தலைப்பு

புதன், 19 பிப்ரவரி, 2020

நீ ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நான் உன்னுடன் இருக்கிறேன்!


நீ எங்கு சென்றாலும் உன் கடமையைச் செய். உன்னுள் இருந்து நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நான் உன்னுடன் இருக்கிறேன்.

வர இருக்கும் வருடங்களில் என்னைப் பல வடிவங்களில் உன்னால் உணரமுடியும். நீ என்னுடையவன், எனக்கு மிகவும் நெருக்கமானவன். கண் இமைகள், விழியைக் காப்பது போல் நான் உன்னைக் காப்பாற்றுவேன். நான் உன்னை என்றும் விட்டு விலகமாட்டேன். நீயும் என்னைவிட்டு விலக முடியாது.

இந்த நிமிடத்திலிருந்து எதையும் எதிர்பார்த்துச் செயல்படாதே. மாறாத அன்புடன் உன் கடமையைச் செய்! எல்லாவற்றிலும் இறைவனைக் காணக் கற்றுக் கொள். பொறுமையுடன் இரு. சரியான நேரத்தில் உனக்கு எல்லாம் அளிக்கப்படும். மகிழ்ச்சியாய் இரு.

எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். 
எது நடந்தாலும், எதை அனுபவித்தாலும் என் சங்கல்பத்தினாலேயே நடைபெறுகிறது என்பதைப் புரிந்து கொள். நான் இவ்வுலகத்திற்கு வந்துள்ள அவதார நோக்கத்தைத் தடுத்து நிறுத்தவோ, தாமதப்படுத்தவோ  எந்த சக்தியாலும் முடியாது. கண்முன்னே விரிய இருக்கும் பொற்காலத்தில் புனித ஆத்மாவாகிய நீ ஆற்ற வேண்டிய பணிகள் இருக்கின்றன. அதைப் புரிந்து கொள்!

-பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக