தலைப்பு

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

தூரத்தை கடக்க தூயவனின் சங்கல்பம் போதும்!


ஒருமுறை கர்னல் ஜோகாராவ் நெஞ்சு வலி அதிகமாகி இதய நோயோ எனும் அளவிற்கு அவஸ்தை பட்டார். பெங்களூரில் ஒரு நல்ல மருத்துவமனையில் I.C.U.வில் சிகிச்சை நடந்தது. பாபா அப்போது பிரசாந்தி நிலையத்தில் இருந்தார். 

மத்யான தரிசனத்தின் போது அருகில் இருந்தவர்களிடம், "ஜோகாராவ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். நான் சென்று பார்க்க வேண்டும்" என்றார். உடனே வாசலில் கார் தயாராக நிறுத்தப்பட்டது. பாபா தன் அறைக்கு சென்று சிறிது நேரம் கழித்து வந்து, "நான் ஜோகாராவை பார்த்து விட்டேன். அவர் நலமாக உள்ளார்" என்றார். ஆனால் நான் அவரது படுக்கையிலேயே அமர்ந்தேன். எனக்கு ஒரு நாற்காலி கூட அங்கு இல்லை என்றார்.

கர்னலின் மாப்பிள்ளை பிற்பகல் ராவை சென்று பார்த்த பொழுது, ராவ் அவர்கள், பாபா வந்ததையும் ஆசீர்வதித்து சென்றதையும் கூறினார். பாபாவிற்கு உட்கார ஒரு நாற்காலி கூட இல்லை என்றார்.

சில நாட்கள் கழித்து ராவ் வேறு அறைக்கு மாற்றப்பட்டார். பாபா பெங்களூர் சென்று மீண்டும் ஆஸ்பத்திரியில் ராவை பார்த்தார். பகவானின் அன்பு கிடைக்கப்பெற்ற பக்தர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!

ஆதாரம்: SATHYAM SIVAM SUNDARAM VOL5, page:107

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக