தலைப்பு

புதன், 26 பிப்ரவரி, 2020

ஐயப்பா என்ற பக்தருக்கு பகவான் செய்த அறுவை சிகிச்சை!


பெங்களூருக்கு அருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஐயப்பன் என்பவர், தன் மனைவியுடன், அடிக்கடி புட்டபர்த்தி வருவது வழக்கம். அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 1946 ஆம் ஆண்டு, சுவாமியின் பிறந்த நாளுக்கு முந்தைய வாரம், பாபா எல்லா பக்தர்களையும் சித்திராவதி நதிக்கு கூட்டிச் சென்றார். இது வழக்கமாக நடைபெறுவது தான்.

அப்பொழுது ஐயப்ப்பாவும், அவரது மனைவியும் கூட வந்திருந்தனர். பாபா, "ஐயப்பா வயிற்றுவலி அதிகமாக இருக்கிறதா?" என்றார். ஐயப்பாவும், "ஆமாம் சுவாமி" என்றார். பாபா மணலில் இருந்து, ஏதோ ஒரு சிறு சதைத் துண்டு போல் ஒன்றையும், ஒரு கத்தியையும் எடுத்து, சிறிது வெட்டி, ஐயப்பாவை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார். பாபா என்ன செய்ய நினைக்கிறார் என்று, ஒருவருக்கும் புரியவில்லை.

மறுநாள் ஐயப்பாவும், அவரது மனைவியும், திரும்ப தங்கள் கிராமத்திற்கு செல்ல ஆயத்தம் ஆகினர். சுவாமியின் கால்களில் விழுந்தனர். அப்போது அருகிலிருந்த பட்டாபியிடம், ஐயப்பாவின் மேல் கோட்டையும், சட்டையையும் சுருட்டி, வானத்தை நோக்கி எறியுமாறு சைகை செய்தார். அங்கு உடனே ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெட்டியும், அறுவைச் சிகிச்சைக்கான கருவிகளும், பாபாவின் கைகளில் வந்துவிட்டன! அவர் சர்வசாதாரணமாக ஐயப்பாவின் வயிற்றைத் திறந்து, குடல் பகுதிகளை உருவி, சீழ் பிடித்திருந்த பகுதியை மட்டும் வெட்டி எடுத்து தூர எறிந்துவிட்டு, மீண்டும் குடலை உள்ளே தள்ளிவிட்டு, தன் கைகளின் அசைவுகளால் மூடிவிட்டார்! ஒரு 'பேண்டேஜ்' (Bandage) துணியை தானே வரவழைத்து வயிற்றைச் சுற்றி கட்டு போட்டு விட்டார். சென்று விட்டார். நோயாளி படுக்கையில் படுக்க வைக்கப்பட்டார். அவருக்கு சரியாகிவிட்டது. எவ்வளவு எளிமையாக, அன்பால், பாபா குணம் ஆக்கிவிட்டார், என்று கூற வார்த்தைகளால் இயலவில்லை!. இப்படி ஒரு கருணை வரத்தை, தன் மேல் பாபா பொழிவார் என்று ஐயப்பா நினைக்கவே இல்லை!

ஆதாரம்: R. பாலபட்டாபி - Nectraine Leelas of Bhagawan Sri Sathya Sai Baba, p 34

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக