தலைப்பு

வியாழன், 27 பிப்ரவரி, 2020

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டாக்டர் P. ஜோதிமணி அவர்களின் சாயி அனுபவங்கள்!

Dr. Justice P. Jyothimani | Former Judge, Madras High Court &
Former Judicial Member, National Green Tribunal

அனைத்து ஆறு குளங்களையும் தூர்வார தமிழக அரசு உத்தரவிட வேண்டும், போரூர் ஏரியில் பொதுப்பணித்துறை மணல் அள்ள தடை, சாம்பல் கழிவுகளை அகற்றாவிட்டால் வடசென்னை அனல் மின் நிலையத்தை மூட உத்தர விடுவோம் என பல அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தவர் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டாக்டர் P. ஜோதிமணி ஆவார். கூடங்குளம் அணு உலை தொடர்பாக இவர் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பையே மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றமும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இவர் தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் தமிழ்நாடு கண்காணிப்புக் குழுத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

தான் இதுவரை எத்தனையோ இடங்கள் சென்றதாகவும் திருவண்ணாமலை மற்றும்  சபரிமலைக்கு பிறகு புட்டபர்த்தியில் மட்டுமே அந்த தெய்வீக அதிர்வலைகளை என்னால் உணர முடிந்தது என்றும்... தெய்வமே பூமிக்கு இறங்கி வந்த இறை அவதாரம் நம்முடைய சத்திய சாயி அவதாரம் என்றும்... மேலும் சத்ய சாயியை வணங்காமல் என்னுடைய நாளை தொடங்கியது இல்லை என்ற தன்னுடைய ஆத்மார்த்த அனுபவங்களை மனமுருக பகிர்ந்திருக்கிறார். கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.
👇👇


மொத்தம் இரண்டு பாகங்கள் (RST 264 & 265)
Source: ரேடியோ சாய்
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: ஜூன் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக