தலைப்பு

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

பகவானின் ஒரே ஒரு கருணை பார்வை அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து விட்டது!


பேராசிரியர் இந்திராணி சக்கரவர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சத்யசாயி மிர்புரி சங்கீத கல்லூரியின் முதல்வராக இருக்கிறார். அதோடு UGC இல் கௌரவ பதவியும் வகிக்கிறார்.

1999 ஆம் ஆண்டு இறுதியில் அவர் மத்திய பிரதேஷ் சத்தீஸ்கரில், இந்திராகலா சங்கீத பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி வந்தார். அவரை சுவாமி புட்டபர்த்தியில் கட்டப்பட இருந்த சங்கீத கல்லூரி, மற்றும் சங்கீத கருவிகளின் காட்சியகத்திற்கு உண்டான வரைபடங்களைப் பற்றி கலந்தாலோசிக்க அவரை வரச் சொல்லி அழைத்தார். அச்சமயம் அவர் பணிபுரிந்து வந்த இடத்தில் பற்பல பிரச்சனைகள், நிர்வாகப் பிரச்சினைகள் இருந்தன. அவற்றை தீர்க்கும் வழி புலப்படாமல் தவித்துக் கொண்டிருந்தார். சுவாமியிடம் இருந்து அழைப்பு வந்ததும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுவாமியின் அருகாமை தனக்கு பிரச்சினைகள் தீர்க்க வழி வகுக்கும் என எதிர்பார்த்து வந்தார்.

புட்டபர்த்தியை அடைந்ததும் கட்டடக்கலை நிபுணர் ஸ்ரீ ரவி அவர்களுடன் விவரமாக கலந்துரையாடல்கள் நடத்திய பிறகு, மேலும் சில நாட்கள் தங்கி பாபாவுடன் பேச வாய்ப்பு கிட்டுமா என்று காத்திருந்தார். ஆனால் பாபா கண்டுகொள்ளவில்லை. இந்திராணி அவர்களது சலிப்பு அதிகரித்துவிட்டது. அவர் கிளம்பும் தினத்தன்று ஷாலினி என்ற ஒரு பெண்மணி(ட்ரஸ்ட் அங்கத்தினரின் மனைவி) வந்து, சுவாமி இந்திராணி அவர்களை நுழைவுவாயில் அருகே அமர்ந்திருக்க சொன்னதாகச் சொன்னார். மனமகிழ்ந்து அவ்வாறே செய்தார். ஆனால் மீண்டும் அவருக்கு ஏமாற்றம்! மீண்டும் சுவாமி கண்டுகொள்ளாது சென்றுவிட்டார். ஷாலினி தொங்கிய முகத்துடன் வருத்தமாக வந்து, இந்திராணியிடம் தான் தவறு செய்துவிட்டதாகவும், சுவாமி தன்னை இந்திராணியின் பக்கத்தில் அமர சொன்னதை தவறாக புரிந்துகொண்டு, இந்திராணியை தனியாக அமரச்சொல்லி விட்டதற்காக  வருந்தி மன்னிப்பு கேட்டார். இருவருக்கும் சுவாமியை சந்திக்கும் வாய்ப்பு போய்விட்டது. என்று கூறி வருத்தப்பட்டார். சுவாமி திரும்பிவரும் வழியில் இருவருக்கும் பொன்னான வாய்ப்பு கிட்டியது. சுவாமி நேரே வந்து புரொபஸர் இந்திராணியை, கண்களுள் நன்றாக ஆழமாகப் பார்த்தார். இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார். இந்திராணி உடனே தனது மனபாரம் குறைந்து விட்டதை உணர்ந்தார். உடனே அவளது உடல் லேசாகி ஆனந்த அலை உள்ளே ஊடுருவதை உணர்ந்தார் இந்திராணி.

அவர் காய்ராகார்க் திரும்பிச் சென்றதும் அவசரக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு, நிறைய முக்கியமான விஷயங்கள் கலந்து பேசப்பட்டு தீர்க்கப்பட்டன. பிரச்சனையை ஏற்படுத்தியவர்கள் ஓரம்கட்டப்பட்டு விட்டார்கள். தீர்க்க முடியாது என்று கருதிய பிரச்சனைகள் இடைஞ்சலின்றி தீர்த்து வைக்கப்பட்டன! புரொபஸர் இந்திராணியின் பிரச்சினைகளைத் தீர்க்க, ஆழம் காண முடியாத ஒரு கருணை பார்வை போதுமானதாக இருந்தது.

ஆதாரம்: Indrani Chakravarti, Personal Narration 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக