பலர் தங்கள் துன்பங்கள் தீரவில்லை, இறைவன் நம்மிடம் கருணை காட்டவில்லை என்று குறைப்படுகிறார்கள். இத்தகையோர் இராமாயண நிகழ்ச்சியில் ஒன்றிலிருந்து பாடம் கற்கவேண்டும்....
இராமாயண நிகழ்வு:
விபீஷணன் அனுமனிடம் நட்புடன் பழகத்தொடங்கியபின் ஒரு முறை கேட்டான். ‘ஹனுமன், நீ ஒரு குரங்காக இருந்த போதிலும் கடவுளின் அருளுக்கு பாத்திரமாகிவிட்டாய். ஆனால், நான் இடைவிடாது இராமரைப்பற்றி சிந்தித்த போதிலும் எனக்கு ஏன் அவர் அருள் கிட்டவில்லை?’ அதற்கு அனுமன் அளித்த பதில், ‘விபீஷணா, நீ இடைவிடாது ராம நாமஸ்மரணம் செய்கிறாய் என்பது உண்மையே, ஆனால் நீ எந்த அளவிற்கு ராம சேவையில் ஈடுபட்டுள்ளாய்? நீ அவர் நாமத்தை தியானித்தால் மட்டும் அவர் அருளைப் பெற இயலாது. உன் சகோதரன் சீதாதேவியை கொண்டு வந்த போது, நீ அவளுக்கு செய்த உதவி என்ன? இராமரின் துயரைச் சிறிதளவேனும் துடைக்க ஏதேனும் செய்தாயா?’ என கேட்டார்.
🌹நாமம் சொன்னால் மட்டும் போதாது:
பக்தர்கள் ராம, ராம என்று உதட்டளவில் கூறுவதால் மட்டும் அவர் அருளைப்பெற இயலாது என்று உணரவேண்டும். நீங்கள் இராமர், கிருஷ்ணர், பாபா இவர்களின் ஆன்மிக போதனைகளை எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கிறீர்கள்? பகவத் கீதை கற்பிக்கும் பாடங்களை எந்த அளவிற்கு நடைமுறைப் படுத்துகிறீர்கள்? இக்கோட்பாடுகளைக் கடைப்பிடிக்காமல் எத்தனை முறை இறை நாமத்தை மீண்டும் மீண்டும் கூறினாலும் பயனில்லை. அது இசைத் தட்டை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு ஒப்பாகும். இறைவனின் நாமம் உங்கள் இதயத்தில் பதிக்கப்பட வேண்டும்.
🌹 இதயத்தில் இறைநாமம் கைகளில் இறை சேவை:
இறைவனின் நாமத்தை அன்புடன் ஸ்மரணம் செய்யும்போது, இறைவனின் கட்டளைகளை உங்கள் உடலால் நிறைவேற்றும்போது, இந்த உலகை இறைவனின் வெளிபாடாக காணும்போது, உங்களுக்கு இறைவனின் அருள் கிட்டுவது திண்ணம்!"
-பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, 08.01.1990
இந்த பேருரையை முழுமையாக படிக்க: http://www.sssbpt.info/ssspeaks/volume23/sss23-02.pdf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக