலானாலும் 
உபதேச நூலானாலும் 
வைதீக நூலானாலும் 
உன்னை மட்டுமே அது
விளக்கிக் கொண்டிருக்கும் 

விளக்க விளக்க 
விளங்க முடியா
விளக்கு ஜோதி நீ 

நீ
விளக்க விளக்க 
விளக்குகள் இன்னும்
பிரகாசமாகிறது 

முடிவெடுக்க முழித்தது போய்
உனக்கு 
படியெடுக்கும் பரவசத்தில் 
அடியெடுக்கும் போதெல்லாம் நீயல்லவா
அடியெடுக்கிறாய் 

கவிதையிலும் 
காலாற நடக்கையிலும் 

நடக்கையிலும்
நடத்தையிலேயே நீ 
நெஞ்சம் நிறைகிறாய்

பஞ்சு மிட்டாய் 
ஏந்தும் குழந்தை போல்
பிரபஞ்ச மிட்டாய் 
ஏந்திடும் குழந்தை நீ சுவாமி 

உனக்கான பஜனை
உனக்கு தாலாட்டு
எங்களுக்கு
ஆத்ம சுப்ரபாதம் 

நீ தாலாட்டிலும் 
விழித்தே இருக்கிறாய்

எங்களின் 
ஏக்கம் தூக்கம் காண்கையிலேயே நீ
எங்களுக்குள் 
விழித்திருப்பது உணர முடிகிறது 

சுவாமி 
உன்னிந்த ஏந்துதல் பவித்ரம் 

அழுக்காயிருக்கிறது என
விட்டு விடாதே சுவாமி
நீ ஏந்தினால் தானே 
அழுக்கை நீங்கும்
என் இதயம்  

குளிக்க மறுக்கிறதே என
குழந்தையை நீ 
குளிப்பாட்டாமல் இருப்பாயா ?

ஏற்கனவே 
கண்ணீரில் பாதி
குளித்தாகி விட்டது 
சுவாமி நீ
உன் அருள் வெந்நீரில் 
மீதியை சுத்தமாக்கு!

என் வாழ்க்கையை 
இன்னும் இன்னும்
உன் உபதேசத்தின்
அர்த்தமாக்கு!

70) சத்திய சாயி சத்தியம் சாயி:



சத்தியமே நீ 
சத்தியம் கேட்கிறாய்

சத்தியமாக இரு என 
சத்தியம் வாங்குகிறாய்

சத்தியமாக இருப்பது 
பத்தியமாக இருப்பது 

சத்தியமாக இருப்பதால் 
நித்தியமாக இருப்பது
நிதர்சனப் படுகிறது 

சத்தியமாக 
சத்தியமே உன்னால் தான் என்னை
சத்தியமாக்க முடியும் 

சத்தியம் கடைபிடிப்பது 
உன்னருளால் மட்டுமே
சாத்தியப்படுகிறது 

வளையாத மூங்கில் தான்
விளைகிறது 
சுவாமி நீ இசை

நான்
பாடை மூங்கிலா
பாட மூங்கிலா 
உன் சத்தியமே தீர்மானிக்கிறது

உன் அசைவால் தான்
அங்கம் அசைகிறது 
அகிலம் அசைகிறது 

அண்டம் விரிவதும்
பிண்டம் நிறைவதும்
உன் ஆற்றலால் மட்டுமே
ஆரோஹணப்படுகிறது 

உன் ஐந்து விரலுமே 
ஐந்து நெறிகள் 
ஐந்து முக விளக்கிற்கு
அதுவே தருகின்றன
அக்னிப் பொறிகள் 

தா எனக் கேட்கிறாய் 
உன்னிடம் ஒப்படைப்பதால் மட்டுமே
உன்னைப் பெற முடிகிறது

காமம் கிரோதம் லோபம்
மோகம் மதம் மார்சர்யம் 

பிடித்துக் கொண்டிருக்கும்
பிசாசுகளை நீ கேட்கிறாய் 

உனக்கான தட்சணை
என்னக அகந்தை 

சரணாகதி கேட்கிறாய்
சுவாமி
அப்போதே எனக்கு
கதி கிடைக்கிறது

தம்புரா நீ 
உன்னால் தான் 
பாடலுக்கே சுதி கிடைக்கிறது

செய்த செயலுக்கான
விதி கிடைக்கிறது
உன் பார்வை கிடைத்தால் 
விதியின் பாதைக்கு
 மதி கிடைக்கிறது

உன்னிடம் பெறுவதல்ல
பக்தி என்பது
உன்னிடமென்னையே
ஒப்படைப்பது

உன்னிடம் வேண்டுவதல்ல
சரணாகதி என்பது 
உன்னிடம் நானே அழிவது
உன்னிடம் "நானே" அழிவது

பிடிப்பது உன் காலை
பிடிப்பதாக இருந்தால் தான் 
பிடிப்பது 

மற்ற பிடிப்பது எல்லாம்
நடிப்பது 

உன் காலைப் பிடித்தே 
காலை பிடிக்கிறது
கதிரொளி 

உன் நாவைப் பிடித்தே 
பூவைப் பிடிக்கிறது
வாசனையின் எதிரொலி 

வெறுங் கை நீட்டி 
இது தான் 
வாழ்க்கை என்கிறாய் 

உன் கையைத் திருப்பி
நீ என்ன கணையாழி 
அணிந்திருக்கிறாய் என
ஆராய்கிறது உலகம் 

இந்தக் கை
இதே கை தான் 
ஒரு கிரகத்தையும்
இன்னொரு கிரகத்தையும்
மோத விடாமல் 
ஒரே லயத்தில் நகர விடுகிறது 

இந்தக் கை
இதே கை தான் 
பூமியை
பூவாய்த் தாங்குகிறது

பூவை 
பூமியாய் வாங்குகிறது 

உன் 
உள்ளங்கையில் 
ஒரு முத்தமிட வேண்டும்
சுவாமி 
என்னைச் சுமந்து 
பாவம் அந்த 
புனிதக் கைகளில் அழுக்கேறியிருக்குமே

அவ்வழுக்கை 
என் முத்தம் துடைக்கட்டும் 

உன் கரமெனும் 
அட்சயப் பாத்திரத்தில் 
என் ஆனந்தக் கண்ணீர் 
நிரம்பட்டும் 

சுவாமி
இவர்கள் வழிபடும் கடவுளரும் 
உன் இதே இந்தக் கையை நம்பித் தான் 
குடித்தனம் நடத்துகிறார்கள் 

பட்டும் பூ 
மொட்டும் உன் 
விரல் போன்ற 
மிருதுவை பெற்றதில்லையே

நீ தருவதை 
எந்தக் கடவுளரும்
தந்ததில்லையே

சம்ஹரிக்க வந்தவர்களை 
கடவுள் என்றும் 
சமமாய் ஆலிங்கனம் 
செய்யும் உன்னையோ
மகான் என்கிறார்களே
மனிதர்கள்

என்ன வேடிக்கை 

சத்தியம் கேட்கிறாய் 
அந்தக் கையில் 
என்னையே தந்துவிடுகிறேன்

உனக்கு தேவையான 
சத்தியத்தை நீயேப் 
பெற்றுக் கொள் 

எனக்கென்ன தெரியும்

தொழத் தோன்றுகிறது 
தொழத் தோன்றும் போதே
அழத் தோன்றுகிறது 

எங்களின் எண்பது கிலோவையும்
கர்மா எனும் 
எண்பதாயிரம் கிலோவையும் 

எப்படித் தான் 
இந்தப் பிஞ்சுக் கைகளில் சுமக்கிறாயோ!

அழுக்கு மூட்டை நான் 
வண்ணமயமான 
வண்ணான் நீ சுவாமி 

சிலுவை கூட 
உன் பக்தனுக்கு 
இத்தனை கனத்திருக்குமா 

என்னையும் சுமக்கிறாயே சுவாமி !

பத்து மாதம் தான் 
பூமியில் தாயும் 
சுமக்கிறாள் 
சுவாமி நீ 
பிறவிதோறும் சுமக்கிறாயே

அலுப்பே இல்லையா 
உன் இரக்கத்திற்கும்
உன் இயக்கத்திற்கும்
அளவே இல்லையா 

உன் இந்தக் கையெடுத்து 
மோகிக்க வேண்டும் 

உன் மேல் கொள்ளும் 
மோகமே
பதஞ்சலி எழுதிப் போன
யோகம் 

உன் மேல் கொள்ளும் 
காதலே
பாரதி எழுதிப் போன 
காதல் இல்லையேல் சாதல் 

உன்னருளை 
கலவி கொள்வதே 
வீடு பேற்றின் 
கல்வி கொள்வது 

உனக்கான பக்தியே
உலகை மனதிலிருந்து 
விவாகரத்து வாங்கும்
யுக்தி

கானகம் செல்லாமல்
வானகமே உன் கருணைப் 
பானகம் அருந்திப் பெறப் போகும் 
முக்தி 

சுவாமி நீ கடவுள் 
உன் உறை வாளில் கூட
சமாதானப் பூப் பூக்கிறது

இவர்கள் 
நம்பினாலும் 
நம்பாவிடினும் 
இவர்களின் மேலான
நம்பிக்கையை நீ 
கைவிடுவதே இல்லை

என்ன கடவுளோ சுவாமி நீ
எப்படித் தான் 
இப்படி இருக்க முடிகிறதோ!

இப்படி கை நீட்டி
கை ரேகைப் பார்க்கச் சொல்கிறாயே சுவாமி 

எனக்கென்ன தெரியும்

உன் ரேகைகளை 
எனது மூன்றாம் கண்ணால் மட்டுமே 
தரிசிக்க முடிகிறது

உனது ஆயுள் ரேகை
ஆச்சர்யத் தோகை 
அது தான் 
பூமி முகிலைப் 
பொழிய வைக்கிறது 

உனது குரு மேடு 
குரு பகவான் தங்கும் வீடு 
அவனே 
உன் ஞானத்தை
மௌனத்தால் 
மொழி பெயர்க்கிறான் 

உன் இதய ரேகை
என்ன சுவாமி
பிரபஞ்சத்தையும்
தாண்டி நீள்கிறது!

அதனால் தானே சுவாமி
அண்டமே உயிர் வாழ்கிறது !

உனக்கு விதி ரேகையே 
இல்லை
எங்களின் எல்லா விதியையும்
உன் உள்ளங்கையே தாங்குகிறது 

விபூதிக்கு நீ 
விரல் அசைக்கும்
போதே
எங்களின் 
விதியும் விபூதியாகிவிடுகிறது

உன் ரேகைப் பாதையில்
நடமாடும் என் 
பார்வை
பால் வெளிக்கேப் பயணிக்கிறது 

இந்த உன் 
கைமட்டும் போதும் 
ஏன்
உன் சுண்டு விரல் கூட போதும்
அதைப் பிடித்துக் கொண்டே
உன்னோடு நடமாடிக் கொள்கிறேன் 

நீ கடைத் தெருவுக்கு 
அழைத்துப் போனாலும்
இந்த உன் குழந்தை
உன்னை மட்டுமே கேட்கும் 
கடையையே அல்ல...

என் உயிர்த் துளிகளை 
உன் உள்ளங்கையில் 
ஊற்றிக் கொள்கிறேன்

நீ செலவளித்தாலும்
சேமித்து வைத்தாலும் 

அது உன் உயிர் 

சுவாமி எனக்கு 
நீயே மிக மிக முக்கியம்
எனது உயிரல்ல....

71) பிரஸன்ன சாயி ப்ரகார சாயி:



சுவாமி நீ
வெளியே போகிறாயா
உள்ளே வருகிறாயா 
என் இதயக் கதவுகள்
உன்னையேப் பார்க்கின்றன ...

சுவாமி 
அது என் இதயம் என்று
நினைக்கின்ற வரை 
வலிபடுகிறேன் 

அது உன் இதயம் என 
உணர்ந்தவுடன்
ஒளி பெறுகிறேன் 

கதவின் இடுக்கும்
தேவையில்லை 
கதவை உடைக்காமல்
கதவுள்ளிருந்து வருவது
கஷ்டமே இல்லை உனக்கு 

எதனால் தடுக்க முடியும்
எதனால் ஒடுக்க முடியும்
நீ கடவுள் சுவாமி 

இவர்களின் கதவுகளா
இவர்கள் வீட்டைக்
காப்பாற்றுகிறது ?

அப்பாவிகள்
அப்படித் தான் நினைக்கிறார்கள்! 

இவர்களின் அறிவா
இவர்களை வழிநடத்துகிறது?

தடுக்கி விழும் வரை
தெய்வத் தீர்மானங்கள்
தெரிவதில்லை 

உறவுகளின் மரணத்தில் கண்வழி
நீரே புரிகிறது  
நிலையாமை புரிவதில்லை

சுவாமி 
எந்த வீடும் உன்
சொந்த வீடு
நீ வரலாம் போகலாம்

வாடகைக்கு இருப்பவர்களுக்கு ஏன்
இத்தனை வாய்  ? 

எந்த வீட்டுக்கு நீ 
எப்படி வந்தாலும்
அண்டை வீடு ஏன் 
அவதிப்படுகிறது ?

எந்த வீட்டுக்கு நீ
எது தந்தாலும்
பக்கத்து வீடு ஏன் 
பொறாமைப்படுகிறது ?

அவரவர்களுக்கானவை
அவரவர்களுக்கு 

குண்டாவோ
கூஜாவோ 
எதில் எதில் 
எப்படி நிரம்புகிறதோ
அதில் அதில் 
அப்படி நிரம்புகிறாய்

சுவாமி நீ கங்கை.

உன் கதவுகள் 
சிறகுகளால் செய்யப்பட்டிருக்கிறது 

உன் பூட்டுக்களுக்கான
சாவிகள் 
ஆன்ம சாதனையில் 
கோர்க்கப்பட்டிருக்கிறது

இவர்களின் 
எதிர்பார்ப்புக்கு நீயேன்
செவி சாய்க்க வேண்டும் ?

கேசம் மறைத்த உன்
செவிகளின் தேசம் 
ஆழமான பஜனைகளையும் 
அகலமான இதயங்களையுமே
ஆலிங்கனம் செய்கிறது 

தண்டவாளத்தில் 
தலை வைத்தால் 
ரயிலுக்கு முன்னே 
நீ ஓடி வருகிறாய் 

பிறப்புக்குப் பின்
வாழ்க்கை உன் 
மடியிலேயே 
சுடர்கிறது 

இறப்புக்குப் பின் 
வாழ்க்கை உன் 
அடியிலேயே 
தொடர்கிறது 

சுவாமி நீயே 
கதவு திறந்து 
கனவைக் கலைக்கிறாய் 

துவாரகா பாலர்களாய் 
என் இரு விழிகள் 
நீயே 
திறந்த இதயத்தில் 
நிறைந்திருக்கிறாய்

எனது
எண்ணத்தின் கிண்ணத்தை 
காலியாக்குகிறாய் 

நீயே உனை
உள்ளே ஊற்றி 
நீயே அதை
மூடியும் கொள்கிறாய் 

பிறரை 
வாழ்த்தினால் அது
உன் தலையிலேயே 
மலராய் விழுகிறது

விமர்சித்தால் அது
உன் தலையிலேயே
கற்களாய் விழுகிறது

ஆச்சர்யப்படாமல் 
இருக்க முடியுமா
இதயத்தால் !

நீ உள்ளே நுழைந்தாலும்
வெளியே உலாவுகிறாய் 

வெளியே நடக்கும் போதே
உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்

நீ நடக்கும் ஓசையே
இதயத்தில் கேட்கிறது
துடிப்பு எனச் 
சொல்லிக் கொள்கின்றனர் 

நீ போவதும் வருவதுமே 
அன்றாடம் நிகழ்கிறது 
மூச்சு என புரிந்து வைத்திருக்கின்றனர்

இதயக் கதவுகள் திறந்தே
ஆத்மாசனத்தில் அமர்கிறாய்

உதயக் கதவுகள் திறந்தே
கதிராசனத்தில் அமர்கிறாய்

உன் கதிராசனத்தின்
எதிராசனத்தில் 
அமர்ந்து அருள
ஒரு கடவுளருக்கும்
இங்கு உன்னாற்றல் இல்லை 

சுவாமி 
மெழுகிக் கொண்டுதான் இருக்கிறேன் 
முறைக்காதே 

ஜென்ம அழுக்கு
பிறவிப் புழுது 
எண்ண தூசி 
என்ன செய்ய ?

சுத்தப்படுத்திக் கொண்டே 
இருக்கச் சொல்கிறாய்
தியானக் கழுவலும்
தொடர்கிறது 

சகதியையும் கமலமாக்கும் 
சக்தி உனக்கு 

நித்தமும் 
நீ தரும் 
பக்தி எனக்கு 

இதோ
இதைப் பார்க்கிறேன்
இதழ் இரண்டைத் 
திறந்து வரும் 
புன்னகை போல் 
பூரிப்பாக இருக்கிறது
சுவாமி!

72) சிம்மாசன சாயி ஸ்ரீராஜ ராஜ சாயி:

சுவாமி நீ கவனிக்கிறாய்
அதனால் 
காற்றும் கவனமாகத் தான்
 வலம் வருகிறது

சுவாமி நீ அமர்ந்திருக்கிறாய்
இதயம் 
இமயம் ஆகிவிடுகிறது 

சுவாமி நீ 
முறைத்தால்
எரிமலைக் குழம்பும் 
தயிராய் உறைந்து போகும் 

ஜோடியோடு பயணிக்கும்
மாயை 
தனியாய் நடந்து போகும்

கோபம் 
குப்புறப் படுத்துத் தூங்கும் 

சினம் தன்
இனத்தோடு சேர்ந்து
நாடு கடத்தப்படும் 

ஆத்திரம் 
பாத்திரம் ஏந்தி
அன்பிடம் யாசிக்கும்

சுவாமி நீ 
யார் எதை நினைத்தாலும் 
அறிந்து கொள்கிறாய் 

சுவாமி நீ 
எது எங்கே நிகழ்ந்தாலும் 
புரிந்து கொள்கிறாய் 

சரணாகதி ஒரு ...

வெற்றுப் பாத்திரம் 
நீயே 
நிறைந்து கொள்கிறாய் 

ஒரு புல்லாங்குழல் 
நீயே புகுந்து கொள்கிறாய் 

ஒரு வெறுங்கை 
நீயே
உன் கரம் வைக்கிறாய் 

இனி நடக்கப்போவதையும்
நீயே 
கண்டு கொண்டிருக்கிறாய் 

அருவியின் போன 
பிறவியும் உனக்கே தெரியும் 

அணு முதல் 
அண்டம் வரை
புல் முதல் 
பிண்டம் வரை 
நீயே வியாபிக்கிறாய் 
பக்தி தந்து சோபிக்கிறாய் 

மனிதனிடமிருந்து 
ரத்தத்தையும் 
உன்னிடமிருந்து 
அமிர்தத்தைமும் 
உரிந்து கொள்கிறது 
கொசு 

பட்டாம்பூச்சிகள் 🦋 
உன்னிதயத்திலேயே 
பட்டா போட 
சிறகு விரிக்கிறது

தாமதம் 
மனிதர்க்கும்...
சம்மதம் உனக்கும்
பிடித்த மதமாக இருக்கிறது 

உன்னை உணரும் 
ஒவ்வொரு தினமும்
நவ ரத்தினம் 

நீ 
திரைக்குப் பின்னால் தான்
மறைந்திருக்கிறாய் 
மனது விலகியவுடன் 
காட்சி தருகிறாய் 

எத்திரை அதில் 
மறைந்து நீ அருளினாலும் 
அது 
முத்திரையே பதிக்கிறது 

நீ அமர்ந்திருக்கிறாய்
சிம்மாசனம் 
விளக்காகிவிடுகிறது 

நீ சுமந்திருக்கிறாய் 
கைக்குட்டை 
குழந்தையாகிவிடுகிறது

நீ 
பார்க்கிறாய் என 
நினைக்கிறார்கள் 
நீ 
ஊடுறுவுகிறாய் 

ஜோதி உனக்கு 
வேர்ப்பதே இல்லை

என் தலையை 
வெல்வெட்டாக்கு 

மகாபலி அல்லன் 
ஆயினும் 
அடியேன் மீது
தலை வை என்
வாமன சுவாமி

உன் 
கால் விரல் அழுத்த அது
ஊழ் வினை அழிக்கட்டும் 
உன் விரலெழுதும்
கவிதைகள் 
பக்தி விளக்கம் அளிக்கட்டும் 

உன்
காவி ஒரு 
சாவி அது திறக்க 
பாவியிடமிருந்தும் 
புனிதம் பிறக்கிறது 

சுவாமி போதும்
அந்தக் கைக்குட்டையை
தள்ளி வை 
அடியேன் உன் 
மடியேன் ஆகப்போகிறேன்!

73) அன்னபூர்ண சாயி அன்னதான சாயி:



சுவாமி நீ 
பரிமாறக் காத்திருக்கிறாய்

மனது 
துரித உணவை 
நோக்கியே நகர்கிறது 

ஆன்மாவுக்கேப் பசிக்கிறது  

ஆன்மாவின் 
அசுரப் பசியை 
சோளப் பொரி தந்து 
சமாதானம் சொல்கிறது மனம் 

சுவாமி நீ 
பரிமாறப் பரிமாற ...

ஒவ்வொரு இலையும் 
அமுத சுரபியாகிறது 

ஒவ்வொரு இமையும்
மழை நின்ற இலையாகிறது 

சுடச்சுட நீ பரிமாறுவது 
சுவையை 
நாவிலும் பாவிலும்
நன்றாகச் சேர்த்தே 
வரமாய்த் தருகிறது
தரம் வருகிறது 

நீ என்னை 
பசிக்கவிடுவதே இல்லை 
மாயையோ 
சுவாமி உன்னை 
ருசிக்க விடுவதே இல்லை

நீ தேர்ந்தெடுத்தப் பாத்திரத்தையே நிரப்புகிறாய் 
நிரப்பி நிரம்ப அதனால்
பிரசாதம் பரப்புகிறாய் 

இனிப்பை நீ பரிமாற
உண்ணும் போது 
காரமாகிறது

காரம் நீ பரிமாற
எடுக்கும் போதே
இனிப்பாகிறது 

இனிப்பும் காரமும்
இறைவா உன் காரணமே 

சிலபோது என்னை 
சமைக்கச் சொல்கிறாய் 
சுவாமி 
எந்தெந்த உணவில் 
எவ்விதம் ருசியென 
நீயே முடிவு செய்கிறாய் 

தியானச் சமையலாய் 
சுவாமி நீயே வருகிறாய்
இந்த ஒரு சமையலே
சமைக்கும் போதே 
பசியாற்றிவிடுகிறது 

அரைவேக்காடும் 
ஆண்டவா உன்னாலே
பக்குவமாகிறது 

சமையலுக்கே
நேரமாகிறது
இவர்களுக்கு 
வரம் மட்டும் துரிதமாய்
வேண்டுமாம்  

பயணிப்பதற்கே
பொழுதாகிறது உன்
பேரருள் மட்டும்
நொடியில் வேண்டுமாம்

இரவே 
நிதானமாய்த் தான் விடிகிறது 
செய்த கர்மத்திற்குப் பிராயச்சித்தம் மட்டும்
சடுதியில் வேண்டுமாம்

சுவாமி உன் திருவார்த்தைக்கு 
ஒரு அர்த்தம் 
உன் மௌனத்திற்கோ
ஆயிரம் 

உன் இந்தச் 
சிகப்புடை தக்காளி ரசம்
அதை தரிசிக்க தரிசிக்க
பரவசம் கலந்த நவரசம்

உன் அருளைப் 
பாத்திரத்தில் உணவாக்கித் தருகிறாய் 

உண்பதற்கு நான் தலைகுனிந்தால் 
உனை எப்படி 
தரிசிக்க முடியும்?

சுவாமி உன் 
பேரருளைப் பழச்சாறாக்கிவிடு 

என் விழி உன்னையும்
என்னிதழ் உன் பழச்சாறையும்
பருகட்டும்!

74) அனுமத் சாயி அனுபவ சாயி:



இதயத்தில் தாங்கியவரை
கையில் தாங்கியிருக்கிறாய்

இப்போது உன்
கரமே 
வரமாகி இருக்கிறது

தீபத்தில் உள்ள நீ 
ரூபத்தில் எழ 
தூபத்தில் உள்ள நான்
தாபத்தில் எழ 

உன் ஒளியோடே 
என் மணமும் ஒன்றிணைகிறது 

மலை சுமந்தவனை 
வலையில் சுமக்கிறாய்
உன் விரல்கள் வலைகள் 

மருந்து சுமந்தவனுக்கு நீ
விருந்தால் சுமக்கிறாய் 
சுவாமி உன் விரல்கள்
ஐசுவை விருந்து

காற்றால் பிறந்தவனை
மீண்டும் 
காற்றை அசைத்தே 
பிறப்பித்திருக்கிறாய் 

சிரஞ்சீவியை 
சிறப்பித்திருக்கிறாய் 

உன் தாளும் 
அவன் வாலும் கொண்டதை என்
ஜபத்தில் பற்ற வைக்கிறாய் 

இலங்கை எரிவது போல்
எண்ணங்கள் எரிகிறது
அது
உனக்கே தீபாராதனை 

அதில்
படியும் சாம்பல்
உன் விபூதியோடு சேர்ந்து விடுகிறது 

உன் விரல் உளிகள்
காற்றில் செதுக்கச் சிலையாகிறது
காற்றைச் செதுக்க
சுவாசமெனும் கலையாகிறது 
காற்றே செதுக்க என்
கண்ணீரே விலையாகிறது‌

காவி போர்த்திய 
சஞ்சீவி நீ 
உன்னைச் சுமந்தே 
அன்று
உன்னை எழுப்பினான் 

கற்களின் பாலமும் 
காற்றின் பாலமும் 
பாலம் அல்ல உன்
பலம் 

அவனும் நீயும் 
கடலைத் தாண்டினீர் 

தியானமாய் எழுகிறாய்
தினமும் சுவாமி
உன்னால் உடலைத் தாண்டுகிறேன்

உன் நாமமே 
சம்சாரக் கடல் தாண்ட
சிறகுகள் தருகிறது
அனுமனுக்குப் புரிபவை
பக்தர்க்கும் புரிய வேண்டும் 

புரிய வேண்டுமெனில் ஆசையைப் 
பிரிய வேண்டும் உன் 
சங்கல்பத்தில் 
பிரியம் வேண்டும்

ஆன்ம சாதனையின்றி 
ஆன்மீகமென்ன? 
தியான நிலையின் 
துரியம் வேண்டும் 

மலை சுமந்தவனுக்கு 
மலை தந்து 
சுமக்க வைத்தாய் 

இமை தந்து 
வியப்பை 
இமைக்க வைத்தாய் 

விஸ்வரூபனே 
விஸ்வரூபனை 
அறுபது அடியாக்கினாய்

அடியவன் அல்லவா அவன்
அதனால் அடியாக்கினாய் 

சாதா யுகத்தையும் நீ
திரேதா யுகமாக்கினாய் 
அவதரித்து
அவதரித்து
அவதரித்து
கடவுளே உனக்கு
த்ரை முகமாக்கினாய் 

எனது
அடியையும்
நொடியையும் நீயே சுவாமி
கவனிக்கிறாய்

நொடி நகர்வதாய்
நெஞ்சுள்
பயணிக்கிறாய்

அஞ்சனைக்கு அனுமன்
நெஞ்சணை தந்ததாய்
ஈஸ்வரன்னைக்கும் நீ 
இதயம் தந்திருக்கிறாய்

அனுமன் புரிந்த 
இரு யுக ஜபம்
அதனால் மீண்டும்
வந்திருக்கிறாய் 

பேரன்பாய் பூமியில்
இதோ இதோ
நேர்ந்திருக்கிறாய்

பக்தரைத் தேர்ந்தெடுத்துச்
சேர்ந்திருக்கிறாய்

சூரியப் பழத்தில் 
வதனம் வீங்கிய 
வாயு புத்ரன் 
உன் முகம் பார்த்து 
பால்ய நினைவுக்குப் போய் 
பிரம்மிப்பாகிறான் 

நீ சூரியனில்லை
சூரியனுக்கும்
சுடர் ஜோதியாய் 
சுடர ஜோதி தரும் 
சுய ஜோதி நீ 

புரிந்த அவன் 
பரவசமாகிறான் 

ராம ராம ராம ராம 
அதில் 
ஸாயி இணைத்து 
புதிய அனுபவத்தில் 
பிரசவமாகிறான் 

பாரதப் போரின் 
கொடியில் அமர்ந்தவன்
பரம்பொருளே உன் 
மடியில் அமர்ந்திருக்கிறான் 
இதோ இதோ இறைவா
உன் கைப்
பிடியில் அமர்ந்திருக்கிறான் 

அவனுக்கருளிய 
பக்தி கொடு 
அவனுக்கருளிய 
பிரம்மச்சர்யம் கொடு 

பிரம்மச்சர்யமே பேராச்சர்யம் 
பிரம்மாவின் விரலே
பிரம்மச்சர்யம் மேல் 
பூச்சொரியும் 

அவனுக்கருளிய 
தாசம் கொடு 
அவனுக்கருளிய 
சேவை கொடு 

நீ சொன்னதும் 
சந்தேகமின்றி 
உன் சொல்லை ஈடேற்றும் 
சிந்தை கொடு 

தந்தியாய் விரைந்து உன் காலடி விழும் 
மகா மந்தி அவன் 

சிவனுக்கு நந்தி போல் 
ஸாயி உன் பதத்தில்
செவ் வந்தி அவன் 

விடியற் விருப்பங்களை 
விடுத்த
அந்தி அவன் 

பக்திக்கும் சேவைக்கும் 
முச் சந்தி அவன் 

சுவாமி அவன் 
பக்திக் கடலின் 
துளியாவது கொடு 
அகமே அதை
தீர்த்தமாக்கி அருந்து
அது
தீரா பிறவி நோய் 
தீர்க்கும் அரு மருந்து
அதை
உட்கொள்ள 
உயிர் உய்யும் சிறந்து

மனிதன் ...

மந்தியாகவே இருந்திருந்தால் 
அனுமானாகும் வாய்ப்பிருந்திருக்குமே 

மழலையாகவே 
இருந்திருந்தால்
பிரகலாதனாகும் 
வாய்ப்பிருந்திருக்குமே

பாலகனாகவே இருந்திருந்தால் 
துருவனாகும் வாய்ப்பிருந்திருக்குமே 

முதிர் கிழவனாக இருந்திருந்தால் 
அப்பராகும் 
வாய்ப்பிருந்திருக்குமே

நடுத்தர வயது 
நரகமல்லவா சுவாமி 

மனத்தில் ராவணனே 
வீணையை விடுத்து
மகுடி வாசிக்கிறான்

இன்று போய் 
நாளை வா என
நயம்பட உரைக்காதே

இன்றே சம்ஹாரம் செய்
ஆணவம் அழித்து 
ஆலிங்கனம் செய் என்
ஆன்மாவை 

சாய் நீ உன்
சேய் நான்

75) தோரண சாயி நாரண சாயி:


சுவாமி நீ 
வரவேற்கிறாய் 
வரவேற்பே உன்னால் தான்
வரவேற்கப்படுகிறது 

சுவாமி நீ அழைக்கிறாய்
அழைப்பு மணி தன்னையே
அழுத்திக் கொள்கிறது 

உன் புன்முறுவல் வரவேற்பு 
அழைத்து வந்து 
பிறவிகள் வருவதைத் 
தடுத்து விடுகிறது 

சுவாமி 
ஒவ்வொரு கணமும் உன்
ஆலிங்கனம் 

மனதின் கனமும் உன் 
மந்தஹாச ஆலிங்கனத்தால் தான்
மறைந்து போகிறது 

கையில் பூச்செண்டு வைத்து
வா என்கிறாய் 
பூங்காற்றுப் புறப்பட்டு வருகிறது 

இதழில் புன்னகை வைத்து
வா என்கிறாய் 
பிரபஞ்சமே நகர்ந்து
பக்கத்தில் வருகிறது 

இன்னொரு கையில் அழைப்பிதழா ...
உன் கையிலும் 
உன் முகத்திலும்
அச்சடித்த
அழைப்பிதழ் உன்
அன்பை அல்லவா பதிந்து வைத்திருக்கிறது 

பூமிக்குக் காட்டுவது
அன்பு 
பிரபஞ்சத்திற்கே காட்டுவது
பேரன்பு 

மாறன் அம்பை உன் 
பேரன்பே 
பொடிய வைக்கிறது 

வருத்தக் கண்ணீரை
வடிய வைக்கிறது 

கொத்துக் கொத்தான 
கனிகளை உன்
கருணையே 
கொடியில் வைக்கிறது

கொடியில் வைத்த ரசங்களை 
ரசவாத சுவாமி உன் 
நிகழருளே நெஞ்சத்தோடு
நொடியில் வைக்கிறது 

உன் 
நயனங்களின் ஆவல் 
விரல்களின் காவல் 
இதழ்களின் தூவல் 
என் இதயச் சேவல்
உன் 
பஜனைக் குரலில் 
விழிக்கிறது 

இருட்டிலிருந்து
எட்டிப்பார்க்கும் 
பேரொளியாய் உன் 
வதனம் 

அது
பொருப்பிலிருந்து 
தலை எழும் 
தண்ணிலாவை விட 
குளிராய் இருக்கிறது 

எனை
குளிர்விக்கவே அது 
குறியாய் இருக்கிறது 

திரி உடலின் 
ஆன்ம விளக்கில் 
அன்றாடம்
பொறியாய்ச் சிரிக்கிறது

நீ அழைப்பதால் 
உனை நோக்கி 
நகர முடிகிறது

நீ அனுமதிப்பதால்
உன் மகிமையைப் 
பகிர முடிகிறது 

சூட்சுமமும் சுடரெழும்
சுந்தரமும் நீயே 
பிரசாந்தியிலும்
பிற சாந்தியிலும் நீயே 
வசிக்கிறாய்

பக்தியை ருசிக்கிறாய் 
வெகுளித்தனத்தை 
வெகுவாய் ரசிக்கிறாய்

மனதின் இரைச்சலை
செவி மடுப்பதில் 
சுவாமி நீ அழைப்பது
இவர்களின் காதில் 
விழவில்லை 

சுயநலம் படிந்திருப்பதில்
சூரிய ஒளியே நீ 
சுவையோடிருப்பது 
இவர்கள்
பேசிக் கொண்டே இருப்பதால் 
புரிவதில்லை 

மௌனமே உன் 
சுவையை உணரமுடிகிறது 

சுவாமி நீ 
அழைக்கக் கூட 
அவசியமில்லை உன் 
அருகிலேயே இருக்கிறேன்

சுவாமி எனக்கு
வேண்டுவது கூட 
விருப்பமில்லை 
நீயே நொடிதோறும்
நிகழ்ந்து 
கொண்டே இருக்கிறாய்

76) ஆசீர்வாத சாயி அபய ஹஸ்த சாயி:

சுவாமி உன் 
ஒரு கை ஆசி 
அகிலத்திற்கு 
இரு கை ஆசி
ஆன்மாவிற்கு 

இரு கை ஆசியும் 
இதயம் சேர்கிறது 
அது சேர்வதாலே 
உதயமும் நேர்கிறது 

காக்கிறது உன் 
கரங்கள் அதை
பற்றிக் கொண்டு நடந்தாலே
பற்றும் அற்று
பாதுகாவல் பெற்று 
தொற்றும் தூய்மையாய்
சுற்றும் சுடராய் 
சுற்றம் பெறுகிறது 

வழிய வழிய வரங்கள் பெற்று என்
பாத்திரமும் 
விரிந்து கொண்டிருக்கிறது 
உன் சூத்திரமும் 
சுரந்து கொண்டிருக்கிறது 

நாயைக் கல்லாலும்
நோயைக் கடவுளாலும்
விரட்டிவிட முடிகிறது 

கர்மாவைக் கழிக்க
நோய்கள் நிமிர்கின்றன 
நோய்கள் நிமிரும் போது 
ஆணவ மனம் 
தலை குனிகிறது

சுவாமி நீ 
குணமாக்க வந்தவன் 
நோயிடமிருந்தா இல்லை
நோயினால் தொற்றும் 
பயத்திடமிருந்து

பிறவியே 
பெரிய நோய்
புரியாதவர்களுக்கே 
காய்ச்சலும் 
கால் நடுங்க வைக்கிறது 

சுகமாய் வாழும் வரை 
சுவாமி உனை யாரும்
சுவைப்பதே இல்லை 

கடினமானதிற்கே
கடவுள் நீ தேவைப்படுகிறாய் 

எங்கே மனிதன் தோற்கிறானோ
அங்கே சுவாமி நீ ஜெயிக்கிறாய் 

எங்கே மனிதன் 
பணிந்து போகிறானோ 
அங்கே சுவாமி நீ 
கனிந்து போகிறாய் 

எங்கே மனிதன் 
தன் செயலிலை எனத் 
தெளிகிறானோ 
அங்கே சுவாமி நீ 
லீலைகள் புரிகிறாய் 

எங்கே குற்றம் காணுதல் முடிகிறதோ
அங்கே கடவுள் பேணுதல் ஆரம்பிக்கிறது 

உன் ஒரு கை 
தருகிறது 
மற்றொரு கை 
தடுக்கிறது

நல்லதைத் தந்து
தீயதைத் தடுத்து
ஒரே நேரத்தில் உன்னால் மட்டுமே
இருவினையாற்ற முடிகிறது 

உன் சங்கல்பமே நிறைவேறுகிறது
எங்கள் எண்ணம் 
வெறும் மனதின் 
மாயக் கூச்சல்

உன் ஆசிர்வாதமே 
ஆள்கிறது 
மனிதன் வெறும் 
அரியாசனத்தில் மட்டுமே 
அமர்ந்து கொள்கிறான் 

உன் விருப்பப்படியே 
வீடும் நாடும் காடும் 
நிகழ்கிறது அதை
தானே நிகழ்த்துவதாய் 
மாயையில் இருக்கிறான் 
மனிதன் 

மூச்சு 
வருகிறது போகிறது
வருகிறது போகிறது
மனிதன் செயலுக்கும் 
அதற்கும் 
என்ன சம்மந்தம்? 

அன்றாட மூச்சையே 
நீ தான் ஆள்கிறாய் 
மனிதனென்ன பெரிதாய் 
மண்ணில் நிகழ்த்தியிருக்கிறான் ?

கர்வக் கிருமியையும் 
பேராசைக் கொசுக்களையும் நீயே
நசுக்குகிறாய் 

சுயநல வைரஸ் அச்சுறுத்துகிறது‌
மனிதன் 
சாகப் போகிறோம் என 
உணராமலேயே 
வாழ்ந்து கொண்டிருக்கிறான் 

நீயே ஆயுள் தருகிறாய்‌
நீயே ஆற்றல் தருகிறாய்
நீயே ஆசிகள் தருகிறாய்

சுவாமி
சுயமாய் மனிதனிடம்
ஏதுமில்லை 

நிலையாமை ஒரு போதிமரம் 
நீயே மனிதனை 
புத்தராக்குகிறாய் 

ஆழ்கடல் உணர்த்தா
கீதையை 
நீர்க்குமிழிகள் உணர்த்திவிடுகின்றன‌

சங்கை ஊதி உணரா
பேருண்மை 
சங்கில் காது வைத்தால் 
புரிந்து போகிறது

நிகழ்வதை
நிகழ வைத்து நீயே 
பார்த்துக் கொண்டிருக்கிறாய்

உன் பாதத்தில் 
உண்மை பக்தரைச் 
சேர்த்துக் கொண்டிருக்கிறாய் 

விருப்பு வெறுப்பின்றி
வெறுங்கையோடு 
வருபவரை உன் 
விரல் தந்து கைக்
கோர்த்துக் கொண்டிருக்கிறாய் 

உன்னோடு இணைவதென்பது 
ஆன்மாவோடு 
ஆழ்ந்து போவது 

ஆசைக் காதுகளுக்குன்
பாஷை விழுவதே இல்லை

நாங்களே பேசிக் கொண்டிருந்தால்
நீ பேசுவதெப்படி கேட்கும்? 

எங்களது பெருமையென்று 
எதுவுமில்லை
உனது மகிமையே 
பிரபஞ்சப் பெருமையாகிறது 

இதயத் தோல்
எருமைத் தோலாகி இருந்தால் 
நீ எழும் பேருணர்வை
எப்படி உணர முடியும்? 

நீ தருவதை 
நாங்கள் பெறவேண்டும் 
நாங்கள் கேட்பதை
நீ ஏன் தர வேண்டும்? 

நீ கடவுளா இல்லை
ஹோட்டல் சர்வரா ?

கருணை வைத்திருப்பவன் உன்னை 
கடை வைத்திருப்பவனாய் 
நினைத்து 
இஷ்டத்திற்குக் கேட்கிறது 
தன் இஷ்டத்திற்குக் கேட்கிறது 
இஷ்டம்

இஷ்டம் என்பதே 
இனிப்பு தடவிய
கஷ்டம்

உலகத் தாய் 
உனக்கே 
நன்மை தீமை தெரியும்

பிரபஞ்சம் படைத்தவன்
உனக்கே எங்களின்
பிறவிகள் தெரியும்

அலை பாயும் 
மனதின் கோரிக்கைக்கு
நீ ஏனுன்
விலையில்லா நேரத்தை
விரயமாக்க வேண்டும் ?

புரிந்து கொள்ளும் படி
நீயே 
புவி சாய்க்க வேண்டும் 
புரிய நீ வைத்தும் 
புரியாதவர்களுக்கு ஏன்நீ
செவி சாய்க்க வேண்டும் ?

மகிமையை 
நீ பார்த்துக் கொள்கிறாய் 
மாயையை 
கர்மா பார்த்துக் கொள்கிறது 

இந்த இரு கை தான் 
இதே இரு கை தான் 
வேறென்ன வாழ்க்கையில் 
வேண்டுவது?

குடும்பமா
உறவா
நட்பா
சுற்றமா 

இந்த இருகை தராத 
வெளிச்சம் 
வேறெதும் தருவதால்
ஆனந்தம் பற்றுமா? 

சுவாமி நீ 
எதையும் தரத் தேவையில்லை
இப்படியே கரம் வைத்துக் கொண்டிரு
இதை தரிசிக்கும்
இறையானந்தம் விடவா
இவ்வுலகம் இவர்களுக்கு
இனித்துவிடப் போகிறது ?

கொடுக்கவே கூப்பிடுகிறாய்
என் குப்பைகளைக் கொட்டவே உன் 
காலடிக்கு வருகிறேன் 

அழுக்கைத் துடைத்தே‌
கிழக்கை ஒளியாக்குகிறாய் 

அழுக்கைத் துடைக்கவே
அகத்தை
வலியாக்குகிறாய்

வலி ஒரு வரம் 
அதை வைத்துத்தான் 
சுத்தப்படுத்துகிறாய் 

நீ தந்ததில் தான் 
வாழ்கிறோம் 
சுவாமி நாங்கள் 
தருவதற்கே நிறைய 
தவறுகள் இருக்கிறது எங்களிடம் 

ஏற்றுக் கொள் 
மாற்றிவிடு 
உயிர் உஞ்சவர்த்தி ஏந்தி
உன்னிடம் ஊர்வலமாய் வருகிறது

நெஞ்சம் 
நெடுவீதியில் 
நகர சங்கீர்த்தனம் போகிறது 

வாழ்வதெல்லாம் சுவாமி 
உனது யாசகத்தில்...
இனி 
வாழ்க்கை நடக்க வேண்டியதெல்லாம்
சுவாமி உனது வாசகத்தில்...

77) பந்து சாயி பவலீலா சாயி:



பந்து நீ 
என்னோடு விளையாடுவதும் நீ 
சுவாமி 
உன் பந்தை 
உயிர்ச் சிந்தாக்கி 
உரையாற்றுகிறாய்

அதையே 
சிந்தையாக்கி நீ 
கரையேற்றுகிறாய் 

என் ஒரே 
பந்து மித்ரனே 
பூமிப் பந்தை 
பந்தமாக்க விரும்பாது
உன் 
பாதார விந்தத்தையே
பந்தமாக்க விரும்புகிறேன் 

காற்றில் ஓர் சப்தம் 
செவிமடுத்தாலும் 
நீதான் அழைக்கிறாய் 
திரும்புகிறேன் 

உன் மட்டையில் 
பிடிபடாமல் 
எங்கே போகும் 
பிரபஞ்சப் பந்து 
வலையல்லவா 
உன் மட்டை 
நிலைபெற வேண்டி
கலையாகச் சொல்லவா
உன் எட்டை

இது
அலகிலா விளையாட்டு 
ஆன்மாவே 
அய்யனின்
அசைவிற்கேற்ப நீ 
தலையாட்டு 

உன் விருப்பம் 
நிறைவேற்ற நீ
நெருங்கிவராதே 
ஓ மட மனமே...
அவன் விரும்புவதையே
உன் விருப்பமாக்கு

பிறவி போகிறதே
இப்பிறவியையாவது
நீ தெய்வத் திருப்பமாக்கு 

உடம்பைச் சிற்பமாக்கு 
அசையாதிரு 
உள்ளத்தை மலட்டிலிருந்து 
மாதவனைச் சுமக்கும் 
கர்ப்பமாக்கு 

பம்பைத் தலை 
பெளர்ணமி முகம் 
பாற்கடல் அகம் 
தியான சுகம் 
தீப்பிழம்பு நயனம் 
இவை தான் 
சுவாமி உன் 
உருவமா ?

நீ 
எவ்வடிவத்திலும்
எவ்விதத்திலும் 
எவ்வார்ப்பிலும் 
வருவாய் 

இதோ
பிரேமமாய் புறப்படுகிறாய் 
அதையே நிதம்
ஆன்மாவில் 
நிரப்பிடுகிறாய் 

நீ 
பால் நிரப்பினாலும்
தேன் நிரப்பினாலும் 
அமுதம் நிரப்பினாலும்
தண்ணீர் நிரப்பி உன் 
தாகம் தணித்தாலும்

நானுனக்கான கோப்பை
நீ எதை ஊற்றினாலும் 
நீ அருந்தவே 
ஏந்தியிருப்பேன் 

நீ என்
தலை கொய்து 
பந்து விளையாடினும் 
தலையற்ற கைகள் 
உன் 
விளையாட்டைக் கைதட்டி வரவேற்கும் 

நீ என் கண் எடுத்து 
கோலி ஆடிடினும் 
புன்னகையால் உன்
பாதம் பிடித்தே 
பரமானந்தம் பெறுவேன் 

நீ எஜமானன் 
அடியேன் தாசன் 
சாயி காயத்ரியை 
சதா ஜபிக்கும் சுவாசன் 
நீ எது தரினும் 
அதை ஏற்கும் விஸ்வாசன் 

எனக்கென்று 
சொந்த வீடு இல்லை
உன் மடி இருப்பதால் 
எந்த வீடு பற்றியும் 
ஏக்கமில்லை 

எனக்கென்று வாகனமில்லை 
உன் கைகள் இருப்பதால் 
நான்கு சக்கரங்கள் பற்றிய 
அக்கறை இல்லை 

நான் ஓட்டும் 
சைக்கிள் சக்கரமே
நீ கையில் ஏந்திய
சங்கு சக்கரம் 

நொடி தோறும் நீ
நிகழ்ந்தபடி
நகர்ந்திருப்பதால்
நாளை பற்றிய 
நினைவே இல்லை 

முக்தி பெற்ற அந்த
மட்டை தன்
மலட்டை நீக்கி
பந்து குழந்தையை நீ தட்டத் தட்டத் 
தாலாட்டுகிறது 

எதிர்திசையில் 
உன் 
எதிர் தாக்குதலை 
சமாளிக்க முடியா 
ஈரேழு பதினான்கு லோகத்தவரும் 
உன் பாதம் நோக்கியே
விழுகின்றனர் 
பரந்தாமன் நீ ஒருவனே எனத்
தொழுகின்றனர் 

சுவாமி உன் 
பவித்ரம் பார்ப்பதா 
நீ விளையாடும்
பந்தைப் பார்ப்பதா 

விளையாட்டின் 
விதிமுறை எல்லாம் 
நீ விளையாடுகையில்
வாயை மூடி 
ஓரமாய் அமரும் 

விதியையேப் பந்தாக்கி
விளையாடும் உனக்கு முன்
விதிமுறை கொஞ்சம்
விடுமுறை எடுக்கும் 

எதை ரசிப்பது
நீ கைப்பிடித்த அழகையா 
பந்து வரப்போகும் பாங்கையா 

நீ அடித்தாலும் 
பந்து 
உனை விட்டு நகருமா
அப்பந்துக்கும் 
அப்பன் நீ 
அதற்கும் என் குணமே 
எப்படி அகலும்? 

வியாதியையும் 
விதியையும்
விதண்டா வாதத்தையும் 
வரட்டு கௌரவத்தையும்

இப்படித் தான் நீ 
அடித்தடித்து
அந்தகார இருளுக்கு
அனுப்புகிறாய் 

பிடிவாத குணங்கள் நீ
சொல்வதை ஏற்கமுடியாது
சங்கடப்படுகின்றன 

சரணாகதி என்பது வேறென்ன ?
உன் சங்கல்ப நிறைவேற்றலே அன்றி
எங்கள் விருப்பப்படி 
ஒன்றுமில்லை என்பதே...

நீ 
எது சொல்கிறாயோ
அது வேதமாகிறது 
அது வேதத்திலேயே 
இல்லாது போயினும்
வேதமே தன்னைப் 
புதுப்பித்துக் கொள்கிறது 

கண்மூடிய தியானத்திற்கும் 
கண்மூடித்தனமான 
பக்திக்குமே நீ 
பற்றுகிறாய் 

தோராயங்களே 
ஆராய்கின்றன 
முழுமை உன்னடியில்
செழுமை அடைகின்றன

விளையாடி
விளையாடிக் களைத்திருப்பாய் 
என் இதயம் பிழிந்து
பழரசம் தருகிறேன் 
சற்று 
இளைப்பாறு சுவாமி 

அடுத்த ஆட்டத்திற்கும்
அடுத்த அவதாரத்திற்கும்

தயாராகவே இருக்கிறேன் 
நீ என்
தாயாராக இருப்பதால்...

78) விபூதி லீலா விநோத சாயி:


சுவாமி நீ 
எட்டிப் பார்க்கிறாய் 
உலகம் உருப்பட்டதா என ஒரு
எட்டு பார்க்கிறாய் 

விபூதிக்குள்ளிருந்து வரும்
மருந்தாய் நீ 
முகம் காட்டுகிறாய்

விபூதி தான் முடிவில்
வியப்பதெல்லாம் என
யுகம் காட்டுகிறாய்

யுகத்திற்குக் காட்டுகிறாய் 

விபூதியிலிருந்து எழும் 
சுகந்தமாய் உன் 
சுந்தரம் காட்டுகிறாய்

நீ குழந்தை தான்
அதற்கு இப்படியா 
முகத்தைத் தவிர 
மற்றதெல்லா பாகத்திலும் அது
பூசும் பவுடராய் இந்த
விபூதிக் கோலம் உன்
விஸ்வ ஜாலம் 

விரோதியும் உன் 
விபூதி பூச 
வினோதியாவான் 

பக்தன் 
முக்தன் ஆவதற்கான 
முன்னேற்பாடு இந்த 
விபூதி பூசுதல் 

மனிதன் 
பக்தன் ஆவதற்கான 
ராஜபாட்டை இந்த
விபூதி பேசுதல் 

பூசுதலை உன்னால் தான்
பேசுதலாக்க முடிகிறது 

இருளில் எட்டிப் பார்க்கும் 
நிலா
அருளில் எட்டிப் பார்க்கும் 
நிலா உன்னோடு 
உலாப் போக காத்திருக்கிறது 

நீ அதற்கு
பொறுமை தந்ததை உன்
பிறந்த நாளில் 
உடுத்திக் கொள்கிறாய்

விபூதியை 
நெற்றியில் இட்டால் 
பக்தி
வாயில் உண்டால் 
முக்தி 

விபூதியை
வாயில் இடும் போதே
அது
கோயில் ஆகிவிடுகிறது 

நோயுற்றப் 
பாயில் இட்டால் 
காயில் இடும் புகையாய்க்
கனிகிறது நோய் 
தணிகிறது

மருத்துவர்களின் எதிரி உன் 
மகத்துவ விபூதி 

ஆரோக்கியத்தின் 
அன்னை இந்த
வெண்ணெய் விபூதி 

விபூதியின் மிருது உன்
விசித்திர இதயம் 
விபூதியின் பக்குவமுன்
வெளிச்ச அகம் 

நீ உன்
விரல்களையே 
இவர்களின் 
வீட்டுக்குத் தரமுடியாது என்பதால் 
விபூதி தருகிறாய் 

பரிபக்குவம் 
தொட வேண்டாமா 
அதனால் தானுன்
பாதங்களைத் தொட வைக்கிறாய்

முழுமையாய் ஏற்கும் 
மீதங்களைத் 
தொழ வைக்கிறாய் 

உன் படத்தில் 
விபூதி வரும்போதெல்லாம் 
அதன்
கண்ணாடியே உன்
விரலாகிறது 

அதுப்
பொழியப் பொழிய 
அருட் பஸ்பமே
பாஷையாகிறது 

அதை 
மொழி பெயர்த்தால் 
நீ கடவுள் என்பதை
ஒளி பெயர்க்கிறது 

மண்ணுக்குள்ளிருந்து
தென்படும் 
வைரமாய் ...
விண்ணுக்குள்ளிருந்து
தென்படும் 
ஒளி மீனாய்... 
கண்ணுக்குள்ளிருந்து
தென்படும் 
பார்வையாய்...

நீ 
திருநீறுக்குள்ளிருந்து 
தென்படுகிறாய் 

அருவியை 
நீராகவும் ...
நீறாகவும்...
நீயே சுவாமி 
பொழிய விடுகிறாய்

நனைய நனைய 
நெஞ்சையும் சேர்த்து 
வழியவிடுகிறாய்

கர்மாவைக் 
கழிய விடுகிறாய் 

தெளிவை இன்னும் 
தெளியவிடுகிறாய்

சாதக் குழிவில் ஊற்றிய
தயிராய்...
தேகப் பொதியில் ஊறிய
உயிராய் ...

விபூதியில் உன்னிந்த 
தரிசனம் 
உண்ணும் ஆன்மாவிற்கு
எங்கிருந்தினி 
உலகப் பசி எடுக்கும்?

78) அலங்கார சாயி அலங்காரி சாயி:


நீ அணிவித்த உடை தான்
எல்லா தெய்வங்களும் 
உடுத்துகின்றனர் 

நீ பணிவித்த பணிதான் 
எல்லா தெய்வங்களும்
அருளாய் எங்களுள்
கடத்துகின்றனர் 

நீ அலங்காரம் செய்துவிடுகிறாய்
அதுவே 
யுகம் தோறும் 
அவதாரமாகிறது சுவாமி 

சுவாமி நீ கடவுள் 
உன் 
ஆணைக்கிணங்க 
அணை உடைத்து வெளிவருகிறது
அருள் 

உன் 
ஆணைக்கிணங்கவே 
ஆணாகவோ 
பெண்ணாகவோ 
தெய்வங்கள் 
தேருலா புறப்படுகின்றன

உன் 
சங்கல்பப்படியே 
சந்நிதானத்தில் 
அருள் சேவையாற்றுகிறார்கள் 
ஆண்டவர்கள் 

உன் 
விரல் அசைவிலே தான் 
வினையாற்றுகிறார்கள் 
விநாயகர் தொடங்கி
வாயுபுத்திரர் வரை 

உன் 
அசைவுப் படி
அசைந்து கொள்கிறார்கள் 
அவதாரிகள்

சம்பவாமி யுகே யுகே 
என்பதன் 
சம்பவமும் நீயே 
சுவாமி 

யுகங்கள் உன்
நகங்கள் 

அளவோடு தான் 
வைத்திருக்கிறாய் 
மனிதரையும்...
மாமாங்கங்களையும்...
மகா யுகங்களையும்...

சுவாமி 
நீ புல்லாங்குழல் கொடுத்தால் 
கண்ணனும் 
அதே 
புல்லாங்குழலை
புல்லாக்கி
புல்லை வில்லாக்கிக்
கொடுத்தால் 
கோதண்ட ராமனும் 

நீ எது தருகிறாயோ
அதைப் பெறுகிறது
அவதாரங்கள் 

நீ எது கொடுக்கிறாரோ
அதை ஏற்கிறார்கள் 
ரிஷிகள் 

நீ எதை சங்கல்பிக்கிறாயோ
அதைப் பெறுகிறது‌
பிரபஞ்சங்கள்

மௌனமாகவே இருக்கிறது 
மலர் 
நீயே பேசு என்கிறாய் 
உடனே அது 
வாசனையாகிறது 

நீ கிழித்த 
கோடுகள் தாண்டும் 
சீதை இறுதியில்
சிதையில் 
இறங்கி ஏறவேண்டி இருந்தது 

இலக்குவன் 
கிழித்தான் அதைக்
அக்னிக் கோடாக்கியது நீதான் சுவாமி 

நீ கிழித்த வட்டத்தோடே
சுற்றி வருகிறது 
கோள்கள் 

நீ தீர்மானிப்பதே 
திசைதோறும் நடக்கிறது

உன் கட்டளைக்கே
கட்டுப்படுகிறது
கர்மாவும்...
கலியுகமும்...

எங்கள் 
விருப்பம் உன்
சங்கல்பமாகவில்லை 
உன் சங்கல்பமே 
எங்கள் விருப்பமாகிறது

அப்படி ஆகாத 
விருப்பத்திற்கில்லை 
உள்முகத் திருப்பமும்

என்ன வேண்டுவது?
எது தெரியும்
எங்களுக்கு?
என்னென்ன பூர்வீகம்
எது எதுவென 
எப்படிப் புரியும்? 

உன் வினையே 
வாள்முனை 
அதுவே அழிக்கிறது 
கர்மாவை

உன் செயலே 
அக்னி வயல்
அதுவே வளர்க்கிறது
ஆன்மாவை 

சரணாகதி ஒரு மௌனம்
அதற்கென சொல்லில்லை
அது நிகழ்ந்தபிறகும் 
எனக்கான எந்த
 சொல்லுமில்லை
எனக்கானவை
எதுவுமே இல்லை

அலைதல் இல்லை
வலித்தல் இல்லை 

கண்மூடி உனைக்
காண்கையில்
திசையோடு எந்தத்
தொடர்புமில்லை 

நீ 
அலங்கரிக்கிறாய்
நீயே
அவதரிக்கிறாய் 
நீ
ஆலிங்கனம் புரிகிறாய்
நீயே
ஆன்மாவாய் விரிகிறாய் 

நீ 
எதை மாற்றுகிறாயோ
அதுவே ஏற்றம்
நீ
எதை ஏற்றுகிறாயோ
அதுவே மாற்றம் 

சுவாமி நீ 
பேரதிர்வு...
பேருணர்வு...
பேரனுபவம்...

எங்கள் எண்ணமுன்னை
எந்தத் தொந்தரவும் செய்வதில்லை 

உருவ வேடங்கள் 
வடிவ முகமூடிகள் 
அழகாகவே இருக்கிறது

இப்படி
தெய்வம் அணியும்
முகமூடிகளில் எல்லாம்
சுவாமி நீயே
முகமாய் மறைந்திருக்கிறாய் 

இப்படி
உடை அலங்காரம் மட்டுமல்ல 
எங்கள் உடம்பையும் 
அலங்காரமாய்த் தான்
ஆன்மாவுக்கு
அணிவித்துவிடுகிறாய் 

நாடகம் முடிகையில்
உடம்பு கலையலாம்
ஆன்மா எப்படி கலையும்?

என் பேரான்மாவே 
நீ  தான் சுவாமி
நான் வெறும்
நீ அணிவித்த
அலங்காரம் மட்டுமே!

79) பாத பூஜா சாயி பாதக ஹர சாயி:

சுவாமி உனக்கு 
பூஜை செய்யும் போது 
எல்லா கடவுளரும்
உன்
கால்களில் விழுகின்றனர் 

கோள்களில் விழும் 
கர்மங்கள் கூட உன்
தாள்களில் விழுகிறது

வாள்களில் விழும் 
மாலைகள் கூட உன்
தோள்களில் விழுகிறது

உனக்கு பாத பூஜை
பாவங்கள் 
புனிதமாகின்றன 
பாவிகள் திருந்தி
காவிகளாகி உன் 
காலடியில் உறைகின்றனர் 

என்னைக் கொய்து கொள் எனப்
பூக்களே தலை தருகிறது‌
சுவாமி உனக்கு 
பாத பூஜை 

என்னை நிரப்பிக் கொள் என 
நதிகளும் 
ஆனந்தமாய் அழுகிறது
சுவாமி உனக்கு பாதபூஜை 

என்னை எரித்துக் கொள் என 
விளக்கு தானே
தீப்பெட்டி தருகிறது

ஏகாதசித் திரிகளும் 
தீக்குளிக்க சம்மதிக்கிறது

சுவாமி உனக்கு 
பாத பூஜை

எதையும் தராத 
மனிதனுக்கு
ஏகப்பட்ட கோரிக்கை 
இதோ 
திருடன் கள்ளச்சாவியோடு
பொக்கிஷத்தை நெருங்குகிறான் 

சுவாமி உனக்கு
பாதபூஜை 

நாத பூஜை 
பிரபஞ்சம் புரிய 
கீத பூஜை
பஜனை புரிய 
வேத பூஜை
யுகம் புரிய 
சுவாமி நீ மட்டுமே
கடவுள் என 
போகப் போக
பக்தர்க்குப் புரிய 

இறைவா
இதோ உனக்கு 
இதமான பாதபூஜை

தலையில் நீ 
அண்டம் தாங்க
கையில் நீ
கலியுகம் தாங்க
பாதத்தில் நீ 
பக்தரைத் தாங்க 

உனக்கான பாதபூஜையில்
பக்தரே 
தூய்மையடையப் போகின்றனர் 

நீ கொண்ட கருணை
பக்தர் கொள்ள 
தாய்மையடையப் போகின்றனர் 

நீ பேசும் சத்தியம் 
பக்தர் பேச 
வாய்மையடையப் போகின்றனர் 

நோய்கள் மட்டும் 
பாய்களில் செத்துவிடும்
நோயாளிகள் 
சுவாமி உன்னால் 
எழுந்து கொள்வர் 

எழுந்து உன் 
பாத பூஜைக்கே செல்வர் 

அன்பாய் இருப்பதே
அறமாய் இருப்பது
சுவாமி உன்
அறத்தைத் தாங்கிப் பிடிக்கும்
மரமாகப் போகின்றனர் 

வாயில் மரங்கள் 
நாளை உன்
கோயில் கொடி மரங்களாய்க்
கனியப் போகிறது 

தாப ஏக்கம்
தணியப் போகிறது

பாழான அகந்தை உன்
பாதத்தைப்
பணியப் போகிறது 

ஏற்பது இன்னும் 
சரணாகதியாய்
கனியப் போகிறது 

இந்த விளக்கு 
புன்னகைக்கிறது 
ஜோதியே நீ 
நாற்காலியில் அமர்ந்து 
ஒளிர்கிறாய் 

இந்தத் தாம்பாளம் 
யாருடைய இதயம்?
சுவாமி நீ பாதமாய் 
குளிர்கிறாய் 

யுகம் யுகமாய்
அழுக்கடைந்த
ஆகாய நிலாவிலும் நீ
தெரிகிறாய்
சுவாமி
அழுக்கடைந்த என்னகத்தில்
நீ அன்றி வேறு 
எவர் குடி வாழ்வது?
ஊன்றி நடுகிறேன்
ஊண் கடந்த உளத்தில்
உன் கொடியே ஆள்வது! 

உன் 
கழுத்தணி மாலை 
அடுத்த ஜென்மத்தில்
ஆன்றோன்
நாற்காலியோ 
நாரதன் 

உலகத்திலும் 
நாற்காலி தானே 
நாரதன்  

உன் பாதத்தில் 
தூபம் போடுகிறேன் 
என் பாதகத்திற்கு
தூண்டில் போடுகிறாய் 

உன் பாதத்தில் 
பூக்கள் தூவுகிறேன் 
என் சிரசில் 
அட்சதை தூவுகிறாய் 

உன் பாதத்தில் 
குங்குமம் இடுகிறேன்
என் ஆன்மாவோடு
சங்கமம் ஆகிறாய் 

உன் பாதத்திற்கு
ஆரத்தி எடுக்கிறேன் 
உனை அடைய முடியா 
ஆறா தீயும் 
அணைந்து போகிறது

என் செல்லமே
என் கண்ணே
என் சுவாமி நீ 
அடியேனை
அணைத்துக் கொள்கிறாய் !

80) சாது ஜன சேவித சாயி:



சாதுக்களின் 
சாதனை நீ 

முனிவர்களின் 
தவம் நீ 

ரிஷிகளின் 
தபோவனம் நீ 

சன்யாசிகள் அணியும்
காவி நீ 

கடவுளர் பணியும் 
ஜோதி நீ 

உள்ளத்திலிருந்து
உலகிற்கும் 
உலகிலிருந்து
உள்ளத்திற்கும் 

நீ  பெயர்கிறாய் !

நெற்றியிலிருந்து
இதயத்திற்கும்
இதயத்திலிருந்து
நெற்றிக்கும்

நீ உயர்கிறாய் !

யோகிகளின் யோகம் நீ
யாகங்களின் தேகம் நீ

உன் 
தேகங்களின் பாகங்களில்
வேதங்களே வீற்றிருக்கின்றன

சிரசு முதல் கழுத்து வரை
ரிக் வேதம்
கழுத்து முதல் இதயம் வரை
யஜூர் வேதம் 
வயிற்றிலிருந்து இடுப்புவரை
சாம வேதம்
இடுப்பிலிருந்து கால் வரை
அதர்வண வேதம் 

உச்சிமுதல் பாதம் வரை
மெச்சி உனை 
சகலரும் ஏற்கும் 
சதுர் வேதம் நீ 
சுவாமி 

நீ விரும்புவதையே 
தவமும் 
விரும்புகிறது

நீ திரும்புகையில் 
சிவமும் 
திரும்புகிறது 

பதினெண் புராணம் 
உன்னோடு சேர்த்து
இருபதாய் உன்
இருபது விரல்களிலேயே
அசைகிறது 

சந்தியா வந்தனமாய் 
சிரிக்கிறாய்
அந்தியை தந்தி அடித்து
நீ தான்
அழைக்கிறாய்

உயிர் தான் உடம்பு
உடம்பு வெறும் உடை
நீ 
அணியவைத்து எனை
அணிந்து கொள்கிறாய் 

யுகம் யுகமான கேள்விக்கு
சுவாமி நீயே பதில் 

மகான்கள் உனக்கு 
கருவிகள் அவர்கள்
நீ படைத்தப் பிறவிகள் 

நதிகள் அவர்கள் 
நீயே பிறப்பிக்கிறாய்
நீயே பிணைக்கிறாய் 
நீயே புதுப்பிக்கிறாய் 

கடல் உன் உடல் 
மடல் உன் இதழ் 
கலை உன் தலை 
சிலை உன் நிலை 

நீயே ஞானமாய் நிலைக்கிறாய்
ஞானிகள்
 வருகிறார்கள்
போகிறார்கள் 

நீயே மௌனமாய் 
நிலைக்கிறாய் 
புத்தர்கள் 
வருகிறார்கள்
போகிறார்கள்

நீயே தியானமாய் 
நிலைக்கிறாய் 
ஆத்மா 
உடலுக்கு உடல் 
போய் வருகிறது 

நீயே முக்தி
முக்தர்களுக்கு நீ 
உனையே தருகிறாய் 

நீயே பக்தி
பக்தர்களின் 
உள்ளே வருகிறாய் 

அகந்தை பிரசவித்தால்
அசடுகளாகவும் 
தந்தை நீ பிரசவித்தால்
சாதுக்களாகவும் 
பிறவி வருகிறது 

சுவாமி நீயே
ஆன்ம சாதனை 

உன் பேரான்மாவின்
சிறு துளி 
தினந்தோறும்
தியானிக்கிறது 

நீயே அனுபவமாகிறாய் !
அனுபவமாகி இன்னும்
ஆன்ம சாதனைக்கு
அனுகூலமாகிறாய் !


81) ரக்ஷா மோதிர பிரசாத சாயி:


சுவாமி உன்
கணையாழி 
என்
கைகளுக்கு நீ தரும் முத்தம் 

மா திறம் உன் 
மோதிரம் அதுதான் 
காக்கிறது 

நொடிப்பொழும் எங்களைப்
பார்க்கிறது 

சுவாமி 
உன் உருவம் பதித்த 
எல்லாமே 
நீயாகிறது 

அருவம் கூட உன்
 உருவம் அதையே 
மறைத்து வைத்திருக்கிறது 

காற்றிலெங்கும் உன்
ஆலிங்கன அருளை 
அது
நிறைத்து வைத்திருக்கிறது 

சுவாமி நீ
விரல் அசைக்கிறாய்
எங்கள் 
விரலுக்கானது வருகிறது 

கண்களால் விரல்களையுமா நீ
பிறவிகளையே அளவெடுக்கிறாய் 

கச்சிதமாய் கணையாழி
அச்சடித்ததாய்
அமர்ந்து விடுகிறது 

நீ அணைக்கிறாய்
அது தான் என்
உடம்பின் உஷ்ணம் 

சுவாமி நீ 
முத்தமிடுகிறாய் 
அது தான் என்
ரத்த ஓட்டம் 

சுவாமி நீ அசைகிறாய்
அது தான் எனக்குள் 
அதிர்வலைகள் 

சுவாமி நீ அபயமளிக்கிறாய் 
அது தான் எனக்கான
சுவாசம்

மேல் திறந்த உன் கை 
கீழ் நோக்கினால் 
என்னுயிர் 
புறப்பட்ட உன்னிடமேயே
புகுந்து கொள்கிறது 

அவ்வளவு தான் 
வாழ்க்கை மிக
அழகானது 

சுவாமி நீ 
திட்டமிடுகிறாய்
அது தானென் நல்லெண்ணம் 
கர்மா திட்டமிடுகிறது
அது தான் தீதெண்ணம்

உன் கைகளுக்குள் 
நீ எனை பிடித்து வைத்திருக்கிறாய் எனக்
காட்டவே 

இந்த மோதிர அடையாளம் 

நீயே உறைந்திருக்கிறாய் என்பதை 
உணர்த்தவே 

சாயி காயத்ரி 
மந்திர அடையாளம் 

தங்கம் வெள்ளி 
செம்பு என்பதெல்லாம் 
உலோகமே
நீ பதிந்திருக்கிறாய் என்பதால் 
அதையும் வணங்குகிறேன்

கோவில்களில் 
தூண்களையும் வணங்குவது போல் 

எந்த ஏக்கமும் இல்லை
நீ இருக்கிறாய் என்பதால்

நீ இருப்பதால்
இல்லை எப்படி
தொல்லை செய்யும் ?

எவர்மேலும் பற்று இல்லை 
நீ இருக்கிறாய் என்பதால் 

உன் மேலான
பற்றெல்லாம் 
புற்றாய் எழுகிறது
அதற்குள்ளே அமர்ந்து
தவம் செய்கிறேன் 

சிறுகச் சிறுக 
சிவம் செய்கிறேன்

நொடிகளை 
நவம் செய்கிறேன்

உண்மையில்
நீ செய்கிறாய் 
இது சாட்சியாய் 
இதயத்தில் அமர்ந்திருக்கிறது

நீ 
யாவருக்கும்
 மோதிரம் இடவே காத்திருக்கிறாய் 

இவர்கள் யாரும் 
கல்யாண மோதிரத்தைக் கூட கழட்டுவதே இல்லை

நீ பதிந்த மோதிரமா
வைடூர்ய மோதிரமா
கற்கள் எப்படிக் 
காப்பாற்றும் ?

நீ சங்கல்பித்த
சொற்களே காப்பாற்றுகிறது
கற்கள் இல்லை 

நீ நிச்சயமாக்குகிறாய்
ஆகவே மோதிரம் அணிவிக்கிறாய் 

இதுதான் சுவாமி
நீ அணிவித்த
நமக்கான திருமணத்தின் 
முத்திரை

தியானமே 
திகட்டத் திகட்ட நீ தரும்
முத்தத் திரை 

விரல்களில் மோதிரம் 
குரல்களில் மந்திரம்
கண்களில் சுந்தரம் 
கைகளில் உன்திறம்
தியானத்தில் அந்தரம் 
போதும் இதைவிட 
வாழ்வென்பது வேறென்ன சுவாமி?

82) பால சாயி பாலாம்பிக சாயி:



சுவாமி 
நீயே பெறுகிறாய்
நீயே பிள்ளையாகவும்
சிரிக்கிறாய் 

நீ தியானமாய் வந்து 
வெப்பம் தரிக்கிறாய் 
சுவாமி
நீயே தாய்மையாய் இருந்து
கர்ப்பம் தரிக்கிறாய் 

நீ 
தீபமாய் ஒளிர்ந்து
சிற்பம் வடிக்க
நீயே 
சிற்பமாய் மலர்ந்து
சந்நதி கொடுக்க 

உறவின் சந்ததியும்
உயிரின் சந்நதியும்
உன்னால் தான் சுவாமி
உயிர்ப்போடிருக்கிறது 

குழந்தையை 
உன் மடி தாங்க
குழந்தைத் தனத்தை 
உன் மனம் தாங்க 
கார்முகிலை உன் 
வதனம் தாங்குவதாய் 
நீ என்
இதயம் தாங்குகிறாய்

சதை தாங்கும் 
எலும்பு தளரும் 
சுவாமி உன் 
விதை தாங்கும் 
விசும்பு பிரேம
விருட்சமாய் வளரும் 

இந்த தேவதையை நீ 
தாங்கி இருக்கிறாய் 
இதயத் தேவையை
வாங்கி இருக்கிறாய் 

விழித்திருக்கும் இந்த 
மழலை ரீங்காரமும்
சுழித்திருக்கும் உன் 
மனதின் ஓங்காரமும் 

சிநேக சிருங்காரமாய் 
பெருக்கெடுத்து ஓட
சிருங்கேரி வாணியாய்
விரல்வீணை பாட 

சுவாமி 
உன் கரமே தொட்டிலாகிறது 
மடியே மலர்க்
கட்டிலாகிறது 

பஜனை 
லாலியாக
கரும்பஞ்செனும் உன்
 தலை முடி
தூளியாக 

என்னையே ஒப்படைத்து
கவலையின்றி துயில்கிறேன் 

யாவும் உன் பாடு
மனமே நீ 
பஜன் மட்டும் பாடு எனப்
பாடிக் கொண்டிருக்கிறேன் 

இந்தக் கொடுப்பினை 
யாருக்கு வரும்?
இறைவனே நீ தாயாவது
எத்தனைப் பேருக்கு வரும் ! 

 இதன் 
வெள்ளிக் கொலுசாய் 
"கொலு சாய் "
துள்ளும் மனதுன் 
பேரை இசைக்கிறது 
அது 
வரிகள் கட்டி 
வாத்தியம் தட்ட ஆயிரம்
பேரை அசைக்கிறது

அருகே உன் 
மழலைப்படம் 
மரகதம் சேர்க்கிறது
மலர்மாலையும் 
முத்தங்கியாகி
முன்னுரை வார்க்கிறது

முடிவே இல்லா 
இவ்வுகத்தில் 
பிரேமமாய் நீ வர
பிரபஞ்சமே பூரிக்கிறது 

நான்
அழுதால் துடிப்பாய் 
அலைந்தால் முறைப்பதாய் 
நடிப்பாய்

கண்களால் மிரட்டுவாய் 
ஆசையை அதட்டுவதாய் 
கர்மாவின் காதைத் திருகி
உள்ளத்தில் சோழியை 
உருட்டுவாய்

துவாபரத்தில் உன்னன்னை 
உனக்கு செய்ததெல்லாம்
நீ 
எனக்கு செய்கிறாய் 

பரம்பரை பழக்கம் 
சும்மா விடுமா 
பெற்றவள் கோடி கோடி
சுவாமி உன் போலொரு
அம்மா வருமா ?

உரலில் 
உனைக் கட்டிய 
அதே கயிற்றால் என்
உயிரைக் கட்டியிருக்கிறாய்

நீ 
வெண்ணெய் திருடியவன்
நான் 
உன்னைத் 
திருடியவன் 

தன்னைத் திருடு கொடுக்க
தியானத்தில் தொலைந்தவன் 
சுவாமி நீயோ
விண்ணைத் திருடு 
கொடுக்க 
மேகத்தில் மிதந்தவன்

அன்னை உன்னை அன்றி 
விண்ணை இந்த 
மண்ணை எந்தப் 
பெண்ணை 
ஏறெடுக்கும் பார்க்கா 
தவத்தை இன்னும் 
ஆழப்படுத்து 

ஆழத்தில் தான் 
வாழ்க்கை இருக்கிறது 
கரையோரக் கிளிச்சல்களில் 
களிப்பில்லை 

அதையே 
எடுத்துக் கொண்டிருப்பவர்க்கு
சுவாமி சற்றும்
சலிப்பில்லை 

கர்ம அலுப்பில் 
கண்மூடித் தூங்கியவனை
நீயே நூற்றாண்டுக்குப் பின்
எழுப்பிவிட்டவன் 

அகத்தில் 
அகத்தியம் எழுதுயென
அனுப்பிவிட்டவன்

சுவாமி 
அகம் உன் முகமாகும் போதே
சுகம் 

முகமே சுகமாகும் வரை
அக விளக்கு 
அகல் விளக்காய் 
எப்படி எரியும் ?
வெளிச்சம் புரியும் 
வெளிச்சம் புரியும்? 

இல்லை தாயென்பவர்க்கு 
உளதாய் நீயே 
உளத்தாய் வரும் 
உள்ளத் தாய் எனது
இல்லத் தாய் 

இல்லை தாய் போய்
நீயே
இல்லத் தாய் ஆவதுன்
தெய்வ காருண்யம் 

கண்மூடி உனை 
காணக் காண அது 
தண்டகாரண்யம் 

செல்வத்தால் ஆகாதெனினும் 
செல்வத் தாய் உன்னால் 
இகபரம் உறும்
இன்பம் 

பக்தர்க்கல்ல...
துன்பத்திற்கே 
துன்பம் 

ஓர் உதட்டை 
எனக்கு தந்து 
வானமாய் முகம் 
வளர்த்திருக்கிறாயே 

சுவாமி சொல் 
உனக்கு நான்
முத்தம் தந்து
எப்போது முடிப்பது? 

ஓர் இதயம் 
எனக்குத் தந்து 
விஸ்வரூபமாய் 
வீற்றிருக்கிறாயே 

பனித்துளியில் எப்படி
பிரபஞ்சம் அடைப்பது ? 

உன் சேய்ப் பட்டம் 
ஏகாந்தமாய் 
உயர்கிறது 

வளியில் அதன்
வழியில்
ஊடுறுவுகிறது 

ஆயினும் 
தாயே 
பட்டத்தின் 
திட்டக் கயிறை 
நீயே 
இதோ இதோ 
தாங்கி இருக்கிறாய் 

பக்குவம் தந்து
பக்தியை 
வாங்கி இருக்கிறாய் 

இந்தப்
பண்ட மாற்றமும் 
அந்த
அண்ட மாற்றமும்
அம்மா நீயே 
நடத்திக் கொண்டிருக்கிறாய்

83) நமஸ்கார சாயி சமஸ்கார சாயி:


கடவுளே நீ 
கும்பிடுகிறாய் 
மனிதருள் இருக்கும் 
உன்னை 

நிலா உற்றுப்பார்க்க
நதி அதன் 
நிலைக் கண்ணாடியாவது போல் ... 

நாராயணனே நீ 
நமஸ்கரிக்கிறாய் 

பக்தா
பூமியில்
பக்தியோடிரு 
நாநிலத்தில் 
நல்லவனாயிரு 
நான்கு திசை உணர்ந்து
ஞானியாயிரு என

மன்றாடி கேட்கிறாயே 
மன்றம் வந்த கோபுரக் 
குன்றமே 

மனிதா என் பக்தனாகையில்
திருந்து என்பதற்கே 
திறந்திருக்கும் உன் கரத்தை 
மூடுகிறாய் 

கண்மூடி பக்தரையேத் 
தேடுகிறாய் 

சமிதியில் 
கூடுகிறாய் 

நல்லறம் 
நாடுகிறாய்

சேவையாற்று என்பதையே
சொற்களாக்கிப் 
பாடுகிறாய்

சுவாமி உன் 
வணக்கமே
உயிரை உடம்போடு 
வரவேற்கிறது 

சுவாமி உன் 
வணக்கமே
உள்ளத்தை 
உயிரோடு வரவேற்கிறது

சுவாமி உன் வணக்கமே
உலகத்தை 
உள்ளத்தோடு வரவேற்கிறது 

ஆசி கொடுக்கவே 
அவதரித்தவன் நீ
வணங்கலாமா ?

மனிதர்க்கு 
ஆசியும் உன்
ஆசியின் ராசியால்
பக்தரான மனிதர்க்கு
வணக்கமும் 

உன் செயல் 
உன் ஒருவனுக்கே வெளிச்சமாயிருக்கிறது 

என் செயல் என்பதேது?
உன் செயலே அதிலும்
வெளிச்சமோடிருக்கிறது

பக்தி உனை 
அணைக்கிறது‌
பக்தரின் சந்தேகமே 
பங்காரு சுவாமி 
உனக்கு வலிக்கிறது 

செண்டால் அடித்தாலும்
சவுக்கால் அடித்ததாய்
வலிக்குமே 
என் செல்லமே
பூப் போன்ற சுவாமி 
எங்கள் 
பூரண நம்பிக்கையே
உனக்கு ஒத்தடம் 
பரிபூரண சரணாகதியே
உன் ஒரே தடம் 

இரண்டு ஐந்தும் சேர்ந்து 
பத்தாகிறது 
நீ 
இப்படி வணங்கினால்
அழுகை வந்து
ஆர்த்தெழும் துளிகள்
என் கன்னத்தில்
முத்தாகிறது

பக்குவப்படு என்பதற்கே
பவித்ர கும்பிடு 
பவித்ரப்படு என்பதற்கே
பக்குவக் கும்பிடு 

நம்பிடு நம்பிடு என்றே 
நெஞ்சில் எதிரொலிக்கிறது உன்
கும்பிடு 

சுவாமி நீ 
பசியோடிருக்கிறாய் 
பக்தியே உனக்கு 
பந்தி வைக்கிறது 

ஏகப்பட்ட சந்தேகமோ
உனக்கு இலை விரித்து
உன்னையும் வரவேற்று
வெறும் இலையை மேயச் சொல்கிறது 

ஆடலரசனே நீ என்ன 
ஆடா ...
நீ ஆடாவிடில் 
அவனியில் எதுவும்
ஆடா ...

சுவாமி
 என் ஒரே 
பிடிமானம் நீயே
என் ஒரே 
பிடிவாதமும் நீயே 

தேசமா என்னைத் 
தாங்குகிறது ?
இல்லை சுவாமி
உன் கேசமே என்னைத்
தாங்குகிறது 

ஒரு நூலைப் படித்தால்  
 அறிவு தான் வருகிறது 
சுவாமி உன் ஆடையின்
ஒரு நூலைப் பிடித்தால்
ஞானமே வருகிறது 

சுவாமி
உன் பாதம் 
எனக்கான பிரசாதம் 

குறும்போடிருப்பினும்
வரம்போடிருக்குமுன் 
குழந்தை நான் 

கைத்தலம் பற்றும்
கனா போதும்
பற்ற வேண்டும்
நீ வணங்கியது போதும்
உனக்குள் 
இணங்கியது இதயம் 

இணங்கியதே
இயங்கியது 

கையை சற்றுப் பிரித்து
கீழே பார் 
உன் பாதம் பிடித்திருக்கிறேன்
வாரி அணைத்துக் கொள்

அத்வைதம் 
அருகில் வருகிறது
அது வரும்போதே
அமரத்துவம் 
சிறகில் வருகிறது

சுவாமி உன் வணக்கம்
பக்திக்கான துவக்கம்
சுவாமி என் வணக்கம்
முக்திக்கான முழுமுதற்
நெருக்கம்

84) கவன சாயி பவன சாயி:



சுவாமி நீ
கவனிக்கிறாய் 

மூச்சை 
காற்று கவனிப்பதை விட
நீ சூட்சுமமாய் கவனிக்கிறாய் 

பேச்சை
மனசாட்சி கவனிப்பதை விட
மறைந்திருந்து நீ
கவனிக்கிறாய் 

வீச்சை 
அம்புகள் கவனிப்பதை விட 
கூர்மையாய் நீ கவனிக்கிறாய் 

நானிடம் பிடிபட்ட வாழ்க்கை
மானிடம் பிடிபட்ட சிங்கமாய்
மானுடம் பிடிபட்டுப் போகிறது 

உன்னிடம் பிடிபட்ட இதயம்
விண்ணிடம் பிடிபட்ட 
வெளியாய்
தனக்குத் தானே 
விருந்தாகிறது 

நொடிகள் உனைக் கேட்டே
நொடிப் பொழுதில் 
நகர்கின்றன 

படிகள் உனைக் கேட்டே 
ஏற்றி விடுகின்றன 

கொடிகள் உனைக் கேட்டேப்
பறக்கின்றன 

காய்களாகி பின்
கனிகின்றன 

சுவாமி நீ 
கவனிக்கிறாய் 

மெல்லியதான எண்ணமும் உன்னால்
துல்லியமாக கவனிக்கப்படுகின்றன

மறந்த பிரார்த்தனையும் 
மறைந்த காலத்தையும்
நீயே 
கவனித்துக் கொண்டிருக்கிறாய் 

நாத்திகனைப் பேசவிட்டு
ஆத்திகனை 
ஆன்மீகவாதி
ஆக்குகிறாய்

ஆத்திகனுக்கு
அருளிவிட்டு
நாத்திகனின் 
நா தீயை அணைக்கிறாய் 

ஒவ்வொரு கணமும் 
உன் லயத்திலே தான்
ஆரோகனம் 

ஒவ்வொரு கனமும்
உன் பதத்திலே தான்
அவரோகனம் 

சுவாமி நீயே 
கவனிக்கிறாய்

ருத்ரன் அழிக்கிறான்
பிரம்மன் படைக்கிறான்
திருமால் காக்கிறான்

எல்லாவற்றிலும்
உன் மேற்பார்வையே 
ஆழ்பார்வையாய் 
ஆட்டிப் படைக்கிறது 

உன் மேல் பார்வையே போதும் 
ஆன்மாவை 
ஆளப் பிடிக்கிறது 

சுவாமி நீயே கவனிக்கிறாய்
இவர்கள்
கவலைப் படும் போது
கவலை
கவலைப்படுவதைக் குறித்துச் சிரிக்கிறது 

ஏக்கம் 
உன் மேலன்றி 
உலகத்தின் மேலெனில் 
ஏளனப்படுத்துகிறது 

துக்கம் 
பக்கம் வருகிறது 
நீ கவனிக்கிறாய் என
உணர்கிறேன் 

அது கனவாக கலைகிறது 

மெழுகுவர்த்தி
ஒரு அறையையும் ...
சூரியன் 
உலகத்தையும்...
சுவாமி நீயோ
உள்ளத்தையும் ...
ஒளிர வைக்கிறாய் 

உன் முறைத்தல்
குறைகளை எரித்தல் 
உன் மலர்த்தல்
கர்மங்களைத் தளர்த்தல்

உன் சிரித்தல்
தியானங்களைத் திறத்தல்
திறந்திதயம்
பறித்தல் 
பறித்துடலையும் அகத்தையும்
பிரித்தல் 

விழாக்கள்
விநாடிதோறும் 
விளைகின்றன

நீ கவனிக்கவில்லை
என்றே
அகந்தை ஆடுகிறது 
ஆசை கூடுகிறது 
கோபம் கூடுவிட்டு
 கூடு ஓடுகிறது 
குறை நாடுகிறது 
வாழ்க்கை வாடுகிறது

சுவாமி நீயே 
நேரத்திற்கும் 
நேரம் குறிக்கிறாய் 

பின்னுன் அருள்தலை
உன் அருள் தலை அதை
பூரணமாய் நிறைக்கிறது

உன் கைப் பிரம்பிலே தான்
காப்பாற்றப்படுகிறது
ஆசைகளின் 
உச்ச வரம்பு 

கண்டிப்போடே இரு 
பணிந்தே போகிறேன்

கருணையோடே இரு 
கனிந்தே போகிறேன்

உன் 
விழி விசையை 
வேறெந்த திசைக்கும் 
மாற்றிவிடாதே 
முழுதும் கனிந்து
முழுமை 
அடைய வேண்டும் 

சுவாமி எனக்கு
நீ மட்டும் நிரம்பி வாழும்
நிலைமை 
அருள வேண்டும்

85) தியாக சாயி யோக சாயி:



சுவாமி உன் 
ஒவ்வொரு விரல்களும் 
மெழுகுவர்த்திகள் 
உலகத்தில் கரைந்து
உள்ளத்தில் ஒளிர்ந்து 
வீட்டுக்கு வீடு 
வெளிச்சம் வளர்க்கிறது 

உன் விரல் மெழுகுவர்த்தி
சேவை சுடர்வதற்கு உருகுகிறது
சேவை சுடரச் சுடர
சாந்நித்யம் 
பெருகுகிறது 

நீ 
கரைந்து கொண்டே 
வளர்ந்து கொண்டிருப்பவன் 

சுவாமி நீ
கனிந்து கொண்டே 
ருசித்துக் கொண்டிருப்பவன் 

இவர்கள் ஏன் 
உன்னை 
ஏற்றிய பிறகு 
ஊதி அணைத்துக் கைத்தட்டுகிறார்கள் 

பிறந்தநாளாம் 

அன்னை நீ 
பிரகாசிக்கும் போதே
பிரபஞ்சம் பிரகாசிக்கிறது 

நான்
உலகத்திற்கு பிறந்த வரை
ஒரு பயனும் இல்லை

உனக்கு என்று பிறந்தேனோ
உயிரில் அன்றிலிருந்து
ஊறித் திளைக்கிறேன்

நீ படைத்த உயிர்கள்
உனை மறந்து 
இருந்தென்ன பயன்?

கிழிக்க மறந்தாலும்
கழிந்த நாளைச் 
சுமக்கும் நாட்காட்டி
இருந்தென்ன பயன்?

ஓடாத கடிகாரம் 
சுவருக்கு பாரமாய்... 
பாடாத புல்லாங்குழல்
மூங்கிலுக்கே பாரமாய்..
தேடாமல் இருவிழியை
மூடாத தியானங்கள்
ஆன்மாவுக்கு பாரமாய்.. 

சுவாமி உனை 
வழிபடாமல் 
வாழ்ந்தென்ன பயன்? 

மெழுகுவர்த்தி நீ 
உன்னை ஏற்றுவதையே
நீ 
உன்னை அணைப்பதாய்
ஏற்றுக் கொள்கிறாய் 

உன்னை அணைப்பது
உள்ளத்தை ஒளிர்விப்பது

உன்னை கலப்பது 
ஆன்மாவை குளிர்விப்பது 

பூரணம் உன்னோடு
பூரிக்கும் போது 
போதாது என்பதேது? 

வாழ்க்கை மெழுகுகள் 
வெளிச்சமின்றியே 
சுவாமி 
கண்ணீர் சிந்துகிறது

அது
உனக்காக எரியாமல் 
உன்னைப் புரியாமல் 
வெளியே உன்னை 
விழியால் தேடுகிறது

நீ 
மெழுகுகளில் 
உள் உறையும் 
திரியாகி இருக்கிறாய் 
நீயே ஒளிர
ஒளியாகிச் சிரிக்கிறாய் 

ஆசைப் பற்றி எரிபவருக்கு உன்
மெழுகு பற்றுவதில்லை

கோப எரிமலைகள் 
கொப்பளிப்பவர்க்கு 
உன் 
மெழுகு சுடரின் 
அழகு ஒளி 
அகத்தில் ஒளிர்வதில்லை 

சுவாமி நீ தியாகி 
என்னைச் சுமப்பதற்காக
நீ உன்னையே
என்னிடம் தியாகம் செய்திருக்கிறாய் 

நான் யோகமாகியிருக்க
சுவாமி நீயே
தியாகமாகி இருக்கிறாய் 

சுவாமி நீ மன்னிப்பு
என்னையும் பக்தராய்
ஏற்றிருக்கிறாயே

சுவாமி 
பிறவி தண்டிக்கிறது
நீயே மன்னிக்கிறாய்

உறவுகள் 
உள்ஜோதிக்கு புயலாகிறது
நீயே சுவாமி‌
ஜென்மத்தை மீண்டும்
ஜொலிக்க விடுகிறாய் 

பந்தத்திற்குள் இறங்கிப் போவது
தூக்கு மேடைக்கு ஏறிப்போவது

சுவாமி உன் 
பாதத்திற்குள் இறங்கிப் போவது
சிம்மாசனத்திற்கு ஏறிப்போவது 

உணர்ச்சி வசம் ஒரே
இருட்டு கசம் 

சுவாமி நீ அதை 
தணிய வைத்து
தீபம் ஏற்றுகிறாய் 

பேசிப் பேசி 
உன்னை தொந்தரவு செய்கிறேன்

உன்னால்
ஜபித்து ஜபித்து
உன்னை
சமாதானப்படுத்துகிறேன்

உனக்கான நன்றிகள்
ஒரு பிறவியில் முடியுமா?

உன்னைத் தவிர 
உன்னிடம் என்ன கேட்பது? 

நீ என் 
இதய இருட்டை தாங்கி
அதற்குள் வெளிச்சமாகிறாய் 

சுவாமி நீ 
எரிந்து கொண்டே இரு 
உனக்கு பதிலாக
உனக்காக 
உருகிக் கொண்டிருக்கும்
உன்னதம் கொடு

86) கர சாயி திவாகர சாயி:



சுவாமி உன் 
கைகளை மூடி வைத்திருக்கிறாய் 

திறந்தால் 
கடல் பூமியிலிருந்து 
கொட்டிவிடும்

கிரகங்கள் 
சுற்றுக் கோடுகளைத்
தாண்டிவிடும்

தண்டவாளம் மீறி
நடைமேடைக்கு வரும் 
ரயிலாய் 
இதயம் எல்லை மீறிடும் 

நீயே மூடி வைத்திருக்கிறாய் 

திறந்திருக்கும் ஜாடி நான்
நீயே புலன்களை 
அனுகிரஹத்தால் 
மூடி வைத்திருக்கிறாய் 

நோயின் தாய்
நகர்வலம் வருகிறாள்
நீயே
வழிமாற்றி விடுகிறாய் 

கர்ம நாய் 
குரைக்கிறது
சுவாமி நீயே 
உன் கைகளுக்குள்
கற்களை வைத்திருக்கிறாய் 

நீ பிடித்துக் கொண்டிருப்பதால் ...
பிடித்து கொண்டிருக்கிறது
உன் பாதத்தை 
உள்ளம் 

பிடிப்பு கொண்டிருக்கிறது
உன் மேல் ஆன்மா 

நீ ரகசியமானவன் 
சுவாமி 

மறை தானே நீ
என்பதற்கு தான் 
இந்த மறைத்தல் 

சுவாமி நீ
கரத்தை மூடி
வரத்தை திறந்து வைத்திருக்கிறாய் 

பலர் 
வரத்தை அடைந்த ஒரு
வனாந்தரத்தில் உன்
கரத்தை மறந்து போகின்றனர் 

யசோதைக்கு 
வாயில் நீ காட்டாத 
வர்ண பிரபஞ்சமா! 
கையில் நீ காட்ட 
ஆரம்பித்தால் 
ஆன்மாக்கள் தாங்குமா!

இவர்களுக்கு 
எல்லாவற்றுக்கும் விளக்கம் வேண்டிருக்கிறது

நீ ஏன் விளக்க வேண்டும்?
பிசுக்கு அடைந்த 
விளக்குகள் சிலர் 
நீ தானே 
விளக்க வேண்டும் 

விலக்க தெரியாத 
விசித்திர இறைவன் நீ
விளக்கவும் இதயத்தை
விளிக்கவுமே... உணர்வை
விழிக்கவுமே...
செய்கிறாய் 

குளிருக்கு
கம்பளியும் 
வெய்யிலுக்கு
அம்புலியும் 
நீயே நெய்கிறாய்

உன் மூடிய கரம் 
எங்கள் தேடிய தவத்தை விட
மேன்மையானது 

உன் மூடிய கைகள்
எங்கள் நாடிய நெஞ்சம் விட
மென்மையானது 

இப்படி 
கரம் மூடியே தலையில் 
கொட்டும் கலையில் 
அமுதச் சொட்டும் 
அளிக்கிறாய் 

நீ எதை அளித்தாலும் 
இன்பம் 
நீ எதை அழித்தாலும்
ஆனந்தம் 

அகந்தை அழிக்கும்
சிந்தை அளிக்கும் 
விந்தை எந்தை உன்னால்
முந்தைய பிறவியும் 
முழுமை அடைகிறது 

நிந்தை தவிர்ப்பதே 
நிஷ்டை 

கந்தையோடிருப்பினும்
மனம்
சந்தையோடின்றி உன்
சிந்தையோடிருப்பதே
தவம் 

உன் கரத்திற்குள் இருப்பதை விட 
உன் கரமே போதுமானதாக இருக்கிறது 

நீயே சுவாமி
கரத்திற்குள் என்னைப்
பூட்டி வைத்திருக்கிறாய்

ஆம் உன்
ஐந்து சாவிகளே
பூட்டாகி இருக்கிறது 

உன் இரு விழி தோட்டாவால்
எத்தனை முறை 
இதயம் துளைக்கிறாயோ
அத்தனை முறையும் 
அதிர்வலை அருவிகளால்
மூழ்கிப் போகிறேன் 

கரம் தாழ்ந்திருக்கிறேன்
கரம் திறந்து தருகிறாய்
மீண்டும் 
கரம் தாழ்ந்தே இருக்கிறேன்
நீ 
என் கரம் மீது 
உன் கரம் வைக்கிறாய்

அந்நொடி முதல் 
வாழ்ந்திருக்கிறேன்

உன் 
ஸ்பரிசக் கதகதப்பில் 
ஆழ்ந்திருக்கிறேன்

உன்மேல் 
நம்பிக்கையோடிருப்பதே
வாழ்க்கையோடிருப்பது

அந்தக் கையே
இந்தக் கையைப்
பிடிக்க முடிகிறது

சந்தேகம் 
தேகத்தோடு மட்டுமே இருக்கிறது
உயிரோடில்லை 

உயிரே உன்
உயிர்ப்பால் தான்
உயர்வடைய முடியும் 

உய்வதே
உயர்வது 

உனை
அனுபவிப்பதற்கு 
உனை
அனுமதிக்க வேண்டும்

உனை 
அனுபவிப்பதற்கு
உனை
அனுசரிக்க வேண்டும்

சுவாமி 
நீ கை மூடி
இதயத்தை திறந்திருக்கிறாய்

இவர்கள்
இதயத்தை மூடி
உன்னிடம் ஏதேதோ பெற
கைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள்

திறந்தால் தானே 
வரதனே நீ
வர முடியும்

திறந்தால் தானே 
தெய்வ தெய்வமே உனைப் 
பெற வேண்டும்

சுயம் கேட்கிறாய்
சுயநலம் தருகிறார்கள்
அகம் கேட்கிறாய் 
அகந்தை தருகிறார்கள்
கருணை கேட்கிறாய்
கயமை தருகிறார்கள்
நம்பிக்கை கேட்கிறாய்
கோரிக்கை தருகிறார்கள்
பக்தி கேட்கிறாய் 
பணம் தருகிறார்கள் 

ஒரு துளி 
கண்ணீர் கேட்கிறாய்
ஒரு கடல் 
கர்மா தருகிறார்கள்

எந்த கடவுளும் 
உன்னைப் போல் 
எதையும் ஏற்பதில்லை
என்பதனால் 
அந்தக் கடவுளருக்கும்
ஆதிக் கடவுள் நீ உன்னிடமே 
அழுக்கைக் கொடுத்து 
கிழக்கை வாங்கிக் கொள்கிறார்கள் 

கிழக்குகள்
கர தினகர சுவாமியே 
உன்னால்
விளக்குகளாகி
வெளிச்சம் பெறுகின்றன

நீ 
நெஞ்சமே கேட்கிறாய்
ஆனால் அதில்
நன்றியைச் சேர்த்தே 
தர வேண்டும்

நீ சொடக்கு போடுகையில்
போட்டது போட்டபடி
உனை நோக்கி
வர வேண்டும் 

பாசக் கயிறு 
பிடித்திருக்கும் 
சுவாசக் கயிறுகள் 
உன் 
பக்திக் கயிற்றால் 
முடிச்சுகள் அவிழ்க்கின்றன

சுவாமி 
உன் மூடிய கரமாய் 
மூடிய விழிகள் 
உன்னையே ஏந்துகிறது
நீ கை திறக்கையில்
உன் உள்ளங்கையில்
ஒளிந்திருக்கும்
வெட்ட வெளியாய்
ஆட்கொள்கிறாய் 

நீ
ஆட்கொள்வதை விட
சுற்றி இருக்கும் 
ஆட்களிடம் என்ன
சுகானந்தம் இருக்கிறது?

87) நீராஞ்சன சாயி நீலோத்பல சாயி:



கர்மாவை வைத்தே
கர்மாவை உடைக்கிறாய்

சுவாமி நீ
ஆசையை வைத்தே
ஆசையை அழிக்கிறாய் 

மூங்கிலும் மூங்கிலும்
உரசி 
மூங்கில் எரிவதாய் 

முன் வினையெலாம்
பின் வினையில்
பொசுங்குவதாய் 

பஞ்சுக் கைகளில் 
பிரபஞ்சக் காய்களை 
எப்படி நீ 
மோத விடுகிறாய் ?

அப்படி மோதியதால் சூரியனும்
சூரியனிலிருந்து உடைந்த பல 
பூமித் துண்டை நீயே சுவாமி சிருஷ்டிக்கிறாய்

பிரபஞ்ச ரகசியமே உன்
கேசத்திற்குள் தான்
புதைந்திருக்கிறது

பூமியின் சுழற்சியே 
உன் பாதத்திற்குள்தான்
பதிந்திருக்கிறது 

ஓம் உன்
 முதல் எழுத்தாய் 
ராம் உன்
பதில் எழுத்தாய் 
ரீங்கரிக்கிறது

தாய் உன் வடிவாய் 
சாய் உன் பெயராய் 
எதிரொலிக்கிறது 

அம்மா என்ற உடன் 
ஆன்மாவைப் பெற்ற நீயே முதலில் 
திரும்பிப் பார்க்கிறாய் 

உடம்பைப் பெற்ற 
அம்மாவோ 
பிறகே திரும்புகிறாள்

நீ விரும்புகிறாய் என்பதால்
திரும்புகிறாய் 

நீ கேட்கிறாய் என்பதால்
பார்க்கிறாய் 

உள்ளம் கேட்கிறாய்
உள்ளமே கேட்கிறாய் 

உள்ளித்திலிருந்து
பிரார்த்தனை கேட்டு 
உள்ளத்திலிருந்து 
பக்தியைக் கேட்கிறாய்

தன்னால் உடைபட முடியாதென்பதால்
உன்னிடம் வருகின்றன
நீதான் சுவாமி
கனவுகளை 
உடைத்தாக வேண்டும்

துக்கக் கனவுகள் 
தூங்க வைக்கின்றன
ஏக்கக் கனவுகள் 
தூக்கம் கெடுக்கின்றன

நீ தான் சுவாமி
எழுப்ப வேண்டும் 

உலகியல் வாழ்வே 
உன்னதமென
உன்மத்தத் தெளிவோடிருக்கிறார்கள்

நீதான் சுவாமி
கர்மாவால் 
குழப்ப வேண்டும்

நீ
குழப்பினால் தான் 
கடைசியில் நீயே 
விடை என 
விடை வாகனா 
உன்னிடம் வருவார்கள் 

இல்லை
குடும்பமே பிரபஞ்சம் என
கனவில் இருப்பார்கள் 

குடும்பமே பிரபஞ்சம்
என்பதிலிருந்து
பிரபஞ்சமே குடும்பம் என்பதற்கு 
நீயே சுவாமி 
வழி மாற்றுகிறாய்

வெளியே பார்ப்பவர்கள்
உள்ளே பார்ப்பதற்கு
நீயே சுவாமி
விழி மாற்றுகிறாய் 

வீட்டிலிருக்கும் ஜோதியை 
ஏற்றுபவர்கள்
கூட்டிலிருக்கும் ஜோதியை
கவனிக்க 

நீயே சுவாமி
வீடு விட்டு கூடு பாய்கிறாய்

நீ படத்திலும் இருக்கிறாய்
நானுன் பதத்தில் 
இருக்கிறேன் 

நீ பல 
விதத்திலும் இருக்கிறாய் 
அப்போதுமுன் 
பதத்தில் இருக்கிறேன் 

உள்ளத்தை உள்ளம் 
மோத வைத்து 
கண்ணீர் சிந்துகையில்
உறவின் நிலையாமை
உணர்த்தி
நீயே வெண்பூரணமாய் 
நிறைகிறாய்

இருவரையும்
இறைவா உனக்கே
நெய்வேத்யமாக்கி

வாழ்க்கை 
மோகத்திற்கல்ல
தியாகத்திற்கென 
தெளிய வைக்கிறாய் 

நீ தெளிக்க
நீர் தெளிக்க
உணவை பலவாக்குகிறாய் 

நீ தெளிக்க
நீர் தெளிக்க
கனவை எழுப்பி
நிஜம் நீ மட்டுமே என
புரிய வைத்துளம்
பலமாக்குகிறாய் 

நீ உடைக்கத் தானே
உனை உள்ளத்தில் வரவேற்று
பந்நீர் தேக்கி இருக்கிறது
தேங்காய் 

உடைத்தால் தான் 
உனக்கு 
படைக்க முடியும் 

உடைந்தால் தான்
உள்ளத்தை உனக்குக்
கொடுக்க முடியும்

உடைக்கையிலே வலியில்
முக்கண்ணிலும் நீர் 
அதுவும் உனக்கே
அபிஷேகமாகிறது 

உடைய ஏனோ
அச்சப்படுகிறார்கள்?
உடைந்து உடைந்து தானே 
உற்பத்தி ஆகிறார்கள்
குமிழி மனிதர்கள்

கடல் சுவாமி நீ 

உடைந்து உடைந்து தானே
உடை மாற்றுகிறது
ஆன்மாக்கள் 

பரமாத்மா சுவாமி நீ 

வலிக்கு ஏனோ 
வருத்தப்படுகிறார்கள்
தியானம் ஒளியாலும்
கர்மா வலியாலும் 
கரைக்கப் படுகிறது 

குழம்பையே மலைகள் 
ருசிக்கின்றன 
எரிமலைக் குழம்பை...

ரசத்திலே தான் 
சுவாமி நீ
ரமிக்கிறாய்

சமரசம் ருசிக்கும் 
அதிரசம் நீ

நிசம் உன் வசம் வர
நொடிதோறும் பரவசம்

தென்னையின்
தலையை உடைக்கிறாய்

நீ
தலையை உடைத்த பிறகே
இதயத்தில் நுழைகிறாய்

தலைகள் கிரீடத்தை சுமக்கின்றன
சுவாமி 
இதயம் தான் உன்
பாதத்தைச் சுமக்கின்றன

கிரீடம் சுமந்த மாபலி உன்
பாதம் சுமந்த பிறகுதானே
பரகதி அடைந்தான்

கர்வ கிரீடகங்கள் 
குப்பைகள்
சுவாமி உன்
பாதமே மென்மையான
கிரீடம் 👑

உன் வார்த்தையே
உண்மையான 
கிரீடம் சுமக்கும் வைரம் 

கற்கள் 
உடைவதைப் பற்றி
கவலைப்படுவதில்லை
உன் சந்நதியில் 
இடம் பெறவே
சந்தர்ப்பம் தேடுகிறது

இந்த சொகுசுப் பிராணிகள்
கொசு கடிப்பதே
களிறு மிதிப்பதாய்
கவலைப்படுகிறார்கள்

வலிக்க வலிக்க 
உன் அடி
ஒலிக்க ஒலிக்க 
நீ வருகிறாய் என்று 
பொருள் 

இழக்க இழக்க 
உலகம்
வழுக்க வழுக்க
உனைப் பெற போகிறோம் என்று பொருள்

காரணம் 
சுவாமி நீயே
பரிபூரணமான பரம்பொருள் 

சுவாமி என்னை
உடைத்து விட்டாய்
உள்ளே உனைத்தவிர
ஒன்றுமில்லை 

சுவாமி
உன்னைப்
பசியாற்றுவதே 
நெய்வேத்யம்

பிறர் விருப்பத்திற்கு 
நான் இதயம் பரிமாறுவது
பொய்வேத்யம்

88) நளபாக சாயி நவதேக சாயி:



சுவாமி நீ 
குழம்பை ஊதுகிறாய்
குழம்புதலும் 
சூடு தணிகிறது 

நீ ஆறவிடுகிறாய் 
பிறகே 
ருசி பார்க்கிறாய் 

ஐம்புலன் ஆறிய பிறகே
சுவாமி நீ 
இதயம் ருசிக்கிறாய்

கோபக் கொதிப்பை
எப்படி உன் 
பிஞ்சு உடல் தாங்கும்?
எங்கள் 
இதயவாசி  அல்லவா நீ 

மனதில் எல்லாம்
ஆணவ முட்கள் 
எப்படி நீ
எங்கள் உள்ளே வந்து நடப்பாய்?

எதிர்பார்ப்பெனும் 
இருட்டு மூடி இருக்கிறது 
எப்படி நீ வந்திருப்பதை
இவர்கள்
கண்டு பிடிக்க முடியும்?

தாயின் அக்கறையாய்
நீயே 
ருசி பார்த்துப் பரிமாறுகிறாய் 

தாய்க்கும் இல்லா பொறுமையாய் 
எப்போது 
சாப்பிட வந்தாலும் 
சுடச் சுட பரிமாறுகிறாய் 

கண்மூடி உன் சூட்டை 
அனுபவிக்கிறேன் 
நீ உள்ளே சமைக்கிறாய் 
தனக்குத் தானே 
விருந்தாகிறேன் 

ஆறவிடுகிறாய் பிறகே
தேறவிடுகிறாய்

அகம் காரமாய் இருக்கிறது
நீயே இனிப்பை கலக்கிறாய்

அகங்காரமாய் இருக்கிறது
நீயே 
நிலையாமை அளிக்கிறாய் 

இந்த அகப்பைக்கு நீ 
சுவாசம் தருகிறாய் 
சுவாமி அது உன் 
கரம் பட்டதால்
குழம்பையே ருசிக்கும் 

இந்த அகப்பையே 
அகம் 
இந்த அகப்பையே 
பூமி
இந்த அகப்பையே
வாழ்க்கை 

சுவாமி நீயே 
காற்று தருகிறாய் 
வெய்யில் விருப்பங்களுக்கோர் 
மாற்று தருகிறாய் 
மையல் மனதை 
மாதவ மனதாய் 
மா தவ பொழுதாய் 
ஊற்று தருகிறாய் அதை
ஊற்றித் தருகிறாய் 

சுவாமி 
உன்னை நீ பரிமாற
மனதை 
மென்று தின்பது
நின்று போகிறது 

சுவாமி 
நீயே வந்து பரிமாறுவதை விட
நீயே உன்னைப் பரிமாறும் போதே
ஆன்மப் பசி அடங்கும் 

உலக கிளுகிளுப்பைக்கு
மயங்கும்
மழலை அல்ல
உறவின் 
தூளியில் தூங்கித் தொலையும் 
லாலி அல்ல

மயில் பிலி 
உன் 
கேசத்தையே
தேசமாக்கி வாழ்கிறது 

அது பிற
வேஷத்தை
மன 
நீசத்தை
பொருட்படுத்துவதில்லை

உன் 
சுவாசத்தை உண்டு வாழும்
நாசி நான்
நாசியை 
வாரணாசியாய் மாற்றியதும் 
நீதானே சுவாமி 

திருந்து பிறகே
விருந்து என்கிறாய் 

வருந்து அதுவே
மருந்து என்கிறாய் 

திறந்து அதிலே 
பொருந்து என்கிறாய் 

பருந்து அதன்மேல் 
அமர்ந்து நீயே 
காட்சி தருகிறாய்

பாத்திரம் அளவு 
பாயாசம் அளவு 
பிறர் 
எடுத்து வருவதிலேயே
கொடுத்து அனுப்புகிறாய்

நரர் 
மறைத்து வருவதையும் 
நீயே கையால் திறந்து
நிறைத்து
அனுப்புகிறாய்

கணம் தோறும் 
சமைக்கிறாய் 
காலத்திற்குத் தான் 
எத்தனைப் பசி ?

கடிகார முட்கள் 
கடோத்கஜ பற்களால்
உனக்கு 
நன்றி சொல்லியே
நேரத்தை விழுங்குகிறது 

இவர்களின் 
உலக அசதியோ
தூங்கித் தூங்கி விழுகிறது 

அதிகம் ஊதாதே
சுவாமி 
நீ உடல் மெலிதாய்
உள்ளம் பருமனாய் 
இருந்தாலே 
இகபர அழகு

நீ ஊதி ஊதித் தானே
புல்லாங்குழலை
ராகத்தால் 
பெருக்க வைத்தாய் 

காற்றெல்லாம் 
புல்லரித்துப் போய்ச்
சிலிர்க்க வைத்தாய்

ஆறிக் கொண்டிருக்கிறது
ஆறா இதயம் 

சுவாமி நீ
ருசித்து விடு 

அறுசுவையோ இல்லையோ
நீ ருசித்து விட்டால் 
அருட் சுவையால் அல்லவா 
என்னிதயம்
ஏகானுபூதியில் நிரம்பியிருக்கும்

89) ஷீர சாகர சத்ய சாயி:



காமதேனு சொரிந்ததை 
ராமதேனு சுவாமி 
நீயே பருகுகிறாய் 

பாற்கடலாய் 
பக்தர் வருகைக்கு 
உருகுகிறாய் 

பசு கறக்கிறது
காமதேனு சொரிகிறது
காமதேனுவாகவே
மாற்று சுவாமி
ஊற்றாய் வழிகிறேன்

கறக்கும் கஷ்டத்தைக் கூட 
நான் உனக்குக்
கொடுக்க விரும்பவில்லை

பால் தான்
நீயே எனைக் காய்ச்சுகிறாய் 
பக்குவத்தைப் பாய்ச்சுகிறாய் 

உன் 
பிரேம இனிப்பை
ராம ஆடையை 
எனக்குச் சூட்டி 
அழகு பார்க்கிறாய் 

ஆறித் தான் 
இது இருக்கிறது சுவாமி
நீ தொட்டவுடன்
தியானக் கொதிப்பு
ஏற்பட்டுவிடுகிறது 

உன்
விழி விளிம்பை 
மீறவே முடியவில்லை
என் இதயம் ❤️

உன் சொல் களிம்பை
தடவித் தடவியே
ஆற்றிக் கொண்டிருக்கிறாய்
கர்மக் காயங்களை 
மாற்றிக் கொண்டிருக்கிறாய்

நீ இப்படி
ஆற்றும் அழகிற்கே
பாற்கடல் இறங்கி
பூமிக்கு வந்துவிடுகிறது

இப்படி
ஆற்றி ஆற்றியே
பாற்கடலில் எடுத்த 
 அமுதமாய் நீ
பாலில் எடுத்துவிடுகிறாய் 

நஞ்சு என்
நெஞ்சு நீயே 
அருந்துகிறாய் 
தேன் என் வார்த்தை
அதையும் நீயே
விருந்தாக்குகிறாய்

என்
நஞ்சை அமுதமாக்கி
உன் 
பாதத்தைக் குமுதமாக்கி
நீயே 
சரணாகதி தருகிறாய் 

இந்தத் திருடனை நம்பி
நீ தானே 
உன் பொக்கிஷச் சாவிகளைத் தருகிறாய்

எப்படி நான் திருந்தாமல் இருப்பது?

இந்தப் புலியிடம் 🐅 
நீதானே 
ஆட்டை அரவணைக்கச் சொல்கிறாய்

எப்படி அது 
சைவமாய் மாறாமல் இருப்பது? 

நீ
விரலால் பாலை ஆற்றி
விழியால் ஊட்டிவிடுகிறாய்
அது 
பிறவி தோறும் 
பசியாற்றுகிறது சுவாமி

பாற்கடல் 
பாலலைகளை ஆற்றுவதாய்
நீ பாலை ஆற்றுகிறாய்

கடற்கரையில் 
சுவடுகள் மறைவதாய்
நீ
நாளை மாற்றுகிறாய்

உனக்கு சேவையாற்றவே
உள்ளத்து ஊழை மாற்றுகிறாய்

சுவாமி 
நீ எனைப் பருக வேண்டும்
அதற்காகவே 
கண்மூடிக் 
கொதிக்க வைத்து
கர்மங்களை ஆற்றுகிறாய்

சுவாமி
 நீ பருக நான் உருக
உன் 
பானமாய் மாறுவதே
ஞானமாய் மாறுவது

உன் 
பானமாய் மாறுவதே
வானமாய் மாறுவது 

உன் பாணமே 
என் பானம் 

திரேதாயுகத்தில்
தோளோடு சேர்த்து
மூன்று வில்லோடு அல்லவா
நடந்தாய் சுவாமி

நீ பாணம் வீசுகிறாய்
அது
என் அறியாமை
ஊனத்தை கர்ம
ஈனத்தை
பானமாக்குகிறது

நீயே 
யுகம்தோறும் பருகுகிறாய் 

பக்திக்கேப்
பெருகுகிறாய் 

இப்படி 
கோப்பைகளை 
அசைப்பதாய்
கிரகங்களை 
அசைக்கிறாய்

பழமாய் நீ கனிந்திருக்க
பாலை நீ அளந்திருக்க
என் பசியே 
உன்னைக் கலந்திருக்க

நீ கலந்து கொடுக்கும் 
இப்பால்
அப்பால் கடந்த
அறத்துப் பால் 

பொருட்பாலோடு 
பரம்பொருட் பாலே
இன்பத்துப் பால் என்கிறாய் 

நீ அளித்த 
வாய்ப்பால் ஒரு
வாய்ப் பால் நீயே தர
இதயம் பருகிக் கொண்டிருக்கிறது

ஒவ்வொரு 
தியான இரவுகளும்
சுவாமி 
நமக்கான 
முதல் இரவுகள் ❤️

90) பிரசன்ன சாயி பிரசாத சாயி:



சுவாமி 
நீயா ஆப்பிளா
எது ஆப்பிள் எனத் தெரியவிவ்லை

உன்னிலிருந்து நீ
உதிர்த்த ஒவ்வொரு ஆப்பிளும் 
ஆன்ம ருசி அல்லவா 
அளிக்கிறது 

தலைகளை வெட்டி நீ
தனியாக வைத்தாலும்
அவை
உன் புகழன்றி 
ஊரார் கதை பேசாது

அத்தனை பக்தி 
அந்த ஆப்பிள் மரத்திற்கு...

ஆப்பிளா உன் முகமா
எதில் ருசி அதிகம் என
ஆப்பிள்களே‌ உனை 
ருசித்துப் பார்க்க இதோ
ஆலோசனைக் கூட்டம்
ஆரம்பித்திருக்கிறது 

உனை தரிசித்து தரிசித்து ஏற்பட்ட 
தாகம் 
பாற்கடலைப் பருகியும் 
இன்னும் தாகமாகி
இதயம் 
உனைப் பருகிய பிறகும்
தாகத்தோடே 
தவம் செய்கிறது

உனை நினைத்து நினைத்து ஏற்பட்டப்
பசி
ஆப்பிள்களைத் தின்றாலும்
அடங்காது
உன் பாதம் விழுங்கிய பிறகும்
பசியோடே நிசிதோறும்
நிஷ்டையில் இருக்கிறது 

நீ யாருக்காக 
இவைகளைச் சுட்டுகிறாய் 

பழுத்திரு என்கிறாய்
கனிந்திரு என
கருணையோடு மொழிகிறாய்

கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பதை
குறளால் உணர்த்திய நீ 
இதோ விரலால் உணர்த்துகிறாய் 

கனிந்தாலே அதில் நீ
கையெழுத்திடுகிறாய் 

கனிந்தபின் நீ இட்ட
கையெழுத்தால் என்
தலையெழுத்து மாறிவருகிறது

மண்டை ஓடுகளையும்
ஆப்பிள்களாய்
 மாற்றும் ஆற்றல் 
உனக்கே இருக்கிறது
சுவாமி 

பழம் பெரும் இறைவன் நீ
பழம் தரும் இறைவனாய்

எங்களுக்குத் தான்
என்ன பாக்கியமோ
என்ன புண்ணியமோ

கடற்கரையில்
நீ விரும்பித் தொடும்
மண் வீடெல்லாம் உனக்கு
ஆசிரமமாய் ஆகிறது 

பணம் தருவதால் அல்ல
உன்னிடம்
மனம் தருவதால் தான்
மணம் தரும் ஆப்பிளை நீ
மகிழ்வோடு தருகிறாய்

ஆசைப் பழம் தின்று
ஆடைகட்டிக் கொள்ளும் 
ஆதாம் ஏவாள் அல்ல

உன் 
மந்திரப் பழம் தின்று 
மகானாகிப் போகும் 
சுந்தரப் பறவை நாங்கள்

சிறகு போதுமென
அலகைப் பூவாக்கி
அலகுப் பறவையை நீ
அழகுப் பறவையாக்கி
அருட்வானை 
ஆலங்கனம் செய்ய
அனுமதிக்கிறாய் 

நீ காத்திருக்கிறாய்
நீயே காத்திருக்கிறாய்

நான் கனிந்து கொண்டும்
இருக்கிறேன் 

"நான்" களைந்து கொண்டும்
இருக்கிறது 

ராமன் நீயே
சபரியாவது என்ன 
சாந்நித்யமோ

எங்களுக்குத் தான் ஜென்ம 
சாபல்யமோ 

சுடாத எத்தனை 
சூரியர்களை நீ 
அழகழகாய் 
அடுக்கி வைத்திருக்கிறாய்

உன் அனுமன் எங்கே
வரச் சொல்
விழுங்க நினைத்தவனுக்கு நீயே
வழங்கி விடு 

சாய் ராம் சாய் ராம் என்று 
நாங்கள் 
நெஞ்சாற அழைக்க

சாய் நீ ஆம் ஆம் என
பதில் தருகிறாய் 

எங்கள் செயல் 
வார்த்தையாக இருக்கிறது
சுவாமி
உன் வார்த்தையோ
செயலாக இருக்கிறது

உன் 
கற்பக விருட்சமும்
வட விருட்சமும்
போதி மரங்களே 

ஒன்றில் 
இகம் அளித்து
பரத்திற்கு அழைக்கிறாய்

மற்றொன்றில்
நேரடியாய் நீ
பரத்திற்கே பல்லாக்கு
அளிக்கிறாய்

முக்தி அடையினும் உனையே 
மொய்ப்பேன் சுவாமி

நீ தரும் பழங்கள் 
பசியாற்றும் பலங்கள்
சுவாமி
எனக்கு வேண்டியது
உன் புன்னகைகள்
அதுவே அகம் கனிய
அருட் சுவை தரும் 
தேவதாரு பழங்கள்

91) நயன‌ சாயி நாராயண சாயி:


நீ பார்க்கிறாய் 
விடியல் நேர்கிறது

வேறொரு இடம் பார்க்கிறாய் 
இங்கே இருட்டாகிவிடுகிறது

உன் பாதம் சுமக்கும் 
இதயம் கூட
உன் பார்வை சுமக்கையில்
பாரம் தாங்காது தடுமாறுகிறது 

அப் பாரம்
அபாரம்

இது
சாதாரண பார்வையா
சதா ரணங்களையும்
சாதாரணமாக்கும்
உதாரண பார்வை சுவாமி

நீ 
உருவம் பார்ப்பதாய்
நினைக்கிறார்கள் 
இல்லை சுவாமி நீ
உள்ளம் பார்க்கிறாய் 

உடம்பெல்லாம் 
உனக்குக் கண் 
உன் உடம்பில் மட்டுமல்ல
நீ உட்புகுந்த
உள்ளத்திலும் 
உன்
கண்களே முளைத்து
கவனிக்கிறது 

எங்களோடே தினந்தோறுமது
பயணிக்கிறது 

இந்தப் பார்வை
இதிகாசப் பார்வை 
தியானமாய் வரும் 
தேஜோமய பார்வை

உன் பார்வைக்கு 
கைகள் இருக்கிறது
அதுவே நீ
தள்ளியிருந்தாலும் 
தாவி வந்து அரவணைக்கிறது

உன் பார்வைக்கு 
கால்கள் இருக்கிறது
எங்கு சென்றாலும் 
கூட வருகிறது
அருளைக்
கூட்ட வருகிறது
காவலைக்
கூட்டி வருகிறது

உன் பார்வைக்கு 
உதடுகள் இருக்கிறது
நீ மௌனமாய் இருந்தாலும்
அது பேசுகிறது 

உன் பார்வை 
உருவம் இல்லாத
ஒரு கயிறு வைத்திருக்கிறது
அது
ஆன்மாவைக் 
கட்டிப் போடுகிறது

அக் கயிறு
அதிர்வலைக் கயிறு

எதிர் வலையில் 
யார் மாட்டினும் உன்
அதிர்வலையே மீட்கிறது

இருட்டிலும் 
உன் பார்வை
வெளிச்சமோடு ஊடுறுவுகிறது 

ஜெக ஜோதி தான்

விளக்கில் நீ அமர்ந்தாலும்
உன்னடியில் இருட்டில்லை

கிழக்கில் நீ 
அமர்ந்தாலும் 
உனக்கென்றும்
அஸ்தமனமில்லை 


உனக்கு 
அஸ்தமனமில்லை என்பது
அசுத்த மனத்திற்கு 
எப்படிப் புரியும்?

தூசியோடிருந்தால்
நிலைக் கண்ணாடியில்
நிழல் எப்படிப் பதியும்?

பழைய எண்ணங்களில்
பிடிமானம் உள்ளவர்களை
உன் 
பார்வையே 
தளர்த்தி விடுகிறது

நீ விழி அசைக்கிறாய்
சுவாசத்திற்குப் போதுமான
காற்றடிக்கிறது 

உன் 
இரு கண்ணிலும்
நெற்றிக் கண் 
அது வீசும் பொறிகளில்
இதயத் தாமரைகளில்
புதிய தவம்
உதயமாகிறது 

உன் 
கனல் பார்வைகளே 
கதவுகளை உடைக்கிறது 

பூட்டுக்களை உன் பஜன்
பாட்டுக்கள் உடைப்பது போல்

உன் நெற்றிக் கண்ணே
கந்தனுக்கான கர்ப்பப்பை
காமனுக்கான இடுகாடு

சயனம் அதை உன்
நயனமே எழுப்பி 
சுய தீபத்திற்கு
சுப்ரபாதம் இசைக்கிறது

உன் 
பேரருட் பார்வையே
பிரபஞ்சம் அசைக்கிறது

கருணை நிரம்பிய
 உன் பார்வை
நீ ஷிர்டியில் ஏற்றிய
நீர் தீபங்கள் 

காவல் நிரம்பிய 
உன் பார்வை
நீ வீடுதோறும் ஏற்ற வைக்கும்
நெய் தீபங்கள் 

நீ உன்னைப் 
பார்க்கும் போதெல்லாம்
சுவாமி 
உனக்கு நீயே
ஆரத்தி எடுக்கிறாய்

இரக்கம் அறிந்த உன்
இரு விழிகள்
உறக்கம் அறிவதில்லை

உருக்கம் நிறைந்த உன்
ஒரு பார்வை
உறக்கம் கொண்டால்
உயிர்களின் உறக்கம்
பயிர்களின் மேல் 
பிடிக்கும் நெருப்பாகிவிடும்

உன் 
பார்வையைப்
பார்ப்பதும்
பிரபஞ்சம் பார்ப்பதும் ஒன்று 

வாயில் மட்டுமா உன்
விழிகளில் கூட
விரியும் பிரபஞ்சத்தை நீ
தெரியக் காட்டுகிறாய் 

உன் 
கடைக் கண் பார்வையில் தான்
பரம்பொருள் கிடைக்கிறது

இவர்கள்
வெறும் பொருள் 
வாங்க மட்டுமே
வீதியில் அலைகிறார்கள்
விதியில் தொலைகிறார்கள் 

கடையில் வாங்கும் வெறும் பொருளுக்கு உண்டு

உன் கடைக் கண் 
பரம்பொருளுக்கு
காலாவதியே இல்லை

மழை நனைத்தால் என்ன
வெய்யில் அடித்தால் என்ன
உன் பார்வையே 
என்னைத் தொட வேண்டும்

அது 
என்னைத் தொடத் தொட
விண்ணைத் தொடும்
விரிவை சுவாமி உன்
பரிவே தர வேண்டும் 

உன்
கண்களைப் பார்த்து
கண்களை மூடினால்
கற்பூரமாகிறது மனம்
நீ 
பற்றி எரிகிறாய் உடல்
சுற்றி எரிகிறாய்

நீ 
பற்றி எரிவதால்
பற்று எரிகிறது மனத்
தொற்று எரிகிறது துயர்ப்
புற்று எரிகிறது 

ஆம் நீயே
முப்புரம் எரிக்கிறாய்

எரித்து எரித்து
ஏகத்துவத்தில் சிரிக்கிறாய் 

ஏகாந்தமாக்கி சிறகு
விரிக்கிறாய் 

தாய் நீ 
பார்த்துக் கொண்டிருக்க
நோய் எப்படிப் 
பார்க்கும்? 

உன் சேய் 
வாய் பார்த்தால்
தாய் நீ
பார்ப்பது எப்படி தெரியும்?

உன் புருவ மத்தியில் 
உலகங்கள் 
அடங்கி இருக்கிறது

நீ 
நுனி விரலால் 
அதை இயக்கிவிடுகிறாய் 

சுவாமி 
உன் இமை கூட
உன் விழியை அன்றி
என் இதயத்தையே மூடுகிறது 

அந்த மூடுதலே
ஆன்ம தேடுதலை
ஆற அமர்த்தி
அரங்கேற்றுகிறது

நீ பார்க்கிறாய்
எனக்கு 
அழுகை வருகிறது 

உன் கருணை 
என் இதயத்தை 
ஈரப்படுத்துகிறது 

அந்த ஈரமே
பக்திக்கான 
மகசூல் 
மகவுச் சூல்

உன் பார்வையும்
 என் பார்வையும்
சந்தித்துக் கொள்கிறது

அந்த சந்திப்பில்
பாதி சங்கரனாய் இருந்தவன்
மீதி சங்கரனை உன்
ஜோதி இணைக்க
ஆதி சங்கரனாய் 
ஆகிவிடுகிறேன் 

நீ 
முன்வந்து பார்க்கிறாய்
முற்பிறவிகள் தெரிகிறது

உன் முன்
நகர்வதற்கு இவர்கள்
முற்பிறவி தடுக்கிறது

பிறவிகள் எல்லாம்
நீ பார்க்கப் பார்க்க
அது வேர்க்க வேர்க்க
ஓடிப் போகிறது

உன் 
விரல் பிடித்து நடப்பது
வைகுண்டத்திற்கும்
உன் 
விழி பிடித்து நடப்பது
கைலாசத்திற்கும்
கூட்டிச் செல்கிறது

சுவாமி 
எதுவும் மிச்சமின்றி
எதற்கும் அச்சமின்றி
எனக்குள் எல்லாம் 
தீப்பிடித்தாக வேண்டும் 
இன்னும் இன்னும்
உற்று உற்று 
பார்த்துக் கொண்டே இரு

92) த்ரை அவதார த்ரை முக சாயி:


மூன்று  
குணங்களை...
மூன்று 
யுகங்களை...
கடந்த நீ 
மூன்று முகக் கடவுள் 

சுவாமி 
உன் 
மூன்று விரல் பிடித்து
மும்மலம் அகற்ற 
முழுமுனைப்பாய் 
இதயம் இறங்க
அது ஆத்மாவில் 
கொண்டு சேர்க்கிறது

மூன்று காலங்களை
உன்
மூன்று விரல்களே
தாங்கி இருக்கின்றன

மூண்டு வரும் மாயை
பூண்டு வரும் துறவாகி
தாண்டிவிடுகிறது
தவறிருளை 
தவமே தவிர்க்கிறது
இருளை 

மூன்று கடல் சந்திப்பிலும்
மூன்று உடல் 
சந்திப்பிலும் 
நீயே சுவாமி 
எழுகிறாய்

பக்தர்
முத்தராக நீ
தத்தரானாய் 

அருகம்புற்கள்
அத்தராக நீ
அத்ரி முனிவருக்கு
அவதரித்தாய் 

நீ 
மூன்றைக் காட்டுகிறாய்
எண்கள் 
மூன்றோடே 
முடிந்து போகிறது

நான்காவது என்ன?
நான்கு பேர்
நான்கு விதமாய் 
பேசினால் என்ன?

உன் 
மூன்று விரல்களிலே 
மூவுலகமும்
இயங்குகிறது 

நீ 
மூன்றானாய் 
மூன்றாகி 
முழுமுதலின் 
சான்றானாய் 

ஷிர்டியில் வாழ்ந்ததும்
பர்த்தியில் வந்ததும்
ப்ரேமமாய் வருவதும் 

உன் 
மூன்றதில்
மூச்சாகவே 
நாசி சுவாசிக்கிறது 

மூவாயிரம் ரூபம் எடுக்கும்
மனித மனங்கள் மத்தியில் நீ
மூன்று ரூபம் எடுத்து வர

உருவங்களில் சிக்கியவர்கள் உன்
உன்னதங்களை
உணராது போயின் நீயே
உணர்த்த வேண்டும் 

பாத்திரம் மூன்று
பவித்திரம் ஒன்று

யாகம் மூன்று
அக்னி ஒன்று 

விரல்கள் மூன்று
விபூதி ஒன்று 

பிறவி மூன்று
பரம்பொருள் ஒன்று 

முகம் மூன்று
அகம் ஒன்று 

இறைவடிவம் மூன்று
இதயம் ஒன்று 

உடை மூன்று 
நடை ஒன்று 

பொக்கிஷம் மூன்று
பொற்காசுகள் ஒன்று 

கேள்வி மூன்று
பதில் ஒன்று 

வரலாறு மூன்று 
வாழ்க்கை ஒன்று

சம்பவம் மூன்று
சரித்திரம் ஒன்று 

கவிதை மூன்று
அர்த்தம் ஒன்று 

மூன்றாவது போர் நிறுத்த நீ
மூன்றாவது முறை
வருகிறாய் சுவாமி 

மூன்றாவது சுற்றில் தான் 
முழுமை அடையும்

பிரதட்சணம் பக்தர்கள்
சுவாமி நீ சந்நதி 

திரிவேணி சங்கமம் காண
திரளாய்க் குவிபவர்கள்

உன்
திரி பிரவேச வைபவத்திற்கு
திசை தோறும்
 வர வேண்டும்

இரண்டு கண்ணாய்
அருள் பொழிந்த நீ
மூன்றாவதாய் 
நெற்றிப் பரப்பால்
சுற்றி வரப் போகிறாய்

 அது 
பொழியப் போகும் 
பொறிகள்
கங்கினை அல்ல
கங்கையினையேப் பொழியும் 

சத்தியமாய் வந்தவன்
பிரேமமாய் வர 
ஷேமமாய் உலகம் 
பேரன்பே தன்
நாமமாய்
மாறிப் போகும் 

சவங்களும்
உயிர் பெற்று
உற்சவங்களாகும் 

மூன்று தேகங்களிலும்
ஒன்றே யோகமாய் 
நன்றே பெறும் 
நாநிலம் எல்லாம் 

சுவாமி நீ
இரண்டு முறை
ஓம் சாந்தி சொல்லியிருக்கிறாய்

மூன்றாவது 
முறையும் நீ சொல்ல 
சாந்தி 
பிரசாந்தியாகும் 

திரி சூலம் சுமந்த நீ
திரி காலம் அறிந்த நீ 
திரி உலகம் அளந்த நீ
திரி உருவம் எடுத்தால்
திரி நெய்யில் தோய்ந்து
சுடராக வேண்டும்

பசிக்கிறவனுக்கு
இடியாப்பமா
இட்லியா தோசையா 

பக்திக்கு 
ஷிர்டி சாயியா
சத்ய சாயியா 
ப்ரேம சாயியா

தீராப் பசியில்
அள்ளி எடுத்து 
உண்பதைப் போல்

மாறா பக்தியில் 
வாராத வாரதி உனை
வாரி எடுத்து 
வழிபட வேண்டும்

கவிதையோ
கட்டுரையோ 
கீதமோ

வடிவம் எவ்வேறாயினும்
உன் புகழே முக்கியம்

ஷிர்டியோ
பர்த்தியோ
ப்ரேமமோ

உருவம் 
எவ்வேறாயினும் 
உன் 
சாந்நித்யமே 
சரணாகதிக்கு முக்கியம்

மனம் 
மீனுக்கு ஆசைப்படும் வரை
நாற்றத் தூண்டிலில் 
மூக்கை நுழைத்து மாட்டும் 

மனம்
விண்மீனுக்கு 
ஆசைப்பட்டால் 
வான வலையில்
ஞான மழையை
இழுத்து வரும் 

தூணைப் பிளந்து நீ
கரடி முகம் 
மனித உடலாய்
வந்திருப்பினும்
பிரகலாதன் 
பக்தியோடே
நாராயணா என உனை
நமஸ்கரித்திருப்பான் 

வானைப் பிளந்து
எலியாய் நீ வந்திருப்பினும்
கஜேந்திர மோட்சம்
கனிந்திருக்கும்

உருவமல்ல
உள்ளமே முக்கியம்
பக்திக்கு 

உடம்பல்ல
ஆன்மாவே முக்கியம்
முக்திக்கு 

மண்ணோ
வெங்கலமோ
வெள்ளியோ

விளக்கல்ல
ஜோதியே முக்கியம் 

இருளை
விலக்க வல்ல
ஜோதியே பாக்கியம்

வாழ்வை
விளக்க வல்ல 
ஜோதியே வாக்கியம்

சுவாமி உன்
மூன்றாவது முகத்தையும்
முத்தமிட வேண்டும்

இரண்டு உதட்டை
இரண்டு கோடியாக்கு

சுவாமி உனக்கு
ஆறு பாதம் எனக்கோ
ஆறாத உள்ளம்
சரணாகதி வெள்ளம்

ஒன்றாக இருக்கிறேன்
சுவாமி நீ உடனே
மூன்றவதாய்
வந்திணைந்து
ஜோடியாக்கு!

93) துவார சாயி துவாபர சாயி:


சுவாமி நீயே
இதயத்தில் நுழைந்து
இறுக்கமாய் நீயே
பூட்டிக் கொள்கிறாய் 

வேறாரும் வருவதற்கோ
வேறெதுவும் நுழைவதற்கோ
நீ அனுமதிப்பதில்லை

ஒருவரே வசிக்கும்
இருப்பிடத்தில் 
எப்படி ஓராயிரம் வசிக்கும்?

ஒன்றே ஒன்றும் 
ஒன்றியத்தில் எப்படி
ஒரு கோடி நுழையும்?

எண்ணங்கள் நிரம்பும் 
கிண்ணங்களில்
எப்படி உன் 
காவிக் காற்று நிரம்பும்?

வெளிச்சம் விரும்பும்
விட்டில்பூச்சிகள் 
வீட்டில் பூச்சிகளாய்
வீடுபேறு அடைகின்றன

இருட்டை விரும்பும்
மனிதப் பூச்சிகள் 
எங்கிருந்து
பூவை விரும்பும்
பட்டாம்பூச்சிகள் ஆவது?

திரையின் முன் 
நிற்கின்றாய் கண்ணா
இவர்களே
திரையின் பின் 
நிற்கின்றனர் 

மாயத் திரை 
மூடியிருக்கிறது 
அதன் 
முடக்கு மேடைகள்
முகாரி வாசிக்கிறது 

நீ பக்தியைப் 
பூட்டும் போது
விரக்தியை 
வெளியே தள்ளிவிடுகிறாய்

நீ 
வெளியேற மறுக்கையில்
நிராசைகள் வெளியேறுகின்றன 

அது இல்லை
இது இல்லை
என்கிறார்கள்
நீ இதயத்தில் 
இருக்கும் போதே

அதுவும் இதுவும் தான்
பெரிதாக இருக்கிறது

இதயம் கொடுத்த
உன் 
இருப்பிடத்திற்கு வருகிறாய் 

அதில் நீ 
இருக்க இடமின்றி
ஆசைகள் அமர்ந்திருக்கின்றன

ஆசைகளே இவர்களின்
பாஷைகள் 

மௌனம் உன் 
முழக்கம் இவர்கள்
வழக்கம் போல் 

பேசிப்பேசி உனை வெளியே
அனுப்புகிறார்கள்

சிறைகள் உனக்கு புதிதில்லை 
சிறையில் பிறந்தவன் 
நீயே 
சீக்கிரத்தில் சிறைபடுகிறாய் 

நீ சிறைபடுவதற்கு
நீயே கட்டிய 
சிறைச் சாலை தான்
இதயம் 

உனைப் 
பூட்டிக் கொள்வதற்கே
பக்தியைப் படைத்தாய் 
நீயே
விருப்பங்களை 
சாவிகளாக்கினாய் 

புராணப் புதையல் நீ
மண்ணாய் உறைந்திருக்கிறார்கள்
ஆழத் தோண்டுவதில்லை

வாழ வேண்டி
உள்ளே
ஆழ வேண்டும் 

யோகம் வேண்டின்
உள்ளே
போக வேண்டும் 

லோகம் வேண்டின்
வெளியே
வேக வேண்டும்

விழியின் 
வெளியே கனவும்
உள்ளே நிஜமும்
இருக்கிறது 

கனவில் 
உறங்குகிறார்கள்
கனவில் 
விழிக்கிறார்கள் 

கனவுகள் மட்டும் 
கலைவதே இல்லை

அலைவதால்
கலைவது எப்படி நிகழும்?

சிந்தனை 
வலை விரிக்கிறது
சுவாமி நீ
சிக்குவதே இல்லை

சந்தேகம்
ஒரு வட்டம் வரைகிறது

ஏற்கும் குணம் 
ஒரு வானம் வரைகிறது

உனை
வட்டத்திற்குள் 
வரச் சொன்னால் 
நீயோ
வானத்தில் ஏறி விடுகிறாய் 

வளைத்து உனை
இழுத்து வருவது
இயலாத காரணம் 

கடிகாரமே 
தன்னைப் பார்க்காத
நேரம் பார்த்து 
நீயே வருகிறாய் 

எதுவும் வேண்டாம் 
என்றிருந்தால் 
அந்நிலையே நீ 

மனதை மறுப்பதில் 
மனதிற்குள் நீ
இருப்பது புரிகிறது

போதும் என்றிருந்தாலுன்
பாதம் நடந்து
பக்கத்தில் வருகிறது

எதிர்பார்ப்புகள்
கொசுவை அழைத்தும்
ஏகாந்தம் 
பசுவை அழைத்தும் வருகிறது

கடவுளே நீயே சொல்
கொசுவில் எப்படி
பால் கறப்பது?

நிறைவு என்பது
பட்டுப்பூச்சியால் நெய்த படுக்கை

குறைபடுவது
மூட்டைப் பூச்சியால் 
நெய்த படுக்கை

நீயே சொல் சுவாமி
உன் அமர்தலை
எதில் அமைக்கிறாய்?

கூடிய கோபுரங்களிலும்
ஏறெடுத்து 
யாரும் பார்க்காத
எளிமையிலேயே நீ 
எப்போதுமிருக்கிறாய்

நான் செய்கிறேனெனில்
நீயே செய்து கொள் என
நகர்ந்து கொள்கிறாய் 

நானே செய்தேன் எனும்
சாதனை 
நாதனை எப்படி 
நெகிழ்விக்கும்?

கனவு 
நான் என்கிறது
நீ வரும் 
நிகழ்வுக்குப் பின்
நீயே நீயே நீயே என
நெஞ்சம் நிறைகிறது

விசில் அடிக்காமல் 
வீதியில் நடமாடும் 
கூர்க்கா நீ 

கம்பைத் தட்டாமல்
கதவருகே 
காவலுக்கு நிற்கும் 
காவலன் நீ 

மாதவியிடம் இன்றி
மா தவத்திடம் 
மயங்கிப் போகும் 
கோவலன் நீ 

நாலு வார்த்தையில் 
நாற்பதாயிரம் சொல்லும்
நாவலன் நீ 

பாடையைப் 
பாடியே உயிர்ப்பிக்கும்
பாலவன் நீ 

பக்திக்கே நீ உயிரையும்
அதன் 
பரகதிக்கே நீ
உயிலையும்
எழுதித் தருகிறாய் 

எங்கே மனிதன் 
நுழைவதில்லையோ
அங்கே நீ 
நுழைகிறாய்

மனிதன் 
இதயத்தையும் சேர்த்து
இரும்புப் பெட்டியில்
பூட்டி விடுகிறான் 

விதி வந்து 
திறந்துவிடுகையில்
கதி நீயே கடைசியில்
நுழைகிறாய்

கண்களை திறப்பது 
என்பது 
இதயத்தைப் பூட்டுவது

கண்களைப் பூட்டுவது என்பது
இதயத்தைத் திறப்பது

சில்லறைச் சப்தம் கேட்பதால்
சுவாமி உன்
காலடிச் சப்தம் கேட்பதில்லை

உனை தொந்தரவு 
செய்வதற்கான 
எந்தப் பற்றும் பற்றித்
தீப்பிடிக்கவில்லை

சரணாகதி எனும் 
பூட்டு என் இதயத்தில் ...
சுவாமி இனி நீ 
தப்பித்து வெளியேறலாம் என்பது
சாத்தியமே இல்லை

உன்னைத் தவிர 
இன்னொருவர் அதில்
புகுவது இனியென்றும்
சத்தியமாய் இல்லை

94) கிரக சாயி அனுகிரக சாயி:


ஒவ்வொரு வீட்டிலும்
நீயே வசிக்கிறாய்
ஆனால் உன் 
பக்தர்களே அதை 
உணர்கிறார்கள்

பூஜை அறை மட்டுமல்ல
எல்லா அறையிலும் 
நீயே வியாபிக்கிறாய் 

காரணம் நீ 
இதய அறையில்
பூரணமாய் இருப்பதால்... 

நீ வீட்டில் தோரணமாகவும்
வீட்டு விசேஷங்களின்
காரணமாகவும் அமைகிறாய்

அகிம்சா மூர்த்தி நீ
அசைவம் சமைக்கும்
இல்லங்களில் நீ
அடி எடுத்தும் வைப்பதில்லை 

கொல்லாமையை
இல்லாமையாக்கும் 
இல்லம் உன்
இறைமையை 
இல்லாமை ஆக்குகிறது 
சுவாமி 

நடப்பதை நீ 
கவனிக்கிறாய்
நொடிகள் 
கடப்பதை நீ 
கண்காணிக்கிறாய் 

அசுத்தமாய் 
கிடப்பதை 
சுத்தமாக்கினாலே 
உள்ளத்தில் உன் குரலை
சத்தமாக்குகிறாய் 

மனதிற்குள் வந்து
மனதை
முத்தமாக்குகிறாய் 

வீட்டில் 
எது வாங்கினும்
உனக்கே சமர்ப்பணம் 
வீட்டில் 
எவர் வரினும்
நீயே வருவதாய் 
உபசாரங்கள் 
உனக்கே அர்ப்பணம் 

நீ வசிப்பதால் 
இல்லமும் 
உள்ளமும் 
உயிரோடிருக்கிறது 

உன் படத்திற்கு 
விளக்கேற்றுகிறோம் 
அறையின் வெளிச்சம்
பிறையின் வெளிச்சமாய் இன்றி
பூரண வெளிச்சமாய் 
பூரிக்கிறது 

அண்டை வீட்டாரும் 
நம் வீட்டாரெனும்
உறவு நீட்டுகிறாய்

எவர் 
குழி விழினும்
நீயே சுவாமி
கை நீட்டுகிறாய் 

சொந்த வீடென்று 
நினைத்து வாழ்பவர்களையும்
நீயே வாடகைக்கு
அமர்த்தி இருக்கிறாய்

மாதா மாதம் அல்ல
நீ தினந்தோறுமே
தாள்களாய் இன்றி
நாட்களாய் 
வாடகை வசூலிக்கிறாய் 

பேசுகிறோம் கேட்கிறாய்
துயில்கிறோம்
தாலாட்டுகிறாய்
விபூதி சொரிந்து
வாழ்த்துகிறாய்

நீ விருந்தினன் அல்லன்
நாங்களே 
நீ வீட்டில் குடி அமர்த்திய
விருந்தினர் 

எல்லா வீடும் 
உன் வீடு 
எல்லா அறையும்
உன் அறை 
நீ வசிக்கிறாய்
"நான்" வசிக்காத வரை

பயணத்தில் நீ
பயணிக்கிறாய் 

காற்று கூட 
கண்ணுக்குத் தெரிவதில்லை

அது கண்ணுக்குத் தெரிந்தாலே
சுவாசத்தை அனுமதிப்போம் என
மனிதர் சொல்வராயின்

எவரும் இங்கு
உயிரோடிருப்பதில்லை

நாங்கள்
எண்ணத்தில் 
கை வைத்திருந்தால் 
என்னவென்று கவனிக்க நீ
கன்னத்தில் கை வைத்திருக்கிறாய் 

நாங்கள் 
அன்னத்தில் 
கை வைத்தால்
உனக்கே 
வயிறு நிரம்புகிறது 

அன்பில் 
கை வைத்தால் உனக்கு
இதயம் நிரம்புகிறது

கிரகம் உன்
அனுகிரகம் 

இல்லை எனில்
இல்லம் எப்படி அமையும்?

சாது நீ 
வீட்டார் சண்டை இட்டால்
காது மூடுகிறாய் 

எங்கள் வீடுகளில்
நீயே
எஜமானனும் 
காவலாளியும் 

உன்னால் தான் 
இரக்கத்தில்
இறங்கவும் 
நெருக்கத்தில் 
ஏறவும் முடிகிறது 

உயிர்க் கூடும் 
உன் வீடுதான் 
அதில்
கட்டும் வரி எல்லாம்
உன் புகழையே இசைக்கிறது 

அந்தமாய் அல்ல
ஆனந்தமாய் வாழ்வதற்கே நீ
சொல்லித் தருகிறாய் 

உணர்ச்சி வசமாய் அல்ல
உணர்வுப் பூர்வமாய் 
உயிர்க்கவே நீ
உத்தரவு போடுகிறாய்

நீ இருப்பதாலே தான்
தோட்டத்துச் செடிகள் 
பூக்கின்றன 

கொல்லை துளசி 
கொள்ளை வாட்டம்
இல்லை என 
இறைவா உன் அர்ச்சனைக்கே
விழியை உனக்குத் தர
எதிர்பார்க்கின்றன

உன் 
குடை நிழலுக்கான
குடக்கூலியாய்
என்ன தருவது?

என்னையே தந்தாலும் 
ஏராளம் மிஞ்சுகின்றன
என்பதால் சுவாமி
என்னிதயம் உன்னையே
கொஞ்சுகின்றன 

உன் பெயரை 
உச்சரிக்காத வீடுகள்‌
கர்ம ஓட்டையால் 
ஒழுகுகிறது
அதர்ம ஒட்டடையால்
புழுங்குகிறது 

மின்னல் நீ
ஜன்னலும் உனக்கு 
வாசலாகிவிடுகிறது 

வீட்டிற்குள் பெய்யும்
மழை நீ 
உன்னால் நனைய நனைய
இதயம் ஈரமாகிறது

வெய்யிலுக்கேற்ற 
கேசக் குடை நீ 
வேர்வைகள் 
போர்வைகளாய் மூடாமல்
எளிமை வாழ்வே
குளுமை வாழ்வெனக்
கற்றுத் தருகிறது

ஆன்ம வீட்டில் நீ
வாழ்கிறாய்
உனைக் காணவே
கண்மூடி வருகிறேன்

எனக்குள்ளிருக்கும்
குட்டிச் சுவர்கள் எல்லாம்
மண்மூடிப் போகிறது 
சுவாமி!

95) சாயி மாத பிதா சாயி:


சுவாமி நீ
எளிமைக்குப் பிறந்தவன்

அதனால் தான் உனக்கு
அன்பு வசதியானது 

அலட்டல் இல்லா 
ஆன்மாவுக்கு நீ பிறந்தது
அதனால் தான் 
உன் அன்பு
பிறருக்கு அனுபவமானது

பிறக்கவே இல்லை நீ
பிரவேசப்பட்டாய்

பக்திக்கு முக்தி
பிரவேசமானது 
பர்த்தி அதற்குப்
பிரதேசமானது 

கள்ளம் கபடமற்ற 
கனிகளுக்கு நீ
சாறானாய் 

இவர்களே உன்னை
இவ்வுலகத்தில்
ஊற்றியவர்கள்

பாற்கடல் நீ 
பொழிய வேண்டி
பாத்திரம் தேவைப்பட்டது

பிரபஞ்சம் நீ
பேசுவதற்கு 
கதாப் பாத்திரம் தேவைப்பட்டது 

நீ 
வெற்றியாய் வெளிவர
உன்னால் வரவழைக்கப்பட்ட
தேர்வுகள்

இவர்கள் உன்னால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

பரிபூரணமே உனக்குப்
பெற்றோராய் 
நேர்மையே உன்னால்
நேர்ந்துவிடப்பட்டவர்கள்

தாய்மையே 
தூய்மையே உனக்கு
தாய்மையானது 

எந்தையே 
விந்தையே உனக்கு 
தந்தையானது 
விந்தையில்லை 

சிவத்தை மெச்சி நீ
தவத்தை அருள்வதாய்
பேராசைப் படா 
இதயம் பார்த்து அதை
இதிகாசத் தந்தையாக்கினாய்

பக்தர்களை நீ
பெற்றெடுக்க
பக்தர்களையே முதலில்
பெற்றோராக்கினாய் 

ரகு வம்சம் பிறந்த நீ
ராஜு வம்சமாகி
ராஜீவ நயனா உன்
ராஜ்ஜியத்தை நிஜமாக்கினாய் 

ரத்னாகர குலத்தில்
பக்தாலய குளத்தில்
அம்புவில் ராமா நீயே
அம்புஜமானாய் 

ஆணவமில்லா 
ஓர் நவத்தை தந்தையாக்கி

ஆசையில்லா
ஓர் தவத்தை
தாயாக்கி‌

முல்லை நீ 
இல்லை எனும்
முள்ளை நீக்கப்
பிள்ளையானாய்

குழந்தை வரத்திற்கு 
கடவுளைக் கேட்பதை விட்டு
கடவுளையே
குழந்தை வரமாய்க் கேட்டவளைத் 
தெரிந்தே நீ 
தாயாக்கினாய் 

பிறவி பார்த்து தருவதே உன் காரணம்
நீ 
பிறவிகளைப்
பறவைகளாக்கி 
அதில் அமரும்
நாரணம் 

உன் தாயை எனக்குப்
பாட்டியாக்கினாய் 
அதையே அனுபவமாக்கி
பாட்டிலேற்றினாய் 

ஊருக்காக 
உதவிகள் கேட்ட
உத்தமி
எதையுமே உன்னிடம்
எதிர்பார்க்கா உத்தமர்

இவர்களின் படங்கள்
இல்லங்களில் இருந்தால்
பெற்றோர்கள் எப்படி
முதியோர் இல்லங்களில்
இருப்பர்?

இவர்களின் ஆசிகள் 
இதயங்களில் சொரிந்தால்
உன்னருள் தப்புமா?

பெற்றோர்களை 
மற்றோர்களாய் எண்ணினால் 
உன் மனம் ஒப்புமா? 

சிவசக்தி உனைச்
சீராட்டிய
சிவனும் சக்தியும் 

அவதாரங்களில்
உயர் அவதாரம் நீ 
உன் வரவால்
தாரம் ஒன்றோடே வாழ்ந்த
தசரதர் இவர்

வாசுதேவன் உன்
வசுதேவரும் 
நந்தலாலா உன்
நந்தகோபரும்
பந்தகோபராய் 
ஓர் வடிவாயினர் 

தாய் தந்தையில்லா
தயாபர சிவன் உன்
தாய் தந்தையை தரிசித்தது

என்ன தவமோ 
நீ 
அணைக்கவே வந்த
வித்யாச சிவமோ 

சுயநலமில்லா
சுய ஜீவன்களை நீயே
சுக ஜீவன்களாய் 
சுவீகரித்தாய் 

சுவாமி உன்னிடம்
தாயன்பு உண்டு
தாய்ப் பாசம் இல்லை

சுவாமி உன்னிடம்
தந்தை வளர்ப்பு உண்டு
தந்தை திணிப்பு இல்லை

உன் 
நெற்றியிலிருந்து
உதித்தவர்கள் 
உன் 
பாதம் சேரும் வரை 
உன் பாத சேவை செய்தார்கள்

சித்திரம் நீ உனை
பத்திரமாகப்
பார்த்துக் கொண்டாள் 

ஜோதி நீ 
உன் கொதிப்பையே
காய்ச்சலோ எனக் 
கவலைப்பட்ட 
குழந்தை இவள் 

தேகம் விடுத்து
யோகத்தில் மூழ்கிய போது
தேள் கடியோ எனத்
துயரம் கொண்ட
தாய்மை 
உயரம் இவள்

வரம்பற்ற 
விசும்பு நீ உன்
விஸ்தாரம் உணராமல்
பேய்ப் பிசாசோ எனப்
பிரம்பை எடுத்த
பாமரத் தூய்மை 
பெத்த வெங்கப்பர் 

கடவுளைத் தாலாட்டிய
கடவுள் தாய் 
ஈஸ்வரன்னை 

 சிகர சுவாமியே 
உன் மேல் 
உளியை வீசிய 
வறுமைக்கும் நீயே
பொறுமை கொண்டு
பெருமை சேர்த்தாய் 

வசதி இல்லை
இல்லாவிடினும் 
இறைவனே உனக்கு
அசதி இல்லவே இல்லை

கொடிய நாகம் தான்
குடை பிடித்திருக்கிறது
இருந்தும் இறைவா உனக்கு
பயமே இல்லை

என் பயத்தின் முன்
அகரத்தை நீயே 
சேர்ப்பதால் 

பயத்திற்குத் தான் 
பயம்
எனக்கில்லை

நிறை இறை நீ
குறையும் உன் வீட்டில்
குடி வர 
நிறையாகி 
நிர்மலமானது

சுவாமி 
இவர்கள் இருவரும்
கவிதைகள்
நீ அதன் 
ஒரே பொருள் 

கவிதா வாஹினி எனும்
பரம்பொருள்

96) தசாவதார சாயி நிஜாவதார சாயி:



சுவாமி நீ 
வெறும் அவதாரமில்லை
பெரும் அவதாரம் 

உன் சங்கல்பம்
அவதாரம் இறங்கியது
உன் சங்கல்பம் 
நீயே
அவதாரமாய் இறங்கியது

ஆயினும் நீ
தாயினும் சிறந்த 
தயாபரன் 

ராவணனையும்
ராமனாக்கவே
கம்சனையும்
அர்ஜுனனாக்கவே 

இறைவா
இந்த முறை நீ
இறங்கி வந்தாய்

நீயே
சுத்தாவதாரம் 

உன் 
பரிசுத்தம் 
நீ 
பரம சுத்தம்

அசுத்தங்களில்
அ எனும் அழுக்கை
நீக்குகிறது 

அவதாரங்கள் உன்
காவலாளிகள் நீயே
ஏவலாளிகளாய் அவர்களை
பூமிக்கு அனுப்பினாய்

ஏகபோக சக்கரவர்த்தி
நீ
காவலாளியாய் 
இறங்கி வருதல்
உனக்கொன்றும் கடினமில்லை 

பத்து அவதாரத்தில் 
நீ எங்கே எனக் கேட்கிறார்கள்

பத்து சுவையில் 
பூமிக்குப்
பந்தி வைத்தவனே 
நீ தானே சுவாமி 

சமைப்பவன் நீ
உன் சமையலே
ராமனும்
கிருஷ்ணனும் 

உன்
உணவை ருசிக்கையில்
பரிமாறும் கைகளை
பந்த மயக்கத்தில்
மறந்து போகிறார்கள் 

ரிஷிகள் 
உனைப் பற்றி
உரை எழுதவில்லையாம்

ரிஷிகளுக்கு என்ன தெரியும்

ரிஷிகள் கிளிகள்
நீ சொல்வதையே
திரும்பச் சொல்பவர்கள்

பிரபஞ்சமே 
உன் ரகசியம்
உனக்கே முழுதாய் தெரியும்

உனை 
அளப்பதென்பது
உடல் 
ஆன்மாவை அளப்பதாய்
சாத்தியமில்லாதது

தன்னை உணர்ந்தவர்கள்
நீயே
தெய்வம் என 
உணர்வார்கள் 

வான முதுகு
வானம்பாடிகளுக்கே
தெரியாத போது
மரங்கள் ஏனோ
விசும்பைப் பற்றி
குசும்பாய்ப் பேசுகிறது?

மேலிருந்து
இறங்கி வந்தவர்கள்
அவதாரங்கள்

விரிந்த நீ  உடம்பாய்
சுறுங்கி வந்த
சூட்சுமன் 

பரம்பொருள் நீ
உன் 
அரும்பொருளை
ஆராதிப்பதை விட்டு 
புராண
புத்தகம் வைத்து
வாதிப்பதில் என்ன 
வாத்ஸல்யம் வரப்போகிறது

புத்தரை நீயே
அவதாரங்களில் சேர்த்தது...
தியானமாய் ஆன்மாவை நீயே
வார்த்தது... 

மீன் முதல் 
மனித 
நான் வரை 

நீயே 
பரிணாமமாய் 
பூமிக்குக்
கொண்டு வந்தது

பிரபஞ்சமாய் நீ அதைக்
கண்டு வந்தது

பிறகு நீ
பார்வை இடவே
ஷிர்டி பர்த்தியாய்
இடம் பெயர்ந்தும்
தடம் பெயராமல் வந்தது 

வந்து வந்து நீ
வானானுபவம் தந்தது

உயிர் உணர அதை
உன்னதம் புணரும்

சுவருக்கு ஓவியம் 
புரிய வேண்டியதில்லை
பார்வைக்குப் 
புரிந்தால் போதும் 

நீ 
பரப்பிரம்மம் என்பதை
மகான்கள் உணர்ந்தனர்

உணர்ந்து 
உணர்ந்து
உன் பாதம் புணர்ந்தனர் 

ஆன்ம ஜோதி நீயே
உடம்பெடுத்து வந்தாய்
வந்து வந்து
சைதன்ய ஜோதியாய்
பிரசாந்தி அமர்ந்தாய் 

அண்ட சராசரம் உன்
பேராற்றலின் அனுமதியோடே
பரந்திருக்கிறது

உனை தியானிப்பவர்க்கே
நீ 
அண்ட சராசர ஆண்டவன் எனப்
புரிந்திருக்கிறது

பிரபஞ்ச எல்லையை 
நீயே
பராமரிக்கிறாய்

அங்கே தான்
ஆன்மாக்கள்
உடம்புக்கும்
எல்லைக்குமாய்ப் 
போய்க் கொண்டு வருகிறது

அண்டமே உனக்கு ஓர்
அணு தான்

உலகத்தை 
உணர்வது என்பது 
அனுபவம்!
உன்னை 
உணர்வது என்பது
அணு'பவம்!

தினசரி நீ 
தரிசனமானாய் 
ஒரே நேரத்தில்
பல உலகமுனை
தரிசித்தது 

இப்போதும் 
தரிசனமாகிறாய் 
இதயம் தோறும் 
கரிசனமாகிறாய் 

பிரபஞ்சமே நீ
புறப்படும் அவசரத்தில்
கருவெளியையும் 
தலையில் கட்டியே
தரையில் வந்தாய் 

உன்
வாய் மொழியில் 
இல்லாதது 
வேதங்களில் 
இல்லை

வேதங்களில் 
இல்லாதது உன்
வாய்மொழியில் இருந்தால்

வேதம் தன்னைப்
புதுப்பிக்கும் 
பேரன்பே பேரிறைமை
என
பூமியில் இனிப்
பதிப்பிக்கும் 

அறிவு பேசுகிறது
அன்பே கேட்கிறது

அறிவே யாசிக்கிறது
அறிவே யோசிக்கிறது

அறிவே உன்னிடம்
ஆயிரம் கேள்வி கேட்கிறது

கேள்விக்கான பதில்
அறிவிடமில்லை
அன்பிடமே 

அறிவு பூட்டு வைத்திருக்கிறது
அன்பே சாவி வைத்திருக்கிறது

பக்தி விரல் திறக்கையில்
நீயே
தரிசனம் தருகிறாய்
சுவாமி

நரி சனமும் உன்
தரிசனம் பெற்று 
நெறிசனமாய் 
நடக்கிறது

அறியா சனமும் 
உன்னன்பால்
அரியாசனம் ஏறுகிறது

அது
அரியாசனம் ஏற
புரியாசனமும் 
பூரித்துப் போய் உன்
பூரணத்தைப் 
புரிந்து கொள்கிறது

நிஜாவதாரன் நீ
நித்திய சுவாமி
உன் 
சத்தியங்கள்
சூட்சுமங்கள் 

உன்
அரவணைப்பே
அதிர்வலைகள் 

தோட்டக்காரன் 
விடுமுறை நாளில்
தோட்டம் பராமரிக்க வந்த
வீட்டுக்காரன் நீ
சுவாமி

அவதாரங்கள் 
விடுமுறையில் 
பரப்பிரம்மமே நீயே
புறப்பட்டு வந்திருக்கிறாய்

மனதுப் பசிக்கு
அவதாரம் பரிமாறுகிறது

பிறவிப் பசிக்கு
சுவாமி நீயே
பரிமாறுகிறாய் 

அழிக்க வந்த 
அவதாரங்கள் விட
அணைக்க வந்த
அணைத்தலை
அளிக்க வந்த
அணைத்தலில்
அளிக்க வந்த 

பரிபூரணப்
பரம்பொருள் நீ

உனது பாதம் 
உயிர்க்கு போதும் 
உயிர்க்கப் போதும்

97) சர்வாந்தர்யாமி தர்ஷன சாயி:


சுவாமி உன் 
தரிசனங்கள் 
நானுக்கல்ல நானதன்
வானுக்கே கிடைக்கிறது

அது
ஊணுக்குக் கிடைப்பதாய்
உள்ளம் நினைக்கிறது

உன் தரிசனம்
உள்ளத்தின் அணை
 உடைத்து நிரம்பிய
வெள்ளம் 

சுந்தரத்திலும்
மந்திரத்திலும் இந்த
அந்தரத்திலும் உன்
தரிசனமே 
உயிர்தோறும் நீ காட்டும்
கரிசனம்

சரிசமம் ஆவதற்கே
சரி சனம் என்பதற்கே
தரிசனம் 

பாம்பு எடுக்கும் 
படம் 
ஆதிசேஷன் தரிசனம்

பூ எடுக்கும் 
படம்
சுவாமி உனது தரிசனம்

உன் 
கேசம் சுற்றிய 
ஆரா பிரதேசமே சூரியன் 

உன்
நயனம் அனுப்பும் 
ஒளிப் பயணமே
குளிர் நிலா 

சுவாமி நீ
கண்மூடிப் பார்ப்பது
அமாவாசை
கண் திறந்து பார்ப்பது
பௌர்ணமி 

உனக்குள்ளே தான்
உலகங்கள்
உழல்கின்றன

காற்றில் உன்
கேசம் அசைவதாய்
பூமிகள் சுழல்கின்றன 

மெல்லிய உன்
அசைவிலே தான்
சம்பவம் நிகழ்கின்றன

திரிசங்கு சொர்க்கத்திலும்
வைகுண்ட சொர்க்கத்திலும் 
நீயே நிறைந்திருக்கிறாய்

 நீ நிற்பதற்கு‌
ஆதாரம் தேவையில்லை

நீ நிற்க சங்கல்பித்தால்
காற்றே உனக்கு தளமாகிவிடுகிறது

நதிகள்
நகரும் படிக்கட்டுகளாகி 
உன் பாதையை
துரிதப்படுத்துகிறது

உன் 
உதைப் பந்துகள்
கிரகங்கள் 

அவை உன் 
பாத வணக்கம் பெறவே
உனைச் சுற்றுகின்றன

சக்கரம் மட்டுமா
கோள்களும் உன் 
நுனிவிரலில் சுற்றுகின்றன

நாங்கள்
காணும்படியும்
காணாத படியும்
சுவாமி நீ
தரிசனம் தருகிறாய் 

நாங்களுனை
தரிசிப்பதை விட
நீ எங்களைப் 
பார்க்க வேண்டும்

நீ பார்ப்பதும் 
பார்க்காத விழிக்கு நீ
காட்டும் தரிசனமே

என் செயல்களில்
உன் உருவமே
ஊடுறுவுகிறது 

நீ எழுதும் 
என் கைகளில் நீயே 
கையெழுத்தாகிறாய் 

நீ பாடும் 
குரலில் நீயே 
பஜனையாகிறாய் 

பிற சாந்தியை 
தேடுவது நிற்கையில்
பிரசாந்தி வருகிறது
நீ உடனே அதில்
தங்கிவிடுகிறாய் 

உலகத்தின் எல்லா
உன்னதக் கலைகளிலும்
பொங்கி வருகிறாய்

நீரில் மிதக்கும் எறும்புக்கு
காற்று உதிர்க்கும்
இலைகள் அவை
இலைகள் அல்ல உன்
லீலைகள் 

பூமிக்கும் வானுக்கும்
இடை நின்று நீயே
இடைவெளியை நிரப்புகிறாய் 

ஆன்மா தோறும் உன்
ஆற்றலைப் பரப்புகிறாய்

சகதியில் விழாமல் 
சந்தனத்தில் விழும் 
நீராய் உன்
பேரைத் திருப்புகிறாய்

பேரையும் திருப்பி
தேரையும் திருப்பி
நீயே சுவாமி
திறள் வானத்தையே
திருவிழாவாக்குகிறாய் 

கண்டிக்கிறாய்
நீ தந்தை என்பதால்
அணைக்கிறாய்
நீ அன்னை என்பதால்
மன்னிக்கிறாய் 
அந்த மன்னிப்பும் 
நீயே என்பதால்

உலகம் ஒரு தண்டனை
சுவாமி நீயே
மன்னிப்பாய் 
மண்ணில் நடமாடுகிறாய்

உலகம் ஒரு குமிழி
சுவாமி நீயே
ஆனந்தமாய் 
அதில் மேல் அமர்ந்து
நடனமாடுகிறாய் 

முதலில் 
வெளியாய்த் தெரிகிறது
பிறகு
ஒளியாய்த் தெரிகிறது
அதன் பிறகு 
அதில் நீ
வீற்றிருப்பது தெரிகிறது 

பரிணாமப் பூனை
புலியானது போல்
பரிணாமக் கடவுள் நீ

ஆகவே தான் நீ
அளப்பரிய சக்தியாய்
அகிலத்தில்
அவதரித்திருக்கிறாய்

சத்யமான நீ
பிரேமமாகி இருக்கிறாய்

உன் 
சத்தியத்திலேயே
அத்தனை பிரேமை 
இருக்கையில்

உன் 
பிரேமத்தில்
எத்தனை சத்தியம் இருக்கும்!

விஸ்வாச ரூபங்களுக்கு
நீ
விஸ்வ ரூபங்கள் கொடுக்கிறாய்

நாங்களுனக்கு
என்ன கொடுத்தோம்
நீயே எல்லாம் கொடுக்கிறாய்

கண்மூடி எனை
அந்தரத்திற்கு அழைத்தே
கண் திறந்து நீ
அந்தரத்தில் 
காட்சியாகிறாய்

நீ
காட்சியாவதற்கு
நீயே
சாட்சியாகிறாய் 

பூமியே 
பிரபஞ்ச அந்தரத்தில் தான்
பயணிக்கிறது

பிரபஞ்ச சுவாமி நீ
அந்தரத்தில் காட்சியளிப்பதா
ஆச்சர்யம்?

வீடே 
வெளியில் கட்டியவை தான்

வெளியில் தான்
வாழ்கிறான் மனிதன்
உள்ளே வாழ வாழ உன்
உள்ளே வாழ்வது
உணரப்படுகிறது‌

சுவாமி உன்
சங்கல்பமே 
நிகழ்பவை எல்லாம்

இன்பம் துன்பம் என
மனிதனே பிரிக்கிறான்

சுவாமி உன் 
சங்கல்பமே
காண்பவை எல்லாம்

வானம் பூமி என 
மனிதனே பிரிக்கிறான்

மனிதன் பிரிக்கிறான்
கடவுள் நீ சிரிக்கிறாய்

பக்தன் 
பிரிப்பதை விடுத்து
சேர்ப்பதை உன் 
சரணத்தில் கொடுத்து
சரணாகதி அடைகிறான்

அவன் சரணாகதி அடைகையில்

*அந்யதா சரணம் நாஸ்தி*
*த்வமேவ சரணம் மம*
*தஸ்மாத் காருண்ய பாவேன*
*ரக்ஷ ரக்ஷ ஸாயீஷ்வர:*

காற்றின் அசரீரி உனக்கான
மந்திரம் ஓதி
சுந்தர சுவாமி உனை
 சேவிக்கிறது

98) ஆலிங்கன சாயி ஆகர்ஷன சாயி:


சுவாமி உன்
விழி அனுப்பிக் கொண்டிருக்கிறது அது 
வழி அனுப்பிக் கொண்டிருக்கிறது

விழி அருளையும்...
வழி இருளையும்...

சுவாமி உன் 
கரம் அனுப்பிக் கொண்டிருக்கிறது அது
வரம் அனுப்பிக் கொண்டிருக்கிறது

உலக சிறையில் இருந்து
விடுவிக்க வந்த 
வாடர்ன் நீ 
உன்னிடம் 
சிறை நீட்டிப்பே கேட்டு
மன்றாடுகின்றனர்
மக்கள் 

ஆசை 
பூசையாகையில்
அர்ச்சிக்கும் போதே
வாசனைப்பூ
வாடிவிடுகிறது

பூசை
ஆசையாகும் போது
இதயம் பூத்துக் குலுங்கி
அர்ச்சனையாய் உன்
அடியில் விழுகிறது

சாதுக்களிடம் நீ
ஒப்படைத்த பூமியை
அரக்கர்கள் பறித்து
அவதிப்படுத்த
நீயே சுவாமி
மீட்க வந்தவன் 

தர்ம உரிமையைக்
கேட்க வந்தவன் 

போரை முறித்து
சாந்தியை
சேர்க்க வந்தவன் 

வெள்ளமாய்ப் பாய
உள்ளத்தை 
வார்க்க வந்தவன் 

கர்மப் பூட்டில்
சாதனா சாவியைக்
கோர்க்க வந்தவன்

பூமியே உன் 
பங்காரு 
நீ கை காட்டும் 
இடங்களில் எல்லாம்
தங்கமாய் தவம் செய்ய
தபஸ்விகள் அமர்கின்றனர்

நீ எங்கள்
எதிர்பார்ப்பை அழித்து
எதிரே நீ எங்களைப்
பார்க்கிறாய் 

பரி போய்விட்டதே எனும்
புலம்பலில்
அரி போய்விடுவானோ எனக் கவலைப்பட இவர்களை
அனுமதிப்பதில்லை
அகண்ட மாயை 

பிறவி
மாயையில் தள்ளிவிடுகிறது

மாயை
உறவுகளின் பள்ளத்தாக்கில்
பல் இளித்துப் பார்க்கிறது

உன் பேரன்பை விட
பூமி வம்பே
பிடித்தாட்டுகிறது

சொந்தமாம் 
பந்தமாம்
ஒட்டாம் உறவாம்
ஒட்டடையாம் 
ஈர்க்குச்சியாம் 

சுவாமி உன் 
புஜங்களே 
நிஜங்களைப் புரிய வைத்து
மீட்கிறது

நீ 
வெளிச்சத்தை அனுப்புகிறாய்
மாயையோ‌
இருட்டில் போய் 
இதயத்தை ஒளியச் சொல்கிறது 

உன்னருள்
வினையை 
ஒழியச் சொல்கிறது
விருப்பமோ
பக்தியைக் குழிதோண்டி
ஒளியச் சொல்கிறது

உன் முத்த தானமே
சமாதானம்
உன் ரத்த தானமே
நிதானம்

உன் ரத்தம் 
ஒளியால் 
உள்ளத்தில் ஓடுகிறது
சுவாமி

நீ எங்களின்
கனவிலிருந்து
காட்சியைப் பிரிக்க
கை நீட்டுகிறாய்

அகம் உன்
கை நீட்டையும்...
மனம்
அகந்தையின்
கையூட்டையும் வாங்குகிறது

மனம் ஒரு எருமை 🐃
காளையே உனக்கு
வாகனமாகிறது

காமம் ஒரு நரி
நான்கு நாய்களே
உனைச் சுற்றி
அமர்ந்திருக்கிறது

பொய் குளித்து
பல யுகம் ஆகிவிட்டது
சுவாமி நீயோ
மானசரோவராய் 
குளிரக் குளிர அழைக்கிறாய்

இவர்கள்
வாழ்வதாய் நினைக்கிறார்கள்
நீயே
வாழ்விக்கிறாய்

நடக்கிறோம் என 
நினைக்கிறார்கள்
நீயே தூக்கிச் சுமக்கிறாய்

உன் இடுப்பில் ஏறி அமர்ந்தும்
உனை ஏறிட்டுப் பார்ப்பதற்குள்
ஏராளமாய்ப் பிறவிகள்
போய்விடுகிறது 

எங்களுக்கு
ஒன்றும் தெரியாது
அந்த ஒன்றே நீ என
உணர உணர 
தெரிந்த தவறுகள் எல்லாம்
தெரியாமலாகிறது

அறியும் குப்பையை
எரியும் தீயில் இடும்போதே
அறியாத உன்னை
அறிய முடிகிறது

மேகமே வானம் என
நினைப்பது போய்
நீலமே வானம் என 
நம்பியது போய்
மனிதனோ இல்லை
மகானோ நீ என
மயங்கியது போய்

எல்லா போயும்
எல்லா பேயும்
போய் விட

பரபிரம்மமே நீ என
ஆன்மா சாட்சியாகிறது

நீர்க் குமிழி பிரபஞ்சத்தை
நீயே 
ஊதி ஊதி 
விளையாடுகிறாய்

அது 
பல பூமியாய்
பல கிரகமாய் 
உருவாகிறது

நீ சங்கல்பிக்கிறாய்
பிறவி கருவாகிறது

சதுரங்கத்துக் 
காய்கள் நாங்கள்
சுவாமி எங்கள் 
நகர்வை உன்
நுனி விரலே தீர்மானிக்கிறது

யாவும் உன் பாடென
எங்கள் பெருமூச்சு உனக்கு
பாத சாமரம் வீச
சரணாகதி வருகிறது

உன் காதலையும்
உன் காவலையும்
உணர வேண்டியே
நீ 
இதயம் தருகிறாய் 

ஈக்களாய் 
அலைந்த மனம் 
உன் 
வருகையில்
பூக்களாய் நின்றபடி
பூரிக்கிறது

நீ ஊட்டவே வந்தவன்
அதட்டியாவது ஊட்டும்
அன்னை நீ 

உன் அதட்டலைக் கண்டு
கை தட்டல் செய்கிறது
கனிந்த பக்தி

விரல் அசைத்து நீ
விபூதி எழுதவும்
விரல் அசையாது நீ
அனுபூதி எழுதவும்

விண்ணில் ஒரு
மை வைத்திருக்கிறாய்
அது
மண்ணில் சிந்தும்
போது 
மகிமை ஆகிறது

கண்ணீரில் நிரம்பிய 
விளக்கை நீ ஏற்ற 
நெய் வைத்திருக்கிறாய்

நை நை எனப் பிள்ளைகள் 
நச்சரிக்க
நீ ஏற்றுகையில் அது
கருணை ஆகிறது

ராட்டிண சுற்றலாய்
பூமி உனை 
நம்பியே சுற்றுகிறது

பூமி சுற்றலோடு
சேர்ந்து சுற்றுபவர்க்கு மட்டும்
தலை சுற்றுகிறது

உன் 
நாமத்தில் நாக்கை நுழைப்பதால்
பிறர் வாழ்க்கையில்
மூக்கை நுழைப்பது
முடிந்து போகிறது

சுவாமி நீ
அருட் சாட்டை 
வீசிக் கொண்டே இரு
அப்போது தான்
விருப்பப் பேயாட்டங்கள்
ஒரு முடிவுக்கு வரும்

99) பிரபாவ சாயி பிரயாண சாயி:



காத்திருக்கிறாய்
கரை சேர்க்கத் துடிக்கும்
படகோட்டியாய்

காத்திருக்கிறாய்
வந்த ஊருக்கு சேர்க்கும்
பேருந்தாய் 

வந்த ஊர் மறந்து போக
பந்த ஊரே பிடித்தாட்டுகிறது

உன்னிரு பாதம் என்
பாதை 

வழி மாறிப் போகிறவர்களை
ஏன் சுவாமி
வேடிக்கைப் பார்க்கிறாய்?

பின்
தொலைந்து விட்டோம் என்ற
தேடல் தவிப்பு தந்தே
மீட்கிறாய் 

வந்த ஊருக்கே
வந்து சேர வேண்டும்

வந்தவாசி நான்
வாரணாசியாய் வந்த
வானவாசி நீ 

வழி அனுப்ப வந்தவர்களே
வழி மறிக்கிறார்கள்

வழி அனுப்பும் 
கூட்டத்தினரோடே
தொலைந்து விடுகின்றனர்

ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு நிறுத்தம்

யார் யாரின் நிறுத்தத்தில்
யார் யாரோ சேர்ந்து இறங்குகிறார்கள் 

பாசக் கயிறு 
இறுக்கக் கட்டியா
உன் பேருந்து நின்றுவிடும்? 

கால்நடை அல்ல
சைக்கிள் நடை நான்
நீ தான் எனை
சவுகரியமாய் உன்
பேருந்தில் ஏற்றுகிறாய் 

நாற்காலிகள்
நிரம்பிவிட்டதால் உன்
மடியில் அமர்த்துகிறாய்

அங்கே திரும்பினும்
நீயே ஓட்டுகிறாய்
இங்கே திரும்பினும்
நீயே நடத்துகிறாய்

ஓம் மூன்றே 
சுவாமி நீ ஊதும்
விசில் சத்தம்

பஜனை சத்தத்தோடே
பேருந்து புறப்படுகிறது 

வழியே இல்லா சாலையிலும் உன்
விழியே
வழி அமைத்துவிடுகிறது

காட்டுப் பாதையும்
ரோட்டுப் பாதையாகிறது

நரகத்திற்கே 
 நான் சென்றாலும்
நீ என் கூட வருவதால் 
சொர்க்கமும்
நரகத்திற்கே வர 
ஆசைப்படுகிறது

"நான்" நரகத்திற்கே செல்கிறது
பக்குவமே 
சொர்க்கத்திற்கு
வழி சொல்கிறது 

சத்ய‌ தர்ம
சாந்தி பிரேமமாய்
சக்கரங்கள்

அகிம்சையே நீ ஓட்டுவதால்
விபத்தே இல்லை 
சுவாமி உன் சாலையில்

நீயே
ஓட்டுகிறாய் 
பேருந்தை மட்டுமல்ல
பாவங்களை
பேய்களை 
பிடிவாதங்களை
திமிரை 
தரி கெட்டலையும் 
மனதை

உன்
வாகனத்தை முந்த 
காலச் சக்கரத்தால் கூட
முடிவதில்லை 

சங்கு சக்கரதாரி
உன் முன்
காலச் சக்கரம்
என்ன செய்யும்?

ஓட்டுனன் நீ 
ஒருவன் தான்
தூங்கியவனை எழுப்பி
தோளில் தூக்கிப் போகிறவன்

நேரம் வந்துவிட்டால்
ஓரத்தில் நிற்பவனையும் ஏற்றி
நீயே
ஓட்டிப் போகிறாய்

கண் காணா திசை 
உன் கண்களுக்கு
இல்லவே இல்லை

உன் பேருந்தில்
இவர்கள் வீடு 
எப்படிப் பற்றும்?

நீ அழைக்கையில்
அவர்களைத் தவிர
எல்லாவற்றையும்
தயார் செய்கிறார்கள்

கட்டு சாதம் விட உன்
கட்டி போதமே கட்டி
ஏற்றி வர நீ
அனுமதிக்கிறாய்

பயணிகள் கவனத்திற்கு
நீயே பேசுகிறாய்
பயணிகள் 
பயணத்திற்கு 
நீயே அழைப்பதாய்
கை வீசுகிறாய்

கடைகளுக்காக
காலாற நடப்பவர்கள் 
பயணிகள் 

கடவுள் உனக்காக உன்
பேருந்தில் அமர்பவர்கள்
பக்தர்கள் 

சம்சாரக் கடலில் 
உன் பேருந்தே கப்பல்

தண்ணீர் கூட 
தேவையில்லை
காற்றே உனக்கு
பேருந்தை ஓட்டப்
போதுமானதாகிறது

காற்றுதான்
மூச்சுக் காற்று

இவர்களே 
பேருந்து என
இவர்களுக்கு தெரிவதில்லை

நீயே
ஓட்டுநனும்
நடத்துநனும்

இவர்கள் 
ஓட்டிய வரை
ஆசைகளின்
போக்குவரத்து நெரிசலில் சிக்கி
வயதாகிவிடுகிறது 

உன் கையில் 
ஒப்படைக்கப்படும்
பேருந்துச் சாவி
சுவாமி அது மாறும்
வைகுண்டத்திற்கான
புஷ்பக விமானமாய் 

நீ 
வழி நடத்தி 
ஓட்டுவதை விட 
பூமியின்
சுற்றுலா பயணங்கள் வருமோ
சமானமாய்?

100) ஆர சாயி ஸார சாயி:


சுவாமி நீ
கழுத்திலிருந்த மாலையை
அணிவிக்க 
அதை எடுக்கிறாயா?
அன்பைத் தொடுக்கிறாயா?

இல்லை என்
கையிலிருந்து எடுத்து
கழுத்தில் நீ அணிய
என் அன்பை 
ஏற்கிறாயா ?

பூவாகி நீயே பலவாய்
ஆரமாகி பல வாய்
உன் புகழ் பரப்பும்
வாசமாய் 
வாசம் செய்கிறாய்

நீ 
வாசம் செய்ய 
வாசம் செய்ய
துர்நாற்றத் திமிரை
நாசம் செய்கிறாய்

மனதிற்குள் இருக்கும்
மாயைகளை ஏமாற்றி
அதை வெளியேற்றி
அதற்கு மோசம் செய்கிறாய்

நரக எண்ணங்களை
நாசம் செய்கிறாய் 

இந்த மாலையும் உன்
கைகளாகவே மாறுகிறது

காற்றின் தோளில்
அதற்கு நீ உனை
அணிவித்து
காற்றை
பூங்காற்றாக்குகிறாய்

கண்மூடி உனை
நுகர்கிறேன்
நாசிக்குள் புகும் காற்று
நிதானமாகிறது

சுவாசம் மணக்கிறது
காற்றலை உன்
அதிர்வலையாகிறது

காற்றாக வேண்டும் என்ற கவனத்தில்
மூச்சு விடுவதும்
முள்மேல் நடப்பதாகிறது

கல்யாணக் கால்கட்டாய்
சுவாமி எனக்கு நீ
மாட்டிய இதயக் கட்டும்
உன்னிடம் நான்
மாட்டிக் கொண்ட
ஆன்மக் கட்டும்

உனக்கு 
மாலை அணிவிக்கும்
கழுத்துக் கட்டில்
இழுத்து வந்து
மனதை வெளுக்கிறது

கதம்ப மாலையாய்
உலகம் 
சுவாமி நீயே
காவி நாராய் அதனை
கட்டி இருக்கிறாய் 

கதம்பத் தோட்டமாய் 
பிரபஞ்சம்
சுவாமி நீயே 
காவிய வேராய் அதனுள்
உறைந்திருக்கிறாய்

குறையே இல்லை
நீயே நீயே நீயே
நிறைந்திருக்கிறாய்

நோயா 
கர்மா கழிகிறது
வறுமையா
கர்மா கழிகிறது
அழுகையா
கர்மா 
கண்ணீரில் 
ஜலசமாதி ஆகிறது

தியானமா
கர்மா 
உறைதலில்
ஜீவசமாதி ஆகிறது 

குறையே இல்லை
காரணத்தோடே எல்லாம்
பூரணமே உனை அடையும்
ஏற்பாடாகிறது

ஒவ்வொரு நொடியும்
உனை நோக்கிய நகர்வின்
புறப்பாடாகிறது

நீயே தேரோட்டி 
நீயே நகர்வதாய் 
நொடிகள் 
நகர்கின்றன 

நீயே மூச்சோட்டி
நீயே வாழ்வதாய்
ஆன்மாக்கள் 
நிகழ்கின்றன

கோடி மாலைகள் விடவும்
ஒரு வில்வம்
ஒரு துளசி போதுமுனக்கு

செடியிலிருந்து 
விழும்
தெய்வ இலைகளை விட 

சுவாமி எங்கள் 
விழியிலிருந்து விழும்
திரவ இலைகளிலேயே
சிந்தனை மறைவதில்
உன் சங்கல்பமே 
பூத்துக் குலுங்கி
ஆன்மக் கழுத்தில் 
ஆரமாய் மிக 
ஆர்வமாய் உன் 
ஆலிங்கனங்கள் 
அன்றாடம்
நடைபெறுகின்றன







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக