எதற்காக கண்விழித்து இன்றைய சிவராத்திரியில் பாபா நாமத்தையும் .. பஜனைப் பாடல்களையும் உச்சரிக்க வேண்டும் என்பதன் ரத்தினச் சுருக்க விளக்கமும்... சுவாமி நாமம் உச்சரிக்க உச்சரிக்க நம் கர்ம வினையை எச்சரிக்க எச்சரிக்க... நமது அக விழிப்பில் அதுவே கரைந்து விடும் எனும் சத்தியம் விளங்கும் இதோ...
இருள் சூழ்ந்த மற்ற இரவுகளைப் போலல்லாமல் சிவராத்திரி இரவு மட்டும், ப்ரக்ஞானம், விக்ஞானம், சுக்ஞானம் ஆகிய புனிதமான வெளிச்சத்தால் நிரம்பியது. ஆகையால், நாம் இந்த இரவு முழுவதும் தூய மனதுடனும், புனிதமான உணர்வுகளுடனும், இந்த உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற பிரார்த்தனையுடனும் கழிக்கவேண்டும். – சமஸ்த லோகா சுகினோ பவந்து
அனைத்துயிர்களும் புனிதமான இதயமும், புனித ஞானமும் பெற்றிருக்கவேண்டும் - தியோயோன : ப்ரசோதயாத்
இந்தப் புனித இரவில் நீங்கள் புனித இதயத்துடன் ப்ரார்த்தித்துக்கொண்டால், பாரதம் என்றென்றும் நித்ய மங்களத்துடனும், பிரபலமாகவும் பிரகாசிக்கட்டும் என்று பாரதீயர்களாகிய உங்களுக்காக நான் வாழ்த்துகிறேன். -நித்திய கல்யாணம் பச்ச தோரணம்
– ஸ்ரீ சத்ய சாய் பாபா மஹா சிவராத்திரி அருளுரை பிப்ரவரி 16, 1977
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக